மீன் சாஸுடன் விந்தை குடிக்க கட்டாயப்படுத்திய தாய்லாந்து கடற்படை அதிகாரி - காரணம் என்ன?

பயிற்றுவிப்பாளரான அந்த அதிகாரி தன்னிடம் பயிற்சி பெறும் வீரர் ஒருவரைத் தண்டிக்கும் முகமாக மீன் சாறு கலந்த விந்தைக் குடிக்கக் கட்டாயப்படுத்தி தண்டிக்கும் வீடியோவை ஒருவர் பதிவேற்றினார். இது சமூக ஊடகங்களில் வைரலானது.
Semen
SemenTwitter
Published on

தாய்லாந்தில் கடற்படை அதிகாரி ஒருவர் தன்னிடம் பயிற்சி பெறும் வீரர்களுக்கு ஒரு ஆபாசமான தண்டனையைக் கொடுத்திருக்கிறார். அந்த தண்டனை என்ன தெரியுமா? மீன் சாற்றுடன் விந்தைக் கலந்து குடிக்க வேண்டும். பின்னர் இது வெளியே தெரிந்து அந்த அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

தாய்லாந்து கடற்படையில் கீழ்நிலை அதிகாரியாக இருக்கும் தக்சின் நகோக்பிலை என்ற நபர் தான் மேற்கண்ட விந்து குடிக்க வைத்த குற்றத்திற்காக 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு சோன் பூரியின் சத்தாஹிப் மாவட்டத்தில் தாய்லாந்து கடற்படை பயிற்சி முகாமில் இந்த விகாரமான சம்பவம் நடந்தது.

விந்து குடிப்பது பரவலாக விவாதிக்கப்பட்டது

பயிற்றுவிப்பாளரான அந்த அதிகாரி தன்னிடம் பயிற்சி பெறும் வீரர் ஒருவரைத் தண்டிக்கும் முகமாக மீன் சாறு கலந்த விந்தைக் குடிக்கக் கட்டாயப்படுத்தி தண்டிக்கும் வீடியோவை ஒருவர் பதிவேற்றினார். இது சமூக ஊடகங்களில் வைரலானது.

தாய்லாந்தில் இந்தப் பிரச்னை பல்வேறு கோணங்களில் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. ஏனெனில் விந்தைக் குடிப்பது என்பதில் ஆராயத்தக்க விஷயங்கள் உள்ளன. அதனால் தீமையா, நன்மையா என்று மக்கள் விவாதிக்கிறார்கள்.

விந்தணுவில் கலோரிகள் உள்ளன

விந்தணுவில் சர்க்கரை, சோடியம், சிட்ரேட், துத்தநாகம், குளோரைடு, கால்சியம், லாக்டிக் அமிலம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் யூரியா, புரதம் மற்றும் நீர் ஆகியவை உள்ளன.

விந்தணுவிலும் கலோரிகள் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் அது ப்ளீச்சிங் பவுடர் அல்லது வீட்டுத் துப்புரவு பொருட்கள் போன்ற வாசனையைக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மணம் நபருக்கு நபர் மாறுபடும். மேலும் விந்தணுவைக் குடிப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், அல்பானியில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழக ஆய்வின்படி, விந்து அருந்தும் பெண்களின் மனநிலை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Sperm
SpermTwitter

விந்துவில் ஆக்ஸிடாஸின், புரோஜெஸ்ட்டிரோன் உள்ளது

விந்துவில் ஆக்ஸிடாஸின், புரோஜெஸ்ட்டிரோன், ஈஸ்ட்ரோன், செரோடோனின் மற்றும் மெலடோனின் ஆகியவை உள்ளன. அவை மனநிலையை மேம்படுத்துகின்றன.

Spermidine - ஸ்பெர்மிடின் என்பது ரைபோசோம்கள் மற்றும் உயிருள்ள திசுக்களில் காணப்படும் ஒரு பாலிமைன் கலவை (C 7H 19N 3) மற்றும் உயிரினங்களுக்குள் பல்வேறு வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இது ஆயுட்காலம் அதிகரிக்க உதவுகிறது என்று அறிக்கைகள் கூறுகின்றன. மற்றும் ஆராய்ச்சியின் படி கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கிறது.

Semen
தூங்கி எழும்போது தொப்புளில் பஞ்சு போன்று உருவாவது ஏன்?

உணவு ஆரோக்கிய நன்மைகள்

விந்தை உட்கொள்வது பாதுகாப்பானது என்று அறிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும், சிலருக்கு விந்து ஒவ்வாமை உள்ளது. ஆனால் உண்மையான உணவு ஆரோக்கிய நன்மைகளைப் பார்ப்பது இன்னும் ஆய்வில்தான் உள்ளது. அது பற்றிய தீர்க்கமான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை.

விந்தணு மிகவும் சிறிய பகுதிகளாக இருப்பினும் புரதத்தையும் கொண்டுள்ளது.

Fish Sauce
Fish SauceTwitter

விந்தில் சர்க்கரை உள்ள மெலடோனின் உள்ளது

விந்தில் மெலடோனின் உள்ளது. இது நன்றாகத் தூங்க உதவுகிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

ஒரு டீஸ்பூன் விந்துவில் வைட்டமின் சி, கால்சியம், குளோரின், சிட்ரிக் அமிலம், பிரக்டோஸ், லாக்டிக் அமிலம், மெக்னீசியம், நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி12 மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட 200 புரதங்கள் உள்ளன என்று சில அறிக்கைகள் கூறுகின்றன.

Semen
Myths : நாம் இன்று வரை நம்பிக் கொண்டிருக்கும் 10 கட்டுக்கதைகள் - Interesting Facts

மீன் சாஸில் என்ன இருக்கிறது?

மீன் சாஸ் அல்லது மீன் சாறு தாய்லாந்து உணவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சிறு மீன்களை உப்பு சேர்த்து புளிக்க வைத்து காய்ச்சி பாட்டிலில் அடைக்கப்படுகிறது.

இது அரிசியோடு இணையும் போது அதிக சுவையுடன் காணப்டுகிறது. தென்கிழக்கு ஆசியா மற்றும் ஜப்பானில் பல்வேறு வகையான மீன் சாஸ் உள்ளன. Nam-pla – நாம் பிளா என்பது தாய்லாந்தில் மீன் சாஸின் உள்ளூர் பெயராகும்.

தாய்லாந்து மற்றும் வியட்நாமிய உணவு வகைக் கலவைகளில் நெத்திலிகளால் செய்யப்பட்ட மீன் சாஸ் அல்லது சாப்பிடுவதற்கு மிகவும் சிறியதாகக் கருதப்படும் மீன்கள் பயன்படுத்துகின்றன.

Semen
சுய இன்பம் செய்தால் எடை குறையுமா?

தாய்லாந்து கடற்படை அதிகாரியின் உண்மையான நோக்கம்

இருப்பினும், கடற்படையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட புதியவர்களுக்கு மீன் சாஸுடன் விந்தைக் குடிக்குமாறு உத்தரவிட்ட அதிகாரியின் நோக்கத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்ன என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

இது கொடுமைப்படுத்துவதாக இருந்திருக்கலாம், ஆனால் மீன் குழம்பு மற்றும் விந்தின் மர்மமான திறனைப் பற்றி அவருக்கு ஏதாவது தெரியுமா? நிச்சயமாகத் தெரியாது.

Semen
சுய இன்பம் செய்ததால் ஐசியு-வில் சேர்க்கப்பட்ட இளைஞர் - நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com