New York: உலகின் பணக்கார நகரமாக உருவானது எப்படி?ஆச்சரிய வரலாறு!

வெறும் 30 டச்சு குடும்பங்கள் குடியேறிய நியூ ஆம்ஸ்ட்ரடாங் நகரம் இன்று உலகமே திரும்பிப்பார்க்கும் நியூ யார்க்காக மாறியது எப்படி? ஒரு சிறைய நகரத்தில் குவிந்து கிடக்கும் செல்வத்தின் கதை என்ன?
New York : உலகின் பணக்கார நகரமாக உருவானது எப்படி - ஆச்சரிய வரலாறு!
New York : உலகின் பணக்கார நகரமாக உருவானது எப்படி - ஆச்சரிய வரலாறு!Twitter
Published on

கடந்த சில தசாப்தங்களாக நியூ யார்க் உலகின் பணக்கார நகரமாக திகழ்கிறது. எங்கு பார்த்தாலும் வானளாவிய கட்டடங்கள், மஞ்சள் நிற டாக்ஸிகள் பரபரப்பான மனிதர்கள் இருக்கும் நகரம்.

இதற்கு பிக் ஆப்பிள் என்ற செல்லப்பெயரும் உண்டு. தமிழகத்தில் மதுரையை தூங்கா நகரம் எனக் குறிப்பிடுவது போல அமெரிக்காவில் நியூ யார்க்கை "The City That Never Sleeps" எனக் குறிப்பிடுவர்.

இங்கு 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இதனால் உலகில் நெருக்கடி மிகுந்த நகரமாகவும் இருக்கிறது நியூ யார்க்.

இங்கு 3.4 லட்சத்துக்கும் அதிகமான மில்லியனர்கள் வசிப்பதனால் உலகின் பணக்கார நகரமாகவும் இருக்கிறது.

அமெரிக்காவுக்கு செல்பவர்கள் நிச்சயமாக செல்ல நினைக்கும் இடம் நியூ யார்க் தான். கவர்ச்சி மிகுந்த நகரமாகவும் நியூ யார்கைக் கருதலாம்.

நம் ஆதர்சமான ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் இந்த கவர்ச்சியான, மக்கள் வசிக்க விரும்புகிற, மெட்ரோ போலிட்டன் நகரம் உருவானது எப்படி தெரியுமா?

நியூ யார்க்கில் குடியேறிய டச்சு குடும்பங்கள்

அது 1624ம் ஆண்டாகத் தான் இருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது. முதன் முதலாக அமெரிக்க நிலத்துக்கு டச் மக்கள் வந்திறங்கினர்.

அவர்கள் தங்கிய இடத்தை நியூ ஆம்ஸ்ட்ரடாம் என்று அழைத்தனர். அங்கு கிட்டத்தட்ட 30 வெள்ளைக்கார குடும்பங்கள் வசித்ததாக கூறப்படுகிறது.

அதுவரையில் நியூயார்கை சொந்தமாக கொண்டிருந்தது அல்கோன்குயின் எனும் செவ்விந்திய பழங்குடி மக்கள் தான்.

மீன் பிடித்தும், வேட்டையாடியும், சிறிய அளவில் விவசாயம் செய்தும் அவர்கள் வாழ்ந்துவந்தனர். பெரிய கட்டிடங்கள் இல்லாத, மனிதக் கூட்டம் இல்லாமல் காடுகளாகவும் பெறும் நிலமாகவும் இருந்த நியூ யார்க்கை கற்பனை செய்வது மிகவும் கடினமான விஷயம் தான்.

அப்படியான இடத்துக்கு தான் வந்திறங்கினர் டச்சுக்காரர்கள்.

அப்போது ஜெனரலாக இருந்த பீட்டர் மினுயிட் என்பவர் மன்ஹட்டன் எனும் இடத்தை, உலோக கருவிகள், விவசாய உபகரணங்கள், துணி மற்றும் வேம்பு போன்ற 60 கில்டர்கள் மதிப்புள்ள வர்த்தகப் பொருட்களைக் கொடுத்து வாங்கினார்.

