ஜப்பான்: இந்த தீவில் வாழ்பவர்களுக்கு ஆயுசு அதிகமாம்! ஓக்கினாவா மக்கள் பகிரும் 4 சீக்ரெட்ஸ்

இந்த தீவில் வாழ்பவர்களின் ஆயுசு அதிகம் என்று சொல்கிறோமே அவர்களின் வயது தான் என்ன?
ஜப்பான்: இந்த தீவில் வாழ்பவர்களுக்கு ஆயுசு அதிகமாம்! ஓக்கினாவா மக்கள் பகிரும் 4 சீக்ரெட்ஸ்
ஜப்பான்: இந்த தீவில் வாழ்பவர்களுக்கு ஆயுசு அதிகமாம்! ஓக்கினாவா மக்கள் பகிரும் 4 சீக்ரெட்ஸ்ட்விட்டர்
Published on

சராசரியாக மனிதனின் ஆயுட்காலம் 50 முதல் 60 வயது வரை எனலாம். புராணக்கதைகளை எடுத்துக்கொண்டாலோ நூற்றாண்டுகள் வாழ்ந்தவர்களை பற்றிக் கூட குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது மாறிவரும் வாழ்க்கை முறையில், இளம் வயதினர் கூட எளிதில் மரணிப்பதையும் நாம் பார்த்துவருகிறோம்.

ஆனால், ஜப்பானின் இந்த தீவில் வாழ்கிற மக்களின் ஆயுட்காலம் சராசரியை விட அதிகமானதாக உள்ளது. இந்த தீவை அமரர்கள் வாழும் நிலம், அதாவது Land of Immortals என்று குறிப்பிடுகின்றனர்.

அமரர்கள் தீவைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்

ஜப்பானில் அமைந்திருக்கும் ஈஸ்ட் சைனா கடற்கரையில் இருக்கிறது இந்த ஓக்கினாவா எனப்படும் தீவுக்கூடம். இந்த தீவுக்கூடமானது உலகின் ஐந்து ப்ளூ சோன்களில் ஒன்று.

ப்ளூ சோன் என்பது உலகில் அதிக ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழும் மனிதர்கள் இருக்கும் பகுதியை குறிக்கிறது.

இந்த தீவில் வாழ்பவர்களின் ஆயுசு அதிகம் என்று சொல்கிறோமே அவர்களின் வயது தான் என்ன?

இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலும் 100 வயதை தொட்டவர்கள் அல்லது 100 வயதை கடந்தவர்கள். நூற்றாண்டுகள் கடந்தவர்கள் அதிகம் வாழும் தீவு இது. 2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்த தீவில் வாழும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 87.44 ஆண்டுகளாகும். ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 80.27 ஆண்டுகளாகும்.

ஜப்பான்: இந்த தீவில் வாழ்பவர்களுக்கு ஆயுசு அதிகமாம்! ஓக்கினாவா மக்கள் பகிரும் 4 சீக்ரெட்ஸ்
டீ குடிப்பவர்களுக்கு ஆயுள் கெட்டியா? - ஆய்வாளர்கள் கூறியது என்ன?

இக்கிகய்

இவர்களின் நீண்ட ஆயுளுக்கு இக்கிகய் தான் காரணம் என்கின்றனர் இங்கு வாழும் மக்கள். இகிகாய் என்பதன் பொருள் ’வாழ்வில் ஒருவருக்கு இருக்கும் தனித்துவமான நோக்கம்’.

ஜப்பானிய மொழியில், ’எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி’ என்றும் பொருள்படுகிறது.

இவர்கள் ஆரோக்கியமாக மற்றும் சந்தோஷமாக, நீண்ட நாள் வாழ நான்கு ரகசியங்களை பகிர்கின்றனர்.

  • உங்களுக்கான இகிகாயை தேர்ந்தெடுக்கவேண்டும்.

  • தாவரம் சார்ந்த உணவுகளை சாப்பிடவேண்டும்.

  • தோட்டக்கலை பயிலுங்கள்.

  • ஒரு மொவாய் பேணிக்காக்க வேண்டும்.

(மொவாய் என்பது, ஒரு பொதுவான எண்ணம் அல்லது குறிக்கோள் உடைய மக்கள், நெருங்கிய நண்பர்கள் ஒன்றுகூடி சந்தித்து தங்களின் நோக்கங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு வழக்கம்)

ஜப்பான்: இந்த தீவில் வாழ்பவர்களுக்கு ஆயுசு அதிகமாம்! ஓக்கினாவா மக்கள் பகிரும் 4 சீக்ரெட்ஸ்
சீனா மக்களின் ஆயுள் இரகசியம் இது தான் - ஆரோக்கியத்துக்கு கேரண்டி கொடுக்கும் ஒரு உணவு!

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஒரு தனிப்பட்ட, தனித்துவமான நோக்கம் இருத்தல் அவசியம். அதனை மேம்படுத்தி, இந்த உலகை மனிதர்கள் வாழக்கூடிய ஒரு அழகிய இடமாக மாற்ற நமது பங்களிப்பை தரவேண்டும் என்பது இதன் பொருளாகிறது.

இவற்றை பின்பற்றுவதாலேயே இந்த மக்கள் அதிக ஆயுளுடன் வாழ்கின்றனர்.

உலகில் இருக்கும் ஐந்து ப்ளூ சோன்கள்:

  • ஓக்கினாவா, ஜப்பான்

  • சார்டீனியா, இத்தாலி

  • லோமா லிண்டா, கலிஃபோர்னியா

  • நிக்கோயா தீபகற்பம், கோஸ்டா ரிக்கா

  • இக்காரியா, க்ரீஸ்

ஜப்பான்: இந்த தீவில் வாழ்பவர்களுக்கு ஆயுசு அதிகமாம்! ஓக்கினாவா மக்கள் பகிரும் 4 சீக்ரெட்ஸ்
Monaco: இந்த நாட்டில் வாழ்பவர்களின் ஆயுள் காலம் அதிகமா? மொனாக்கோ பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com