சிலியில் உள்ள ஒரு சுரங்கப் பகுதியில், திடீரென்று சுமார் 25 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு புதைகுழி தோன்றியது. இது அதிகாரிகளை அச்சத்தில் ஆழ்த்தியது.
சுரங்க அதிகாரிகளின் தகவலின்படி, சிலி தலைநகர் சாண்டியாகோவிற்கு அருகில் உள்ள லுண்டின் மைனிங் என்ற கனடாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சுரங்கம் உள்ளது. இங்கு, வார இறுதியில் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பிய பிறகு, அவர்கள் ஒரு பெரிய துளையைக் கண்டனர். எப்போதும் போல் இல்லாமல், திடீரென்று தானாக தோன்றிய இந்த குழி, அவர்களுக்கு வித்தியாசமாகத் தெரிந்திருக்கிறது.
இதனையடுத்து அதிகாரிகள், ’தேசிய புவியியல் மற்றும் சுரங்க சேவை’ அமைப்பிற்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். தற்போது, அந்த இடத்தை, அந்த துறை தொடர்புடைய அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக ஊடகங்களைச் சந்தித்த ஏஜென்சி இயக்குனர் டேவிட் மாண்டினீக்ரோ, "அந்த துளை கணிசமான தூரத்திற்கு ஆழமாக உள்ளது. தோராயமாக 200 மீட்டர் (656 அடி) இருக்கலாம் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில்,"நாங்கள் அங்கு எந்தப் பொருளையும் கண்டறியவில்லை. ஆனால் நிறையத் தண்ணீர் இருப்பதை நாங்கள் கண்டோம்" என்று அவர் கூறினார்.
”மேலதிக விசாரணைக்காக அந்த தளம் தற்போது மூடப்பட்டுள்ளது. நல்லவேளையாக அங்கிருந்த தொழிலாளர்கள் யாரும் அந்த துளையால் பாதிக்கப்படவில்லை” என்றும் அவர் கூறினார்.
குழி கண்டறியப்பட்டவுடன், சுரங்க அதிகாரிகள் அந்த பகுதியை உடனடியாக தனிமைப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கும் உடனே தகவல் தெரிவித்திருக்கிறார்கள். எனவே, பணியாளர்கள், உபகரணங்கள் அல்லது உள்கட்டமைப்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
துளை ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தான் குடியிருப்பு பகுதிகள் இருக்கிறது. எனவே, அங்கு இருப்பவர்களையும் பாதுகாப்பு காரணமாக எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
இருப்பினும், சுரங்க நிர்வாகத்தின் தரப்பிலிருந்து எந்த முழுமையான விளக்கமும் இதுவரை கிடைக்காத காரணத்தால், குடியிருப்பு பகுதிகளில் பல விதமான வதந்திகள் பரவத் தொடங்கி இருக்கின்றன. எனவே, அடுத்த அறிவிப்பு வரும் வரை அந்த தளத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust