ரஸ்புதின்: இந்த மதகுருவின் ஆணுறுப்பு மியூசியத்தில் பாதுகாக்கப்படுவது ஏன்?

ரஸ்புதினின் பெரிய அளவிலான ஆணுறுப்பு பற்றி பல கட்டுக்கதைகள் வருகின்றன. அதனை துண்டுதுண்டாக வெட்டி அவரது பக்தர்கள் பகிர்ந்து கொண்டார்கள் என்றும், ஒரு குழுவினர் அவரது ஆணுறுப்பை வழிபட்டு வந்ததாகவும் கதைகள் கூறுகின்றன.
ரஸ்புதின்: இந்த மதகுருவின் ஆணுறுப்பு மியூசியத்தில் பாதுகாக்கப்படுவது ஏன்?
ரஸ்புதின்: இந்த மதகுருவின் ஆணுறுப்பு மியூசியத்தில் பாதுகாக்கப்படுவது ஏன்?Twitter
Published on

ரஷ்யாவைச் சேர்ந்த மதகுரு ரஸ்புதின். இவரது வாழ்க்கை புராதண கதைகளுக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை. இவர் ஒரு மத குருவா? காம வெறியரா? மந்திர சக்திகள் வைத்திருக்கிறாரா? இறந்து விட்டாரா? இல்லையா? என பல கேள்விகள் இவரை சுற்றி இருக்கின்றன.

இந்த பைத்தியக்கார மதகுரு "Mad Monk" பற்றி பெரிதும் முனுமுனுக்கப்படும் விஷயம் அவரது ஆணுறுப்பு தான். ரஸ்புதினின் பெரிய அளவிலான ஆணுறுப்பு பற்றி பல கட்டுக்கதைகள் வருகின்றன. அதனை துண்டுதுண்டாக வெட்டி அவரது பக்தர்கள் பகிர்ந்து கொண்டார்கள் என்றும், ஒரு குழுவினர் அவரது ஆணுறுப்பை வழிபட்டு வந்ததாகவும் கதைகள் கூறுகின்றன.

அவர் ஆணுறுப்பின் மீது மக்களுக்கு இவ்வளவு ஆர்வமிருக்கிறதென்றால் அதற்கென ஒரு கதையும் இருக்கும் தானே!

பெண் பித்தர்

ரஸ்புதின் ஒரு துறவி என்றாலும் அவர் சாதாராண துறவிகளைப் போல நடந்துக்கொள்ளவில்லை. மாறாக, மது அருந்தவும் பரபரப்பான வாழ்க்கையை மேற்கொள்ளவும் செய்தார்.

திருமணமாகி 7 குழந்தைகளைப் பெற்ற பின்னர் தான் அவர் துறவரம் பூண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னராட்சி நடைபெற்ற ரஷ்யாவில் அரசுக்கு மிக நெருக்கமானவராக இருந்தார் ரஸ்புதின். அப்போது அவர் பல பெண்களுடன் உறவில் இருந்ததாக வதந்திகள் எழுந்தன.

க்லிஸ்ட்ஸ் அல்லது க்லிஸ்டி எனப்படும் கிறிஸ்தவ நிழல் உலக குழுவில் ரஸ்புதின் இருந்ததாகவும் அந்த குறுமதத்தின் படி அதிகமாக பாலுறவு கொண்டு சலித்தவர்கள் தான் கடவுளுக்கு நெருக்கமாக இருக்க முடியும் எனவும் சில கதைகள் கூறுகின்றன.

ரஷ்யாவின் ராணியாக இருந்த சரீனா அலக்ஸாண்ட்ரா (Tsarina Alexandra) வும் ரஸ்புதினும் காதலில் இருந்ததாகவும் கதைகள் உள்ளன.

வரலாற்றாசிரியர் ட்க்ளஸ் ஸ்மித், "பாலுறவு மோகம் அதிகமாக இருந்த ராணி ரஸ்புதினுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்பியதாக எந்த தரவுகளும் இல்லை. அவர்கள் ஒன்றாக இருந்திருக்க வாய்ப்புகள் இல்லை" என்கிறார்.

ஆணுறுப்பு புராணம்

இந்த ஆணுறுப்பு புராணம் ரஸ்புதின் இறந்ததிலிருந்து பிறந்தது. ரஷ்ய மன்னர் இரண்டாம் நிக்கோலஸின் மருமகளை திருமணம் செய்வதற்காக  இளவரசர் ஃபெலிக்ஸ் யுசுபோவ் 1916ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி ரஸ்புதினை செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் கொன்றார்.

"அந்த பிசாசு விஷத்தால் செத்துக்கொண்டிருந்த போது அவரது நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. பேய்களின் சக்தியால் அவன் நிச்சயம் உயிர்பெறுவான். அவன் சாக மறுத்ததில் மிகவும் மோசமான பயங்கரமான ஏதோ ஒன்று இருந்தது" என தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார் இளவரசர் ஃபெலிக்ஸ்.

ரஸ்புதினின் உடல் ஆற்றில் எறியப்பட்ட சில ஆண்டுகள் கழித்து, 1920ல் பிரான்ஸில் வாழும் ரஷ்யாவைச் சேர்ந்த ஒருகுழு அவரது ஆணுறுப்பை உரிமை கோரியது.

"இளவரசர் ஃபெலிக்ஸ் யுசுபோவ் ரஸ்புதினின் ஆணுறுப்பை துண்டுதுண்டாக வெட்டினார். அந்த துண்டுகள் எங்களிடம் உள்ளது. அவரது ஆணுறுப்புக்கு கருவுற வைக்கும் சக்தி உள்ளது" என அவர்கள் கூறினர். அவர்களின் நம்பிக்கை அடிப்படையில் மத ரீதியாக அந்த துண்டுகளை வழிபட்டனர்.

இந்த குழுவின் நடைமுறைகளை ரஸ்புதினின் மகள் மரியா ரஸ்புதின் கண்டித்தார். அவர், ரஸ்புதினின் ஆணுறுப்பு தன்னிடம் உள்ளதாக கூறி, அதற்கு உரிமை கொண்டாடினார் என கதைகள் கூறுகின்றன.

நீண்ட நாட்கள் கழித்து மைக்கேல் அகஸ்டின் என்ற நபர் தன்னிடம் ரஸ்புதினின் ஆணுறுப்பு இருப்பதாக கூறினார். 1994ம் ஆண்டு ரஸ்புதினின் மகளது உடமைகள் ஏலத்துக்கு வந்த போது அது தனக்கு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

ரஸ்புதின்: இந்த மதகுருவின் ஆணுறுப்பு மியூசியத்தில் பாதுகாக்கப்படுவது ஏன்?
கொரோனா வைரஸ்க்கு முன்பு கண்டங்களை காவு வாங்கிய கருஞ்சாவு - விலகிய 700 ஆண்டுகள் மர்மம்

உண்மையில் நடந்தது என்ன?

2004ம் ஆண்டு பீட்டர்ஸ்பெர்கில் உள்ள ஒரு மியூசியத்தில் ரஸ்புதினின் ஆணுறுப்பு வைக்கப்பட்டது. அந்த மியுசியத்தின் உரிமையாளர் அதனைப் பெறுவதற்காக 8000 அமெரிக்க டாலர்கள் செலவழித்தாக கூறினார்.

ஆனால் பெரும்பாலான நிபுணர்கள் அந்த மியூசியத்தில் இருக்கும் 12 அங்குலம் நீளமான உறுப்பு ஒரு மாட்டினுடையதாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

ரஸ்புதினின் மரணத்தின் மீது விசாரணனை நடத்திய போது அவரது உடல் ஆற்றிலிருந்து கைப்பற்றப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

உடற்கூறாய்வு செய்த மித்ரி கொசொரோடோவ் அவரது ஆணுறுப்பு உடலுடன் தான் இருந்தது எனக் குறிப்பிடுகிறார்.

ரஸ்புதின் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து சேகரித்து வந்த எட்வர்ட் ராட்ஜின்ஸ்கி என்ற ஆசிரியர், "ரஸ்புதின் ஆணுறுப்பை பற்றிய வதந்திகள் அவர் இறந்தது முதலே தொடங்கிவிட்டன. ஆனால் அவை அனைத்துமே கட்டுக்கதைகள்" என்கிறார்.

ரஸ்புதின்: இந்த மதகுருவின் ஆணுறுப்பு மியூசியத்தில் பாதுகாக்கப்படுவது ஏன்?
ரஷ்யா நிழல் அரசன் ரஸ்புடின் : இவர் ஒரு காம காட்டேரியா? ரஷ்யாவின் ரகசிய ஆட்சியாளரா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com