இந்தியா டு ஸ்பெயின்: இன்றும் சிதையாமல் இருக்கும் 18 கோட்டைகள்- மயக்கும் புகைப்படங்கள்!
இந்தியா டு ஸ்பெயின்: இன்றும் சிதையாமல் இருக்கும் 18 கோட்டைகள்- மயக்கும் புகைப்படங்கள்!Twitter

இந்தியா டு ஸ்பெயின்: இன்றும் சிதையாமல் இருக்கும் 18 கோட்டைகள்- மயக்கும் புகைப்படங்கள்!

மன்னர்கள் வாழ்ந்த இந்த கோட்டைகள் இன்றும் அரசர் காலத்தின் சாட்சிகளாக நிற்கின்றன. இவற்றின் பிரம்மாண்டம் வரலாற்றின் ஆழத்தைப் பேசுகின்றன.
Published on

மன்னர்கள் வசித்தக் கோட்டைகளைச் சென்று பார்வையிடுவது நம் அனைவருக்குமே பிடித்தமானதாக இருக்கும். அப்போது நம் வரலாற்றை நம்மால் உணரமுடியும்.

உலகம் முழுவதும் உள்ள பிரபலமான இன்றும் இருக்கக்கூடிய கோட்டைகளைக் காணலாம்.

அம்பர் கோட்டை, இந்தியா

ராஜஸ்தானில் இந்தக் கோட்டை அமைந்திருக்கிறது. ராஜ்புத் கட்டடகலைக்கு மிகச் சிறந்த உதாரணமாக இதனைக் கூறலாம். இதன் அற்புதமான வடிவத்தைப் பெற சிகப்பு கற்கள், மார்பிளைப் பயன்படுத்தியுள்ளனர். 

பால்மோரல் கோட்டை, ஸ்காட்லாண்ட்

காத்ரின் கிராமத்தில் உள்ள இந்தக் கோட்டை பிரிட்டிஷ் அரசகுடும்பத்தினரால் பயன்படுத்தப்பட்டது. இங்கு முதலில் இருந்த ஒரிஜினல் கோட்டை தரைமட்டமானது. 

இப்போது இங்கு இருக்கும் கோட்டையானது 1856ல் கட்டப்பட்டது.

ப்ரன் கோட்டை, ரோமானியா

ட்ரான்சில்வானியவில் இருக்கும் இந்த கோட்டை மிகவும் அழகானது. இதற்கு டிராகுலா கோட்டை என்ற பெயரும் இருப்பதனால் மிகவும் ஃபேமஸானது. காவல் கோட்டையாக கட்டப்பட்ட இதில் அரச குடும்பத்தினரும் வாழ்ந்திருக்கின்றனர். 

கேஸ்டிலியோ டி மிராமர், இத்தாலி

மிகவும் பிரம்மாண்டமாகவும் அழகாகவும் உள்ள இந்தக் கோட்டை 19ம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது. ஆஸ்திரிய கட்டடக்கலை வல்லுனரான கார்ல் ஜுன்கர் என்பவர் தான் இதனை வடிவமைத்தது.


சாட்டு டி சாம்போர்ட், பிரான்ஸ் ( Château De Chambord )

மிகவும் பிரபலமான பண்ணை வீடாகும் (அரசர்கள் இல்லாத அரண்மனை). இதனை நேரில் பார்ப்பவர்கள் வியந்துப் போவது உறுதி. பிரஞ்சு கட்டடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டு இந்த வீடு.

சாட்டு டி செனொன்செயு, பிரான்ஸ் (Château De Chenonceau)

இது ஒரு பிரஞ்சு அரண்மனை. செர் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. தனித்துவமான பிரஞ்சு கட்டடலையின் எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்று. 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனையில் ஒரு மியூசியமும் உள்ளது.

சாட்டு டி சில்லோன், சுவிட்சர்லாந்து
சாட்டு டி சில்லோன், சுவிட்சர்லாந்து

சாட்டு டி சில்லோன், சுவிட்சர்லாந்து 

ஒரு தீவில் உள்ள ஏரிக்கு அருகில் இந்த கோட்டை உள்ளது. இதனைப் பார்க்கும் போது பெரும்மூச்சு விடுமளவு பிரம்மாண்டமானதாக இருக்கும். 

கோர்வின் கோட்டை, ரோமானியா
கோர்வின் கோட்டை, ரோமானியா

கோர்வின் கோட்டை, ரோமானியா

ஐரோப்பியாவில் உள்ள பெரியக் கோட்டைகளில் இதுவும் ஒன்று. ரோமானியாவில் உள்ள 7 அதிசயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதனை நேரில் பார்த்த அனைவருக்கும் இதனை வர்ணிக்க அதிசயம் என்பதைத் தவிர வேறு வார்த்தைத் தோன்றாது.

ஃப்ரெட்டிக்ஸ்போர்க் கோட்டை, டென்மார்க்
ஃப்ரெட்டிக்ஸ்போர்க் கோட்டை, டென்மார்க்

ஃப்ரெட்டிக்ஸ்போர்க் கோட்டை, டென்மார்க்

இது ஒருகோட்டைகளின் தொகுதி. பார்க்கும் போதே நம்மை மயக்கிவிடும் அழகு இந்தக் கோட்டைக்கு. சுற்றிலும் ஏரி சூழ்ந்திருக்கும் இந்த கோட்டைகள் மூன்று தீவுகளில் அமைந்திருக்கிறது. 

