மறைக்கப்பட்ட அரண்மனை : மழை காலத்தில் நீங்கள் நிச்சயம் போக வேண்டிய இடங்களில் ஒன்று இது

'ஓர்ச்சா' என்ற வார்த்தைக்கு 'மறைக்கப்பட்ட அரண்மனை' என்று பொருளாகும். இந்த கம்பீரமான நகரம் அதன் பெயருக்கு ஏற்றாற்போல பல மறைக்கப்பட்ட அரண்மனைகளை தன்னகத்தே கொண்டு நிற்கிறது.
Wildlife Sanctuary Orchha
Wildlife Sanctuary OrchhaCanva
Published on

மத்தியப் பிரதேசம் ஒரு அற்புதமான சுற்றுலாத் தலமாகும். வசீகரிக்கும் புராதன நினைவுச்சின்னங்கள், கோவில்கள், அரண்மனைகள், வளைந்து செல்லும் ஆற்றின் பின்னணியில் அமைந்துள்ள அதன் இயற்கையின் கொடைகளைப் பெற்ற ஒரு நகரமாகும்.

மத்திய இந்தியாவில் பெட்வா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் ஓர்ச்சா, ஒரு வினோதமான நகரமாகும். 16 ஆம் நூற்றாண்டில் பண்டேலா மகாராஜா, ருத்ர பிரதாப் சிங் ஆகியோரால் நிறுவப்பட்டது.

கண்கவர் கல்லறைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள், பிரம்மாண்டமான அரண்மனைகள் மற்றும் அபாரமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கோவில்கள் போன்ற காண்பதற்கரிய ஏராளமான கட்டிடக்கலை பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

'ஓர்ச்சா' என்ற வார்த்தைக்கு 'மறைக்கப்பட்ட அரண்மனை' என்று பொருளாகும். இந்த கம்பீரமான நகரம் அதன் பெயருக்கு ஏற்றாற்போல பல மறைக்கப்பட்ட அரண்மனைகளை தன்னகத்தே கொண்டு நிற்கிறது.

பழமையான உலக நகரமாக இருந்தாலும், இந்த இடத்தின் பிரமாண்டமான வரலாறு மற்றும் நினைவுச்சின்னங்கள் இந்தியா முழுவதிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் என்பது நிச்சயம்.

ஓர்ச்சா – கோட்டை

பெட்வா ஆற்றில் அமைந்துள்ள கம்பீரமான ’ஓர்ச்சா கோட்டை’ ஓர்ச்சாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும்.

இந்த கோட்டையின் உள்ளே பல சிறு அரண்மனைகள், கோயில்கள் மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்கள் போன்றவை அமைந்திருக்கின்றன. கோட்டையின் வளாகத்திற்குச் செல்லும் வழியில் ’நான்கு வளைவு பாலம்’ உள்ளது.

ஜஹாங்கீர் மஹால், ராஜ் மஹால் மற்றும் புகழ்பெற்ற ராய் பிரவீன் மஹால் ஆகிய மூன்று முக்கிய அரண்மனைகள் அரச வரலாற்றின் கம்பீரத்தையும், பெருமையையும் உங்களை உணரச் செய்கின்றன.

ராஜா ராம் கோவில்

ஒருகாலத்தில் அரண்மனையாக இருந்த இந்த அற்புதமான கோயில் ஓர்ச்சாவில் பார்க்க வேண்டிய சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுக் கதை உள்ளது. இந்த கோவிலில் மட்டும்தான் ராமர், மன்னர் ராமராக வணங்கப்படும் ஒரே கோவிலாகும். இந்த இடம் மத வழிபாட்டாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அடையாளமாக உள்ளது.

லக்‌ஷ்மி நாரயணன் கோவில்

ஓர்ச்சாவில் உள்ள மூன்று முக்கியமான கோவில்களில் ஒன்றான இது லட்சுமி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது, பிரமிக்க வைக்கும் சுவர் ஓவியங்கள் மற்றும் தனித்துவமான கட்டிடக்கலை அடங்கிய கலவையான அழகியலைக் கொண்டுள்ளது.

அவை யாவும் அந்தக் காலத்தின் நிபுணத்துவத்தை நினைவூட்டும் சிறந்த கலைப் படைப்புகளாகும். இந்த கோவிலில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், செல்வத்தின் கடவுளான லக்ஷ்மிக்கு அர்ப்பணிக்கப்பட்ட போதிலும், தேவியின் சிலை எதுவும் உள்ளே வைக்கப்படவில்லை.

ஓர்ச்சா வனவிலங்கு சரணாலயம்

இந்த இயற்கை எழில் கொஞ்சும் சரணாலயம் பெட்வா மற்றும் ஜம்னி ஆறுகள் பாயும் பகுதியை உள்ளடக்கியது. 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த சரணாலயம் புள்ளிமான்கள், நீல காளைகள், குரங்குகள், சிறுத்தைகள், மயில்கள் மற்றும் நரிகள் போன்ற விலங்குகளுக்கும் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் காணக்கூடிய பல உயிரினங்களுக்கும் இருப்பிடமாக உள்ளது.

200 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கு காணப்படுகின்றன. தவா மற்றும் கர்தாய் மரங்களின் சில அடர்ந்த தோட்டங்கள் உள்ளன. மீன்பிடித்தல், படகோட்டம், மலையேற்றம் மற்றும் முகாமிடுதல் போன்ற உங்கள் சாகச விளையாட்டுகளை முயற்சிக்க இது சரியான இடமாகும். மேலும் இது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு சொர்க்கமாக விளங்குகிறது.

பூல் பாக்

இந்த அழகான தோட்ட வளாகம் பண்டேலாக்களின் காலத்திலிருந்த அலங்கார கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது. சுற்றிலும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட நீரூற்றுகள் மற்றும் பெவிலியன்களைக் கொண்டு பாரவையாளர்களை வசீகரிக்கிறது.

இந்த தோட்டம் ஓர்ச்சாவின் முன்னாள் மன்னர்களுக்கு கோடைக்கால ஓய்வு இடமாக இருந்து வந்துள்ளது. இது, ஓர்ச்சாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. காணுமிடம் எங்கிலும் பசுமையான காட்சிகளால் நிறைந்துள்ள இங்கு நிதானமாக உலாவுவது, நகரத்தின் பழமையான உணர்வைத் தொடர்புகொள்வதற்கான பல வழிகளில் ஒன்றாகும்.

Wildlife Sanctuary Orchha
Travel : இயற்கை எழில் கொஞ்சும் தமிழகத்தின் 5 சுற்றுலா தலங்கள் - இவற்றைத் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com