பேன் தொற்றால் உயிரிழந்த சிறுமி : தாய் மீது வழக்குப் பதிவு - நடந்தது என்ன?

போலீசார் சிறுமியின் தாயிடம் விசாரணை மேற்கொண்டதில், சிறுமிக்கு நோய்த்தொற்று அதிகமாகி அவரை கண்டு கொள்ளாததும், அவரது தோழனுடன் வேறு இடத்தில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
பேன் தொற்றால் உயிரிழந்த சிறுமி : தாய் மீது வழக்குப் பதிவு - நடந்தது என்ன?
பேன் தொற்றால் உயிரிழந்த சிறுமி : தாய் மீது வழக்குப் பதிவு - நடந்தது என்ன?N.R.
Published on

பேன் தொற்றால் 9 வயது சிறுமி உயிரிழந்ததை அடுத்து அவரது தாயார் மற்றும் பாட்டியைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் டுக்சன் பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமிக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி அவர் பிறவியிலிருந்து இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது, தாயார் சான்ட்ரா மற்றும் பாட்டி எலிசபெத்திடம் பலமுறை இது குறித்து சிறுமி கூறியுள்ளார்.

ஆனால் சிறுமியின் தாயார் மற்றும் பாட்டி சிறுமி அவதிப்படும் இன்னல்கள் குறித்துக் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

investigation
investigationTwitter

சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே வைத்துள்ளனர்.

சிறுமியின் நிலை படுமோசமாக மாறத் தொடங்கி, பேன் தொல்லையால் தலையின் சில பகுதிகளில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு, அது தொற்றாக மாறி முகத்திலும் பரவி விட்டது.

இதனால் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து. சமீபத்தில் அவர் ரத்த வாந்தி எடுத்து வயிற்றுப் போக்கால் வீட்டிலேயே காலமாகி உள்ளார்.

பேன் தொற்றால் உயிரிழந்த சிறுமி : தாய் மீது வழக்குப் பதிவு - நடந்தது என்ன?
கணவரின் மறுபிறவி என நம்பி நாகப்பாம்புடன் 4 நாட்கள் வாழ்ந்த பெண்மணி
Sandra , Elizabeth
Sandra , Elizabeth Twitter

இதனையடுத்து போலீசார் சிறுமியின் தாயிடம் விசாரணை மேற்கொண்டதில், சிறுமிக்கு நோய்த்தொற்று அதிகமாகி அவரை கண்டு கொள்ளாததும், சான்ட்ரா அவரது பாய் பிரண்டுடன் வேறு இடத்தில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

சிறுமி நிலை அறிந்தும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாததால் தாய் மற்றும் அவரது பாட்டி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேன் தொற்றால் உயிரிழந்த சிறுமி : தாய் மீது வழக்குப் பதிவு - நடந்தது என்ன?
LCU : லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என்பது என்ன? அங்கு என்னென்ன நடக்கும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com