Morning News Tamil : உக்ரைனை காப்பாற்றுமா உலக நாடுகள் ? - முக்கிய செய்திகள்

ரஷ்ய - உக்ரைன் போர் குறித்த தகவல்களையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய இதர முக்கிய செய்திகளையும் எளிமையாக இங்கு வாசிக்கலாம்.
Ukraine

Ukraine

Twitter

Published on

"போரை நிறுத்துங்கள்" - ரஷ்ய மக்கள் போராட்டம்

சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன், தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இது தங்களுக்கு அச்சுறுத்தல் என்று கூறி ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கி உள்ளது. முன்னதாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திர பகுதியாக ரஷ்யா அறிவித்தது.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்து வரும் நிலையில் தற்போது தாக்குதல் நடத்தத் தொடங்கி விட்டது. அங்குள்ள பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருவதாகவும், ரஷ்ய ராணுவத்திற்கு பொதுமக்கள் இலக்கு அல்ல என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்து வரும் நிலையில் தற்போது தாக்குதல் நடத்தத் தொடங்கி விட்டது. அங்குள்ள பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருவதாகவும், ரஷ்ய ராணுவத்திற்கு பொதுமக்கள் இலக்கு அல்ல என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உக்ரைன் மீது படையெடுப்பதை தவிர, ரஷ்யாவை காக்க வேறு வழியில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உக்ரைனை ஆக்கிரமிப்பதைத் தவிர ரஷ்யாவுக்கு வேறு வழியில்லை என்று கூறியுள்ளார். மேலும், உலக பொருளாதார அமைப்பை தகர்க்க ரஷ்யா விரும்பவில்லை எனவும் அதிபர் விளாடிமிர் புதின் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நூற்றுக்கணக்கான ரஷ்ய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நடத்துபவர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.

Ukraine

சோவியத் யூனியன் : உக்ரைன், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் - சிதறிய வல்லரசு நாட்டின் கதை

ஜோ பைடன்

ஜோ பைடன்

Twitter

ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு, அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டி: போரை தேர்ந்தெடுத்த ரஷ்யாவும், அந்நாட்டு அதிபர் புதினும் அதன் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும். ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. மேலும் அந்நாட்டு வங்கிகளான விடிபி., உள்ளிட்ட 4 வங்கிகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. ரஷ்யாவின் சைபர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. அவர் முன்னாள் சோவியத் யூனியனை மீண்டும் நிறுவ விரும்புகிறார். அவரது இந்த லட்சிய போக்கு, உலக நாடுகளுக்கு முற்றிலும் எதிரானது என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அமெரிக்காவின் பக்கம் உள்ளதா என நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ‛இதுகுறித்து இந்தியாவுடன் கலந்தாலோசித்து வருகிறோம்' என பைடன் பதிலளித்தார்.

Ukraine

விளாடிமிர் புதின் : உளவாளி, கொலைகாரர், பெரும் பணக்காரர் - யார் இந்த Putin?

மோடி மற்றும் புதின்

மோடி மற்றும் புதின்

Twitter

"எந்த பிரச்சனைக்கும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்" - புதினிடம் இந்திய பிரதமர் மோடி பேச்சு வார்த்தை

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.

ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, இந்தியா இதில் தலையிட்டு போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும், ரஷிய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி பேச வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் டாக்டர் இகோர் பாலிகா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரஷிய அதிபர் புதினை இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அப்போது, உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும் மற்றும் தற்போதைய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் விளக்கம் அளித்துள்ளார்.

Ukraine

உக்ரைன் ரசியா போர் : நம்மை எப்படி பாதிக்கும் ? | உக்ரைன் மினி தொடர் - பகுதி 1

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

Twitter

அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ராயபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அரைநிர்வாணப்படுத்தி தாக்கினர்.

இதற்கிடையே, தி.மு.க. பிரமுகரை தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து வரும் மார்ச் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகம் முழுவதும் வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆளும் திமுகவின் கையாளாகாத் தனத்தையும், திமுக அமைச்சர்களின் அராஜகத்தையும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகளையும் மக்களுக்கு தெளிவாக புரிகின்ற வகையில் விளக்கிக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்திருப்பதைக் கண்டிக்கிறோம்.

பிணையில் வரமுடியாக அளவிற்கு தொடர் வழக்குகளை அவர் மீது பதிய முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் வரும் 28-ம் தேதி காலை 10.30 மணியளவில் தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

Ukraine

'யாரு இந்த ஜாதி மதத்தை கண்டுபிடிச்சது ' - மனிதநேயம் பேசும் Viral சிறுவன் அப்துல் கலாம்

War

War

Twitter

உக்ரைனில் பொது மக்கள், இராணுவ வீரர்கள் உயிரிழப்பு, கட்டாய ராணுவ சேவை அமல்

ரஷ்ய வீரர்களின் தாக்குதலில் உக்ரைன் நாட்டு வீரர்கள் 100 பேர் பலியாகி உள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்திருந்தது.

உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்து வருகின்றனர் எனவும் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் வீரர்கள் சரணடைந்து வருவதாக ரஷியா தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் தாக்குதலில் ரஷியாவின் 50 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆயுதம் ஏந்த தயாராக இருப்பவர்கள் பிராந்திய பாதுகாப்பு படைகளில் சேரலாம் என உக்ரைனின் பாதுகாப்பு துறை மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் அந்நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஐரோப்பாவில் மீண்டும் போர் வந்ததற்கு ரஷ்ய அதிபர் புதின் தான் பொறுப்பு என ஐரோப்பிய ஆணையத் தலைவர் கூறியுள்ளார். மேலும் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைன் மக்களுடன் துணை நிற்கிறது எனவும் சுதந்திர நாட்டிற்கு எதிராக ரஷ்ய தலைமையின் முன்னோடியில்லாத ஆக்கிரமிப்புச் செயலை கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரஷியா ராணுவம் நடத்திய தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள், சுமார் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி அறிவித்துள்ளார். ரஷ்யா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்வதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி அறிவித்துள்ளார். மேலும் தற்போது 16 - 60 வயதான ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது. கீவ் நகரில் உள்ள மக்களுக்கு 10000 தானியங்கி துப்பாக்கிகள் விநியோகித்துள்ளதாகவும் அரசு தகவல்.

Ukraine

உக்ரைன் ரஷ்யா போர் - அங்கு வசிக்கும் இந்தியர்களின் நிலை என்ன?

Indian Team

Indian Team

Twitter

முதல் போட்டியில் இலங்கையை வென்றது இந்தியா!

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று லக்னோவில் நடந்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா, பீல்டிங் தேர்வு செய்தார். விண்டீஸ் தொடரில் கடைசி போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டன.

சாம்சன், ஜடேஜா, பும்ரா, புவனேஷ்வர் குமார், சகால் அணிக்கு திரும்பினர். தீபக் ஹூடா 'டி-20' போட்டியில் அறிமுக வாய்ப்பு பெற்றார். இந்திய அணிக்கு ரோகித் சர்மா, இஷான் கிஷான் ஜோடி துவக்கம் கொடுத்தது. இஷான் 30வது பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 11.4 ஓவரில் 111 ரன் சேர்த்த போது, ரோகித் (44) அவுட்டானார். இஷான் 89 ரன் எடுத்த போது, ஷனகா பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்ட இஷான், லியானாகேவிடம் 'கேட்ச்' கொடுத்து வெளியேறினார்.

ஸ்ரேயாஸ் 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 199 ரன் குவித்தது. ஸ்ரேயாஸ் (57), ஜடேஜா (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கைத் துரத்திய இலங்கை அணிக்கு, புவனேஷ்வர் 'வில்லனாக' அமைந்தார். முதல் பந்தில் நிசங்காவை (0) போல்டாக்கிய இவர், மிஷராவையும் (13) வெளியேற்றினார். ஜடேஜா 'சுழலில்' சண்டிமால் (10) சிக்க, ஷனகாவை (3) சகால் அவுட்டாக்கினார். கருணாரத்னே 21 ரன் எடுத்தார். மறுபக்கம் அசலங்கா, சர்வதேச 'டி-20' அரங்கில் 3வது அரைசதம் அடித்தார்.

இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 137 ரன் மட்டும் எடுத்தது. அசலங்கா (53), சமீரா (24) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் புவனேஷ்வர் 2, வெங்கடேஷ் 2 விக்கெட் சாய்த்தனர். இந்திய அணி 62 ரன்னில் இமாலய வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

Ukraine

Valimai Film Review : மூன்று வருட காத்திருப்பை நிறைவு செய்ததா வலிமை?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com