கடலில் மூழ்கிய போர்கப்பல் : 300 ஆண்டுகளுக்கு பிறகு விலகிய மர்மம் - ஒரு Adventure ஸ்டோரி

ஹிஸ்டாரிக் இங்கிலாந்து, தி கல்ச்சுரல் ஹெரிடேஜ் ஏஜென்சி ஆஃப் நெதர்லாந்து, தி நாடிகல் ஆர்கியாலஜி சொசைட்டி ஆகிய அமைப்புகள், கடந்த ஓராண்டாக இந்தக் கப்பலின் அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Mystery of 17th-century warship wreck off UK coast is solved by scientists
Mystery of 17th-century warship wreck off UK coast is solved by scientistsTwitter
Published on

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சுப் போர்க்கப்பல், சில நூற்றாண்டுக்கு முன், இங்கிலாந்தின் கடற்கரையோரத்தில் உடைந்து நீரில் மூழ்கியது. அதன் அடையாளம் தொடர்பான விவரங்கள் நீண்ட நாட்களாக தெரியாமல் இருந்தது. சமீபத்தில் இத்தாலிய பளிங்குக் கற்களை எடுத்துச் செல்லும் போது சிதைந்த கப்பலின் அடையாளம் தொடர்பான மர்மத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கப்பல் 1672 இல் மூழ்கியது, ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டில் சசெக்ஸ் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது, சமீபத்திய காலம் வரை இந்தக் கப்பல் சிதைவை "Unknown Wreck off Eastbourne" என்றே அழைத்து வந்தனர்.

இப்போது, இந்த டச்சுப் போர்க்கப்பல் க்ளீன் ஹாலண்டியா (Klein Hollandia) என விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளதாக ஸ்கை நியூஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1656ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட இந்தக் கப்பல், ரோட்டர்டாமின் அட்மிரால்டிக்கு சொந்தமானதாக இருந்தது. இந்த கப்பல் இரண்டாவது ஆங்கிலோ - டச்சுப் போரில் 1665 முதல் 1667 வரையான பல சண்டைகளில் ஈடுபட்டது.

ஹிஸ்டாரிக் இங்கிலாந்து, தி கல்ச்சுரல் ஹெரிடேஜ் ஏஜென்சி ஆஃப் நெதர்லாந்து, தி நாடிகல் ஆர்கியாலஜி சொசைட்டி ஆகிய அமைப்புகள், கடந்த ஓராண்டாக இந்தக் கப்பலின் அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், இதற்காக சிதைந்த கப்பலில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களையும், காப்பக ஆராய்ச்சி விவரங்களையும் பயன்படுத்தினர்.

இந்தக் கப்பலின் இடிபாடுகளின் நிலை மிகவும் முக்கியமானது. அது 17ஆம் நூற்றாண்டில் டச்சுக் கப்பல்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டன மற்றும் அதன் இறுதி பயணத்தின் போது போர்க்கப்பலின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை வழங்கக் கூடுமென நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாரம்பரிய அமைச்சர் லார்ட் பார்கின்சன், இந்தக் கண்டுபிடிப்புகள் 17 ஆம் நூற்றாண்டு எப்படி இருந்திருக்கும் என்கிற பார்வையை அளிக்கிறது, அதோடு அந்த காலகட்டத்தில் மனிதர்களுக்கும் கடலுக்கும் இருந்த தொடர்பு மற்றும் கடலில் மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகள் தொடர்பான வரலாற்றைப் பற்றி மேலும் அறியவும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நீருக்கடியில் இருக்கும் பொக்கிஷங்களை வெளிக்கொணரவும் நமக்கு வாய்ப்பளிக்கிறது" என்றார்.

Mystery of 17th-century warship wreck off UK coast is solved by scientists
உலகிலேயே மிக நீளமான ஆற்றுக் கப்பல் : இந்தியாவில் அறிமுகம் - என்னென்ன சிறப்பம்சங்கள்?

க்ளீன் ஹாலண்டியா (Klein Hollandia) கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அதே ஆண்டில் சிதைவுகள் பாதுகாப்புச் சட்டம் 1973-ன் கீழ் அதற்கு மிக அதிக அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட்டது.

மரத்தாலான கப்பலின் பெரும்பகுதி, பீரங்கிகள், இத்தாலிய பளிங்கு ஓடுகள், இத்தாலிய மண் பாண்டத் துண்டுகள் ஆகியவை கடற்பரப்பில் காணப்பட்ட பொருட்களில் அடங்கும்.

பளிங்கு ஓடுகள் இத்தாலியில் கராராவிற்கு அருகில் உள்ள அபுவான் ஆல்ப்ஸ் குவாரிகளில் இருந்து வந்தவை. ஓடுகள் நெதர்லாந்திலிருந்து வந்திருக்கலாம், அது சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருந்தவர்களின் வீடுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Mystery of 17th-century warship wreck off UK coast is solved by scientists
இலங்கை - சீன உளவுக் கப்பல்: இந்தியாவுக்கு மிரட்டலா? சீனாவின் திட்டம் என்ன?

ஈஸ்ட்போர்ன் டைவ் ஆபரேட்டரான டேவிட் ரோனனால் இந்த சிதைந்த கப்பல் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு ஹிஸ்டாரிக் இங்கிலாந்து அமைப்புக்குத் தெரிவிக்கப்பட்டது. ரோனன் மற்றும் மார்க் பீட்டி எட்வர்ட்ஸ் (தி நாடிகல் ஆர்கியாலஜி சொசைட்டி அமைப்பின் முதன்மைச் செயலர்) ஆகியோர் இந்தச் சிதைவு குறித்து விசாரித்து வருகின்றனர்.

கப்பலின் பீரங்கிகள், வெட்டப்பட்ட பளிங்கு ஓடுகள், மண்பாண்டங்கள் அனைத்தும் இந்த டச்சுக் கப்பல் இத்தாலியில் இருந்து திரும்பிவந்து கொண்டிருந்ததையே சுட்டிக் காட்டுகிறது.

கிட்டத்தட்ட, நான்கு ஆண்டு கால விசாரணை மற்றும் ஆராய்ச்சிக்குப் பிறகு, இப்போது நாங்கள் இந்தக் கப்பலை நம்பிக்கையுடன் அடையாளம் காண முடியும் என்கிறார் எட்வர்ட்ஸ்.

Mystery of 17th-century warship wreck off UK coast is solved by scientists
15000 ஆடுகளுடன் கடலில் மூழ்கிய கப்பல் : என்ன, எங்கே, எப்போது நடந்தது? - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com