கிராண்ட் அரண்மனை, தாய்லாந்து
கிராண்ட் அரண்மனை, தாய்லாந்து

கிராண்ட் அரண்மனை, தாய்லாந்து

சியாம் அரச வம்சத்தின் அரண்மனையாக 1782ல் இருந்து செயல்படும் இதில் பல கட்டடங்கள் இருக்கின்றன. 23 லட்சம் சதுர அடி அளவில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது.

மட்சுமோடோ கோட்டை, ஜப்பான்
மட்சுமோடோ கோட்டை, ஜப்பான்

மட்சுமோடோ கோட்டை, ஜப்பான்

இதனை ஃபுகாஷி கோட்டை என்றும் Crow Castle என்றும் அழைப்பார். ஜப்பானில் மிகவும் பிரபலமான கோட்டை இதுவாகும். இது 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

நியூஸ்ச்வான்ஸ்டைன் கோட்டை, ஜெர்மனி
நியூஸ்ச்வான்ஸ்டைன் கோட்டை, ஜெர்மனி

நியூஸ்ச்வான்ஸ்டைன் கோட்டை, ஜெர்மனி

ஹொஹென்ஸ்ச்வாங்கௌ என்ற கிராமத்தில் உள்ள மலை உச்சியில் இந்த கோட்டை அமைந்திருக்கிறது. இது மிகப்பிரபலமான சுற்றுலாத்தலமாக இருக்கிறது. வருடத்துக்கு 13லட்சம் மக்கள் இங்கு வருகின்றனர்.

பிலெஸ் கோட்டை, ரோமானியா
பிலெஸ் கோட்டை, ரோமானியா

பிலெஸ் கோட்டை, ரோமானியா

இது ரோமானியாவின் முதல் அரசரால் கட்டப்பட்டது. இதுவும் கார்பதியான் மலையின் மேல் அமைந்திருக்கிறது. 

பெனா தேசிய அரண்மனை, ஸ்பெயின்
பெனா தேசிய அரண்மனை, ஸ்பெயின்

பெனா தேசிய அரண்மனை, ஸ்பெயின்

இது போர்ச்சுகலில் உள்ள 7 அரண்மனைகளில் ஒன்றாகும். போர்ச்சுகலில் உள்ள ரோமானியா அரண்மனை. சிண்டாரா மலையின் மேலே அமைந்திருக்கிறது. இதனால் லிஸ்போன் நகரில் இருந்து பார்த்தாலும் கூட இந்தக் கோட்டைத் தெரியும். 

பொடாலா அரண்மனை, திபெத்
பொடாலா அரண்மனை, திபெத்

பொடாலா அரண்மனை, திபெத்

இது தலாய்லாமாவின் குளிர்கால அரண்மனையாக இருக்கிறது. 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதன் உச்சியில் இருந்தால் இதுதான் உலகின் உச்சி போன்ற உணர்வைக் கொடுத்துவிடும். 

இந்தியா டு ஸ்பெயின்: இன்றும் சிதையாமல் இருக்கும் 18 கோட்டைகள்- மயக்கும் புகைப்படங்கள்!
மறைக்கப்பட்ட அரண்மனை : மழை காலத்தில் நீங்கள் நிச்சயம் போக வேண்டிய இடங்களில் ஒன்று இது
உமைத் பாவன் அரண்மனை, இந்தியா
உமைத் பாவன் அரண்மனை, இந்தியா

உமைத் பாவன் அரண்மனை, இந்தியா

உமைத் பாவன் இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் அமைந்துள்ள ஒரு அரண்மனை. இது 347 அறைகளை கொண்டு உள்ளது. 

உமைத் சிங் என்ற அரசரால் கட்டப்பட்ட இந்த அரண்மனை ஜோத்பூரின் முன்னாள் அரச குடும்ப இல்லம் ஆகும். இப்போது உலகின் பெரிய தனியார் தங்குமிடமாக இருக்கிறது.

இஸ்டனா நுருல், புருனே

இஸ்டனா நுருல், புருனே

புருனே சுல்தானின் அதிகாரப்பூர்வ வீடாகும். புருனேவில் மன்னராட்சி தான் என்பதனால் இன்றும் மன்னர் வாழும் அரண்மனையாகத் திகழ்கிறது.

ராயல் அரண்மனை, கம்போடியா
ராயல் அரண்மனை, கம்போடியா

ராயல் அரண்மனை, கம்போடியா

கம்போடியா மன்னரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். 19ம் நூற்றாண்டில் தான் இது கட்டப்பட்டது. சமீபத்தில் கட்டப்பட்ட அரண்மனையாக இதனைக் கருதலாம்.

இந்தியா டு ஸ்பெயின்: இன்றும் சிதையாமல் இருக்கும் 18 கோட்டைகள்- மயக்கும் புகைப்படங்கள்!
Gujarat: படிக்கிணறு முதல் கண்ணாடி அரண்மனை வரை- 5 கண்கவர் Travel Destinations!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com