வெள்ளையர்கள் கையில் சிக்கிய நியூயார்கின் முதல் துண்டு நிலம் அதுதான். பின்னர் அங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது காலனித்துவ அரசு.

30 ஆண்டுகள் கழித்து 1650களில் நியூயார்க் பாஸ்டனையும் மற்ற காலனித்துவ நகரங்களையும் விட பெரிய நகரமாக உருவானது.

நியூ ஆம்ஸ்ட்ரடாங் நியூ யார்க்காக மாறியது

1664ம் ஆண்டு அங்கு வசித்துவந்த வெள்ளையர்களுக்கு ஒரு சோதனை வந்தது. பிரிட்டிஷ் அரசு பீரங்கிப்படையுடன் போர் தொடுத்து வந்து நியூ ஆம்ஸ்ட்ரடாமைக் கைப்பற்றி நியூ யார்க் என்ற புதிய பெயரை வழங்கினர்.

அதன் பிறகு நெதர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து மக்களும் அவர்களுடன் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஆப்பிரிக்க அடிமைகளும் வந்திறங்கினர். இதனால் நியூ யார்கின் மக்கள் தொகை அதிகரிக்கத்தொடங்கியது.

அடிமைகள் வியாபாரம்

இப்போது உலக பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் வங்கிகளும் வணிக மையங்களும் இருக்கும் இடமாக விளங்கும் வால் ஸ்ட்ரீட் அப்போது அடிமைகள் சந்தையாக இருந்தது.

நியூ யார்கில் இருந்த ஒவ்வொரு வெள்ளைக்காரரும் சில அடிமைகளை வைத்திருந்தனர். ஆப்பிரிக்க அடிமைகள் கப்பலில் கூட்டம் கூட்டமாக இறக்குமதி செய்யப்பட்டனர்.

அவர்களைக் கொண்டு சாக்லேட், பருத்தி, சர்க்கரை, புகையிலை போன்ற பண்டங்களை உற்பத்தி செய்தனர்.

பருத்தி மிகப் பெரிய அளவில் செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் பயிராக இருந்தது. அமெரிக்காவில் ஆப்பிரிக்க கருப்பின மக்கள் உற்பத்தி செய்த பருத்தியை இங்கிலாந்தின் மான்செஸ்டர் உள்ளிட்ட புகழ்பெற்ற தொழில்நகரங்களுக்கு அனுப்பினர்.

அங்கிருந்து அவை உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யப்பட்டு வெள்ளையர்களுக்கு செல்வத்தைக் குவித்துக்கொடுத்தது.

அமெரிக்க புரட்சி

18ம் நூற்றாண்டு அமெரிக்க அரசியலில் நியூ யார்க் மிகப் பெரிய பங்கு வகித்தது. 1760, 70களில் நியூ யார்க் பிரிட்டிஷ் அரசின் மையமாக செயல்பட்டது.

1765ம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அமெரிக்க காலனிகளுக்கு ஸ்டாம்ப் ஆக்ட் (The Stamp Act 1765) என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது அமெரிக்காவில் உள்ள பிரிட்டிஷ் காலனிகள் மீது நேரடி வரியை விதித்தது.

இதனால் நியூ யார்கில் வசித்த மக்கள் கொதித்து எழுந்தனர். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராட்டம் செய்து ஆளுநரின் உருவ பொம்மையை எரித்தனர்.

ஆங்கிலேய அரசுக்கு நியூயார்க் மிகவும் முக்கியமான நகரமாக இருந்ததனால் பிரிட்டிஷ் போர் தொடுத்தனர். அமெரிக்க தேசப்பற்றாளர்கள் பிரஞ்சு அரசுப்படைகளின் துணையுடன் பிரிட்டிஷை எதிர்த்தனர்.

