நேபாளம் விமான விபத்து நேற்று உலகை உலுக்கும் செய்தியாக வந்தது.
72 பேர் பயணித்த யெட்டி விமான நிறுவனத்தின் விமான விபத்தில் 68 பேர் உயிரிழந்தது உறுதியாக தெரியவந்துள்ளது.
இமையமலையின் முக்கிய சுற்றுலாத்தலமான போக்ரா நகரின் விமான நிலையத்தில் இறங்கும் தருவாயில் இந்த விபத்து நடந்துள்ளது.
தலைநகர் காத்மண்டுவில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் 15 வெளிநாட்டவர்கள் இருந்தனர். இதில் 5 இந்தியர்களும் அடங்குவர்.
4 இந்தியர்கள் உத்தரபிரதேசம் மாநிலத்தின் ஹசிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மொத்தமாக 40 பேரின் உடல்களுக்கு மேல் மீட்பு குழுவினர் கைப்பற்றியுள்ளனர். யாரும் உயிருடன் தப்பியதாக தகவல்கள் இல்லை.
கடந்த மே மாதமும் இதே போன்ற பெரிய விபத்து ஏற்பட்டது. அதில் 22 பேர் மரணித்தனர்.
உலகின் மிகப் பெரிய மலைச்சிகரங்களை கொண்ட நேபாளம் அதிக விமான விபத்துகளைச் சந்திக்கும் நாடாகவும் இருக்கிறது.
இந்த விமான விபத்து, இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பேஸ்புக்கில் நேரலை போடும் போது ஏற்பட்டதால் காணொளி பதிவாகியிருக்கிறது.
அது இப்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust