Piaget to Patek Philippe : உலகிலேயே விலையுயர்ந்த 5 வாட்ச் நிறுவனங்கள் - சுவாரஸ்ய தகவல்கள்

2014ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் ஒரு கடிகாரம் 24 மில்லியன் டாலர்களுக்கு விலை போயிருக்கிறது. அப்போதைய இந்திய மதிப்பில் ஏறத்தாழ 149 கோடி.
Piaget to Patek Philippe : உலகிலேயே விலை உயர்ந்த 5 வாட்ச் நிறுவனங்கள் - சுவாரஸ்ய தகவல்கள்
Piaget to Patek Philippe : உலகிலேயே விலை உயர்ந்த 5 வாட்ச் நிறுவனங்கள் - சுவாரஸ்ய தகவல்கள்Twitter

சமீப நாட்களில் இணையத்தில் வாட்ச் குறித்த உரையாடல்கள் அதிகரித்திருக்கின்றன.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரபேல் வாட்ச் தான் இந்த திடீர் ட்ரெண்டுக்கு காரணம்.

அது குறித்து விரிவாக படிக்க,

Rafale Watch : அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்சுக்குப் பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?

இதனைப் பின்பற்றி அரசியல்வாதிகள் சண்டையிட்டுக்கொண்டிருக்க நெட்டிசன்களோ தங்களது வாட்சின் கதைகளை எடுத்துவிடத் தொடங்கிவிட்டனர்.

விலை அதிகமான வாட்ச் கட்டியிருப்பது யார்? யார் நல்ல பிராண்டைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்ற கேள்விகளுடன் காரசார விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அப்படி உலகிலேயே சிறந்த வாட்ச் இது தான் என்று எதையாவது கூறிவிட முடியுமா? ஆனால் விலையுயர்ந்த வாட்ச் நிறுவனங்களை நம்மால் கூற முடியும்.

5 . Piaget

இந்த நிறுவனம் சுவிட்சர்லாந்தில் உள்ள  La Cote-aux-Fees என்ற சிறிய கிராமத்தில் நகை உற்பத்தியாளரால் தொடங்கப்பட்டது.

இந்த நிறுவனம் 1874ல் ஆரம்பிக்கப்பட்டாலும் 20ம் நூற்றாண்டில் தான் இந்த நிறுவனம் வாட்ச் தயாரிப்பைத் தொடங்கியது.

இந்த நிறுவனத்தின் வாட்ச்கள் 8 லட்சம் முதல் 18 லட்சம் வரை விலைமதிப்புடையவை.

4. Roger Dubuis

க்ளாரஸ் டயாஸ் மற்றும் ரோஜர் டுபிஸ் ஆகிய இருவர் இணைந்து நிறுவிய இந்த நிறுவனம், இந்த பட்டியலில் மிக அரிதாக இடம் பெற்றிருக்கிறது.

ஏனெனில் இது தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளே ஆகின்றன.

Age is just a number என்பதற்கு இணங்க இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் தரம் மிகுந்தவையாக சந்தையில் வெற்றி நடை போடுகின்றன.

இந்த நிறுவனத்தின் வாட்ச்கள் 9 லட்சம் முதல் 1.2 கோடி வரை விலைமதிப்புடையவை.

சில ஸ்பெஷல் எடிசன் வாட்ச்கள் இன்னும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

உதாரணமாக 88 வாட்ச்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட The Millesime Double Flying Tourbillon சுமார் 2.2 கோடி மதிப்புடையது.

10 கோடி மதிப்புள்ள ஸ்பெஷல் எடிசன் வாட்ச்களை கூட இந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது.

3. Patek Philippe

சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில் இருக்கிறது இந்த பிராண்ட்.

படெக் பிலிப்பே கடிகாரத்தைக் கட்டிருப்பது பெருமையான ஒன்றாக கருதப்படுகிறது.

ஏனெனில் இந்த நிறுவனம் தான் இங்கிலாந்தில் விக்டோரியா மகாராணிக்கு வாட்ச்கள் செய்துகொடுத்திருக்கிறது.

இந்த நிறுவனத்தின் குறைந்தபட்ச விலையே 8 லட்சம் முதல் 6 கோடி வரை இருக்குமாம்.

2014ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் ஒரு கடிகாரம் 24 மில்லியன் டாலர்களுக்கு விலை போயிருக்கிறது. அப்போதைய இந்திய மதிப்பில் ஏறத்தாழ 149 கோடி.

2. Vacheron Constantin

Patek Philippe, Piguet வரிசையில் பாரம்பரியமான வாட்ச் தயாரிப்பு நிறுவனம் Vacheron Constantin.

நெப்போலியன் போனபெட் முதல் போப் பதினோறாம் பியஸ் வரை பல செல்வாக்கு மிகுந்தவர்களுக்கு இந்த நிறுவனம் வாட்ச் தயாரித்து கொடுத்துள்ளது.

1. A. Lange & Sohne

1845ல் நிறுவப்பட்ட இது ஒரு பாரம்பரிய நிறுவனமாகும்.

வாட்ச் தயாரிப்புக்கு பெயர் பெற்ற நாடாக சுவிட்சர்லாந்து இருந்தாலும் முதலிடத்தில் இருக்கும் இந்த நிறுவனம் ஜெர்மனியைச் சேர்ந்தது.

1948ம் ஆண்டு இந்த நிறுவனம் முடக்கப்பட்டது. மீண்டும் 1990ம் ஆண்டு உருவானது.

இவர்களின் முதல் கைகடிகாரம் 1994ம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது.

சாதாரணமாக இந்த நிறுவன வாட்ச்களின் விலை 11 லட்சம் முதல் 4 கோடி ரூபாய் வரை இருக்கும்.

சில வாட்ச்கள் 20 கோடிக்கு கூட விற்பனை ஆகின்றன.

Piaget to Patek Philippe : உலகிலேயே விலை உயர்ந்த 5 வாட்ச் நிறுவனங்கள் - சுவாரஸ்ய தகவல்கள்
விக்ரம் : டிரண்டாகும் Rolex - கமல் சூர்யாவுக்கு பரிசளித்த இந்த வாட்ச்சில் என்ன ஸ்பெஷல்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com