நியூ யார்க் 1983ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் இராணுவ தளமாக இருந்தது. அமெரிக்க புரட்சியின் முடிவில் பிரிட்டிஷ் மன்னர் ஜார்ஜின் ஆதிக்கம் நிறைவடைந்தது. மாகாணங்கள் அதிகாரம் பெற்றன, கூட்டாட்சி அரசும் உருவானது.

வணிகத் தலைநகர்!

போரின் தாக்கத்தில் இருந்து விடுபட்ட நியூ யார்க் நகரம் 1810களில் தீவிரமாக வணிகத்தில் ஈடுபட்டது. அப்போது இருந்த ஒரே பிரச்னை உள் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை நியூ யார்க் துறைமுகத்துக்கு எடுத்துவருவதில் இருந்த சிக்கல் தான்.

இதற்கான தீர்வைத் தேடி ஹட்சன் நதியிலிருந்து ஏரி லேக் வரை 584 கிலோ மீட்டர் நீளமான ஏரியை அமைத்தனர். இதன் பின்னர் நியூயார்க் அமெரிக்காவின் வணிகத் தலைநகராக உருவானது.

New York : உலகின் பணக்கார நகரமாக உருவானது எப்படி - ஆச்சரிய வரலாறு!
செளதி மன்னர் தெரியும், உலகை ஆளும், ஆண்ட இந்த 9 அரசர்கள் குறித்து தெரியுமா?

அடிமை முறையை எதிர்த்த மக்கள் கால்வாய் வழியாக தங்கள் கருத்துகளைப் பரப்பினர். இதன் விளைவாக கால்வாய் உருவான இரண்டு ஆண்டுகளில் அதாவது, 1827ம் ஆண்டு நியூ யார்கில் அடிமைகள் வியாபாரம் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது.

அடிமைமுறையை ஒழிப்பதில் மட்டுமல்ல நியூயார்கின் பொருளாதாரத்தை வளர்த்ததிலும் கால்வாய்க்கு முக்கிய பங்கு உள்ளது.

கால்வாய் பல மடங்கு நியூயார்க்கை பணக்கார துறைமுகமாக வளர்த்தெடுத்தது. அமெரிக்காவின் மாகாணங்களுக்குள் பொருட்களைப் பறிமாற்றம் செய்யவும் மக்கள் நியூயார்க்கை நம்பினர்.

தொழில்புரட்சி காலத்தில் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் பறிமாற்றம் செய்யவும் சிறந்த இடமாக நியூ யார்க் நிலவியது.

மக்கள் தொகை

பல ஊர்களில் இருந்து மக்கள் நியூ யார்குக்கு குடிபெயர்ந்து வந்தனர். 1880களில் நியூ யார்கில் 20 லட்சம் மக்கள் வசித்தனர். இது அந்த காலத்து இந்தியாவின் மக்கள் தொகையில் 10ல் ஒரு பங்கு.

அதிக மக்கள் அடர்த்தி காரணமாக நியூ யார்கில் பல சீரான கட்டுமானங்கள் நடைபெற்றன. உதாரணமாக ப்ரூக்ளின் பாலம் 14 ஆண்டுகளாக 15 மில்லியன் டாலர்கள் செலவு செய்து கட்டப்பட்டது. இன்றைய பண மதிப்புடன் ஒப்பிட்டால் 320 மில்லியன் டாலர்கள்.

பல திசைகளில் இருந்து சிறந்த வாழ்வுக்கான கனவுடன் மக்கள் நியூயார்க்குக்கு வந்தனர். இதனால் அந்த நகரம் வளர்ச்சியடைவது நிறுத்தமுடியாததாக இருந்தது.

