ஜப்பான் பல தீவுகளுக்கு பெயர் பெற்ற நாடாகும். அவற்றில் சில எரிமலை செயல்பாட்டால் உருவாகின. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு கடலுக்கடியில் எரிமலை வெடித்ததில் ஜப்பானின் ஒகசவாரா தீவு சங்கிலிக்கு அருகில் ஒரு புதிய தீவு தோன்றியது.
இந்த புதிய பெயரிடப்படாத தீவு சுமார் 100 மீட்டர் விட்டம் கொண்டது. ப்ரீடோமாக்மாடிக் வெடிப்புகளால் இந்த தீவு உருவாக்கப்பட்டது.
ப்ரீடோமாக்மாடிக் வெடிப்புகள் என்பது மாக்மாவிற்கும் (கற்குழம்பு) தண்ணீருக்கும் இடையிலான தொடர்புகளின் விளைவாக ஏற்படும் எரிமலை வெடிப்புகள் ஆகும்
இவோடோ தீவின் கடற்கரையிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் வெடிப்புகள் தொடங்கியது. வெடிப்புகள் சுமார் 10 நாட்கள் தொடர்ந்தன. இதன் மூலம் ஒரு தீவு உருவாகியிருக்கிறது.
இப்பகுதியில் எரிமலை செயல்பாட்டால் உருவாக்கப்பட்ட முதல் தீவு இது அல்ல. போனின் தீவுகள் என்றும் அழைக்கப்படும் ஒகசவாரா தீவுச் சங்கிலி, 30 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட ஒரு எரிமலை வளைவாகும்.
டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பூகம்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியரான ஃபுகாஷி மேனோ, இவோட்டோ அருகே மாக்மா தண்ணீருடன் தொடர்புகொள்வதன் விளைவாக ப்ரீடோமாக்மாடிக் வெடிப்புகள் நிகழ்வதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த வெடிப்புகள், கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சுமார் 100 மீட்டர் விட்டம் கொண்ட நிலப்பரப்பை உருவாக்கியுள்ளன.
மேனோவின் கூற்றுப்படி, வெடிப்புகள் தொடர்ந்தால் தீவின் அளவும் வடிவமும் மேலும் மாறலாம், ஆனால் அது அலைகளுக்கு அடியில் மூழ்கும் வாய்ப்பும் உள்ளது. 1904, 1914 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் உருவான இதே போன்ற தீவுகள் அனைத்தும் அரிப்பு காரணமாக காணாமல் போனது என்றார்.
இதுவெல்லாம் ஒரு புறம் இருக்க, புதிய தீவின் தோற்றம் இயற்கையின் ஆற்றலையும் அழகையும் காட்டும் ஒரு அதிசய நிகழ்வாக உள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust