ஜெர்மனி: நாட்டுக்காக நாஜி வீரர்களுடன் குழந்தை பெற்ற ஆரிய பெண்கள் - மறைக்கப்பட்ட சோக வரலாறு

துணையைத் தேர்ந்தெடுத்த பெண் மாதவிடாய் முடிந்த 10ம் நாள் அவருடன் மூன்று இரவைக் கழித்தார். பிறகு அந்த வீரர் அடுத்த பெண்ணுடன் மூன்று நாட்களைக் கழிக்க உத்தரவிடப்பட்டார். நாஜிக்களின் அறியப்படாத இந்த வினோத வரலாற்றைப் பார்க்கலாம்
ஜெர்மனி : நாட்டுக்காக நாஜி வீரர்களுடன் குழந்தை பெற்ற ஆரிய பெண்கள்- மறைக்கப்பட்ட சோக வரலாறு
ஜெர்மனி : நாட்டுக்காக நாஜி வீரர்களுடன் குழந்தை பெற்ற ஆரிய பெண்கள்- மறைக்கப்பட்ட சோக வரலாறுRepresentational Image

இப்படியெல்லாம் நடந்திருக்க முடியுமா? என நாம் ஆச்சரியப்படும் படியான செய்திகள் தான் வரலாறு நெடுகிலும் நமக்காக காத்திருக்கிறது.

விநோதமான சம்பவங்கள், சகிக்க முடியாத குற்றங்கள், தாங்கிக்கொள்ள முடியாத துன்பங்களால் நிறைந்திருக்கிறது நாடுகளின் வரலாறுகள்.

அப்படிப்பட்ட ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியின் போது நடந்த ஒன்று தான் தூய்மையான ஆரிய பெண்கள் நாட்டுக்காக குழந்தைப் பெற்றெடுக்கும் திட்டம்.

ஜெர்மனியில் மக்களும் அரசு அதிகாரிகளும் ஹிட்லரின் கட்டளைகளுக்கு கண்மூடித்தனமாக கீழ்ப்படிந்தனர் என்பதை நாம் வரலாறுகளில் படித்திருப்போம். அவரது சர்வாதிகார ஆட்சியில் அது ஒன்றே வழியும் கூட.

ஹிட்லரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வேதவாக்காக நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டன. அவரை ஃபியூரர் என்று அழைத்தனர். அதற்கு மகாதலைவன் என்று பொருள். அந்த இனவாத தலைவருக்கு மற்றொரு பாசிஸ்டான ஹிம்லர் என்பவர் முக்கிய தளபதியாக இருந்தார்.

லெபென்ஸ்போர்ன் திட்டம்

ஹிம்லரின் சிந்தனையில் உதித்ததுதான் லெபென்ஸ்போர்ன் திட்டம். முதலாம் உலகப்போருக்கு பிறகு சரிந்த பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

இந்த திட்டத்தின் படி தன்னார்வலர் பெண்களின் மூலம் தூய ஆரிய குழந்தைகளைப் பெற்று நாட்டுக்கு அர்ப்பணித்து, அதன் மூலம் நாட்டில் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் எனத் திட்டமிட்டனர்.

ஹிம்லர்
ஹிம்லர்

ஹிட்லரின் படையில் ஹிம்லரின் கீழ் செயல்பட்டு வந்த வீரர்கள் ஷுட்ஸ் ஸ்டேஃபல், சுருக்கமாக எஸ்.எஸ் படையினர் என அழைக்கப்படுகின்றனர்.

லெபென்ஸ்போர்ன் திட்டத்தில் தன்னார்வலராக பங்கெடுக்கும் பெண்கள் இந்த வீரர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டனர்.

இந்த திட்டத்தைப் புரிந்துகொள்ள ஹில்டேகார்ட் ட்ரூட்ஸ் என்ற பெண்ணின் வாழ்க்கையை திருப்பிப்பார்க்கலாம்.

ஹில்டேகார்ட் ட்ரூட்ஸ்

ட்ரூட்ஸ் ஒரு தீவிர நாஜி ஆதரவாளராக இருந்தவர். இவர் குறித்த தகவல்கள் இங்கிலாந்து பத்திரிகையாளரான கைல்ஸ் மில்டனின் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த திட்டத்தில் பங்கெடுக்க வரும் அனைத்துப் பெண்களும் ஆரியர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

குறைந்தது தங்களது தாத்தா வரையிலான தலைமுறையினர் ஆரியர்கள் என நிரூபிக்க வேண்டியது அவசியம். அதுதான் தகுதியும் கூட.

தன்னார்வலர் பெண்களுக்கு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதிலும் அவர்கள் தகுதி பெற்றால் அவர்களை திட்டத்தில் சேர்த்துக்கொண்டனர்.

இப்படி ஒரு குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரமாக செயல்படும் திட்டத்துக்கு பெண்கள் எப்படி ஒப்புக்கொண்டனர் என்பது வியப்பாக இருக்கலாம்.

ட்ரூட்ஸ் ஒரு தீவிரமான ஹிட்லர் ஆதரவாளர். நாஜி இயக்கத்தின் இளைஞர் அமைப்புகளில் சேர்ந்து கூட்டங்களில் பணியாற்றியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பகுதியின் தலைவராகவும் அங்கீகரிக்கப்பட்டார்.

தனது 18 வயதில் என்ன செய்வதென்று தெரியாத இளைஞியாக சுற்றிக்கொண்டிருந்தார் ட்ரூட்ஸ். அப்போது அவர் இருந்த அமைப்பின் தலைவர் லெபென்ஸ்போர்ன் திட்டம் குறித்து கூறி, ஹிட்லருக்காக ஒரு குழந்தை பெற்றுக்கொடுக்குமாறு அவரிடம் கேட்டுள்ளார்.

ட்ரூட்ஸ் போன்ற நாஜி ஆதரவு பெண்கள் தங்கள் தலைவருக்கு சேவையாற்றும் வாய்ப்பாக இதைக் கருதும் அளவு ஹிட்லர் மீதும் அவர் உறுதியளித்த புதிய சிறந்த ஜெர்மனி மீதும் நம்பிக்கைக்கொண்டிருந்தனர்.

ட்ரூட்ஸ் ஆரியர்களுக்கேயான பொன்னிற முடி மற்றும் நீலக்கண்களைக் கொண்டிருந்தார். ஹிம்லர் வகைப்படுத்தும் ஆரிய வம்சத்துக்கான சரியான அளவுகோலாக அவரது உருவம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஹிட்லருக்காக குழந்தைப் பெற்றுக்கொடுப்பது ட்ரூட்ஸுக்கு பெருமை மிக்க விஷயமாக இருந்துள்ளது. ஆனாலும் இதுபோன்ற திட்டத்துக்கு தனது பெற்றோர் மறுப்பு தெரிவிப்பார்கள் என நினைத்ததால் அவர்களிடம் உறைவிட பள்ளியில் ஓராண்டு பயிற்சியில் சேருவதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

என்ன நடந்தது அவருக்கு?

ஹில்டேகார்ட் ட்ரூட்ஸ் நாஜி அதிகாரிகளால் பவேரியா என்ற இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்குள்ள பிரம்மாண்டமான கோட்டையில் அவர் தங்கவைக்கப்பட்டார்.

அங்கு இவரைப்போல கிட்டத்தட்ட 40 பெண்கள் இருந்துள்ளனர். அங்கு ஆடம்பரமான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன.

விளையாடரங்கங்கள், உள் விளையாட்டரங்கங்கள், நூலகம், இசை, திரையரங்கம் கூட அங்கு இருந்தது. அனைத்தையும் அனுபவித்தார் ட்ரூட்ஸ்.

அங்கு பரிமாறப்பட்ட உணவு ட்ரூட்ஸின் வாழ்நாளில் அவர் சாப்பிடாத அளவு சுவையானதாக இருந்தது. பெண்களைப் பார்த்துக்கொள்ள பல சேவகர்கள் இருந்துள்ளனர்.

லெபென்ஸ்பார்ன் தாய்மார்கள்
லெபென்ஸ்பார்ன் தாய்மார்கள்

அந்த பெண்களுக்கு குடும்பபற்றை விட நாட்டுபற்றே முக்கியமானதாக இருக்க வேண்டும் என ஆவணத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தை மீது அவர்கள் உரிமைகோரக் கூடாது என்றும் சொல்லப்பட்டது.

அந்த கோட்டையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த நாஜி மருத்துவர் ஒருவர் இந்த ஆவணங்களுக்கும் பொறுப்பாக இருந்தார்.

ஏனெனில் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், நாட்டின் சொத்துகள். நாட்டின் சிறந்த கல்வி நிலையங்களில் பயிற்றுவிக்கப்பட்டு நாஜி சிந்தனைகளுக்கு விசுவாசமானவர்களாக உருவாக்கப்படுவார்கள்.

ஜெர்மனி : நாட்டுக்காக நாஜி வீரர்களுடன் குழந்தை பெற்ற ஆரிய பெண்கள்- மறைக்கப்பட்ட சோக வரலாறு
ஜெர்மனி : பொது இடங்களில் பெண்கள் மேலாடையில்லாமல் இருக்க அனுமதி - நிர்வாணத்தை பழகுவது ஏன்?

துணையை தேர்ந்தெடுக்கலாம்

அந்த கோட்டைக்கு உயரமான உருவமும் பொன்னிற முடியும் நீலக்கண்களும் கொண்ட இளைஞர்கள் வந்து சேர்ந்தனர்.

இவர்களுடன் பெண்கள் ஒருவார காலம் பழகி தங்களுக்கு ஏற்ற இணையைத் தேர்ந்தெடுத்தனர். இந்த தம்பதிகளுக்கு ஒரே நிறமான முடியும் கண்களும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இவர்களின் உண்மையான பெயர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரியாது. அதாவது இந்த கோட்டையை விட்டு வெளியேறினால் ஒருவரை ஒருவர் மீண்டும் பார்க்க முடியாது.

எஸ்.எஸ்.படையினர்
எஸ்.எஸ்.படையினர்

துணையைத் தேர்ந்தெடுத்த பெண் மாதவிடாய் முடிந்த 10ம் நாள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் அவர் தேர்ந்தெடுத்த நபருடன் மூன்று நாட்கள் இரவைக் கழித்தார்.

இந்த உறவு குறித்து ட்ரூட்ஸ், "இது பாலியல் உறவு என்பதைத் தாண்டி ஹிட்லருக்காக செய்கிறேன் என்ற பெருமையே எனக்கு அதிமகாக இருந்தது. இதனை என் இணையும் புரிந்துகொண்டிருந்தார். அவருடைய வசீகரமான தோற்றத்தில் நான் கவர்ந்திழுக்கப்பட்டது உண்மைதான், ஆனால் இதைச் செய்ததில் எங்களுக்கு எந்த வித அவமானமும் கிடையாது" எனக் கூறியுள்ளார்.

ட்ரூட்ஸுடன் மூன்று நாட்கள் கழித்த பிறகு அந்த எஸ்.எஸ் அதிகாரி அடுத்த பெண்ணுடன் மூன்று நாட்களைக் கழிக்க உத்தரவிடப்பட்டார்.

ஜெர்மனி : நாட்டுக்காக நாஜி வீரர்களுடன் குழந்தை பெற்ற ஆரிய பெண்கள்- மறைக்கப்பட்ட சோக வரலாறு
கர்ப்பம் தரிக்க இந்தியாவுக்கு வரும் ஜெர்மனி பெண்கள்: தூய ஆரியர்கள் இருப்பது உண்மையா?

குழந்தைகள்

ட்ரூட்ஸ் கருவுற்றிருப்பது உறுதியானதும் அவரைக் மருத்துவ பரிசோதனை செய்து கோட்டையில் இருந்து வெளியேற்றி மகப்பேறு இல்லத்துக்கு மாற்றினர்.

ட்ரூட்ஸுக்கு வலிமிகுந்த கர்ப்பகாலம் முடிந்து சுகப்பிரசவமும் நடந்தது. அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இரண்டு வாரங்கள் தன் குழந்தையை கொஞ்சி பாலூட்டினார் ட்ரூட்ஸ். அதன் பிறகு அந்த குழந்தையை அவரிடம் இருந்து பிரித்து சிறப்பு எஸ்.எஸ் விடுதிக்கு அனுப்பி வளர்த்தனர்.

அந்த குழந்தையையும் அதன் தந்தையையும் அதன் பிறகு ட்ரூட்ஸ் சந்திக்கவில்லை. உடல் நலமான பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

அப்போது மீண்டும் அவரது அமைப்பின் தலைவர் ஹிட்லருக்காக மற்றொமொரு குழந்தை பெற்றுக்கொடுக்க மூளைச் சலவை செய்துள்ளனர். ஆனால் ட்ரூட்ஸ் மற்றொரு இளம் அதிகாரியுடன் பழகி அவரைத் திருமணம் செய்துகொண்டார்.

இத்துடன் கதை முடியவில்லை. தன் கணவரிடம் தான் ஹிட்லருக்காக குழந்தை பெற்றுக்கொடுத்தது குறித்து ட்ரூட்ஸ் கூறியதும் அவர் கணவர் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் அவர் ட்ரூட்ஸிடம் சண்டையிடவும் இல்லை. அது ஒரு நெருடலான விஷயமாக மாறிப்போனது.

ட்ரூட்ஸ் கடைசிவரை தனது குழந்தை குறித்து எந்த தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

லெபென்ஸ்பார்ன் குழந்தைகள் மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொள்ளவில்லை. அவர்களில் பலர் போருக்கு சென்றனர். பெற்றோர் யாரெனத் தெரியாத களங்கமான வாழ்க்கையையே மேற்கொண்டனர்.

ஜெர்மனி : நாட்டுக்காக நாஜி வீரர்களுடன் குழந்தை பெற்ற ஆரிய பெண்கள்- மறைக்கப்பட்ட சோக வரலாறு
"ஹிட்லர் ஒரு யூதர்" - ரஷ்யா கூறுவது உண்மையா? - விரிவான தகவல்கள்

ஹிட்லருக்கு பிறகு?

ஹிம்லர் கருதியது போல லெபென்ஸ்பார்ன் திட்டம் வெற்றிகரமாக செயல்படவில்லை. ட்ரூட்ஸ் போன்ற பெண்கள் குறைவாகவே இருந்தனர்.

தூய ஆரியர்களாக கருதப்பட்ட ஜெர்மனியர்கள் மற்றும் நார்வே மக்கள் உலகின் பிற பகுதிகளில் இருந்து கடத்திவரப்பட்டனர்.

மொத்தமாக 20,000 லெபென்ஸ்பார்ன் குழந்தைகள் பிறந்திருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அந்த குழந்தைகள் தத்துக்கொடுக்கப்பட்டனர்.

அவர்களின் பிறப்பு குறித்து எந்த பதிவுகளும் இல்லாததால் அடையாளமின்மை மற்றும் சமூக புறக்கணிப்புக்கு ஆளாகினர்.

சிலர் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதிமன்றத்தை நாடினர்.

ஜெர்மனி : நாட்டுக்காக நாஜி வீரர்களுடன் குழந்தை பெற்ற ஆரிய பெண்கள்- மறைக்கப்பட்ட சோக வரலாறு
Titanic 1943: ஹிட்லர் உருவாக்கிய டைட்டானிக் திரைப்படம்; வெளிவராதது ஏன்?- சுவாரஸ்ய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com