புதிய சாலைகள் போடப்பட்டுக்கொண்டே இருந்தன. புதிய கட்டடங்கள் எழும்பிக்கொண்டே இருந்தன. மான்ஹட்டனால் உருவான சிறிய நகரமான நியூ யார்கில் ப்ரூக்ளின், குயின்ஸ், ப்ரான்க்ஸ் மற்றும் ஸ்டேடன் தீவுகள் நியூ யார்கின் பகுதிகளாக மாறின.

மக்கள் தொகை பெருக பெருக நகரம் வளர்ந்தது, போக்குவரத்துக்கான தேவையும் அதிகரித்துக்கொண்டேப் போனது. இதே போக்குவரத்து நெருக்கடி பிரச்னை லண்டனிலும் ஏற்பட்டது. அதன் விளைவாக லண்டன் சுரங்க ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

சென்னையில் புதிதாக மெட்ரோ அறிமுகப்படுத்தப்பட்டது போல 1904ம் ஆண்டு நியூ யார்க் சுரங்க ரயில்பாதை உருவாக்கப்பட்டது.

அடுத்த 20 ஆண்டுகள் மிகவும் விலை உயர்ந்த மற்றும் பிரபலமான சுரங்க போக்குவரத்து கொண்ட நகராக மாறியது நியூ யார்க். இன்றுவரை சுரங்க ரயில்கள் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

இதனால் தான் நியூ யார்க்கையும் தூங்கா நகரம் என்கிறோம்.

New York : உலகின் பணக்கார நகரமாக உருவானது எப்படி - ஆச்சரிய வரலாறு!
New York முதல் Mumbai வரை : உலகின் பணக்கார நகரங்கள் எவைத் தெரியுமா?

நியூ யார்க் - பணக்கார நகரம்

இன்று நியூ யார்க் மக்கள் மட்டும் 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துக்களை வைத்திருக்கின்றனர். இது லண்டன் மற்றும் டோக்கியோவை விட அதிகம்.

இன்று உலக அங்கீகாரம் பெற்ற பல நிறுவனங்களின் தலைமையகங்கள் நியூ யார்க்கில் தான் இருக்கின்றன. பல நிறுவனங்கள் இங்குதான் தொடங்கப்படுகின்றன. பல மாளிகைகளும் பங்களாக்களும் இருக்கின்றன.

வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது நியூ யார்க் நகரம். இது உலகின் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இருப்பதில் வியப்பேதும் இல்லை.

ஆண்டு தோறும் 6 கோடி மக்கள் நியூ யார்க்கை சுற்றிப்பார்த்து திகைத்துப்போகின்றனர். குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளில் இங்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்திருக்கிறது.

New York : உலகின் பணக்கார நகரமாக உருவானது எப்படி - ஆச்சரிய வரலாறு!
ஜெர்மனி: நாட்டுக்காக நாஜி வீரர்களுடன் குழந்தை பெற்ற ஆரிய பெண்கள் - மறைக்கப்பட்ட சோக வரலாறு

2021ம் ஆண்டு சுற்றிப்பார்க்க வந்தவர்கள் மட்டுமே 52 பில்லியன் டாலர்கள் செலவழித்திருக்கின்றனர். இதன் மூலம் 3,50,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

1624ம் ஆண்டு 30 டச்சு குடும்பங்கள் குடியேறிய நிலம் இன்று உலக மக்கள் அனைவரும் கண்களும்படும் நகரமாக வளர்ந்திருக்கிறது.

பல மைல் தொலைவில் தமிழகத்தில் உள்ள கவிஞரும் நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம் எனக் கவிதை எழுதுமளவு புகழ் பெற்றிருக்கிறது.

இதுதான் வியக்கவைக்கும் நகரத்தின் வியக்கவைக்கும் வரலாறு!

New York : உலகின் பணக்கார நகரமாக உருவானது எப்படி - ஆச்சரிய வரலாறு!
முசிறி : ஈராயிரம் ஆண்டுகள் பழமையான துறைமுகம் - திடீரென காணாமல் போனது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com