"இந்த நாட்டில் எலிகளே இருக்க கூடாது" - கங்கணம் கட்டும் அரசும் ஆர்வளர்களும் - எங்கே?

2050க்குள் எலிகளின் கதையை முடிக்க திட்டமிட்டுள்ளனர். இங்குள்ள தனித்துவமிக்க உயிரினங்களைக் காக்க 'வேட்டை விலங்கு இல்லாத நாடாக' உருவாக்க வேண்டும் என்கின்றனர்.
"இந்த நாட்டில் எலிகளே இருக்க கூடாது" - கங்கணம் கட்டும் அரசும் ஆர்வளர்களும் - எங்கே?
"இந்த நாட்டில் எலிகளே இருக்க கூடாது" - கங்கணம் கட்டும் அரசும் ஆர்வளர்களும் - எங்கே?Twitter
Published on

நியூசிலாந்தில் ஒரு எலி கூட இல்லாமல் துரத்திவிட வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும், அரசும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து வருகின்றனர்.

நமக்கு தொல்லையாக இருக்கும் எலிகளை, மருந்து வைத்து கொல்வதும், பூனைகளை வைத்து விரட்டுவதும் வீட்டில் புதிதானதில்லை. ஆனால் நாட்டிலேயே எலிகள் இருக்க கூடாது என நினைக்க என்ன காரணம்? விரிவாக பார்க்கலாம்.

நியூசிலாந்து பிற நாடுகளில் இருந்து மாறுபட்ட சுற்றுசூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. பல அரியவகை உயிரினங்களுக்கு தாயகமாக இருக்கிறது. உலகில் வேறெங்கும் பார்க்க முடியாத பறவைகள் நியூசிலாந்தில் இருக்கின்றன.

எலிகள் அழித்தொழிப்பு

எலிகளை அழித்தொழிப்பது என்பது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. உலகின் பல இடங்களிலும் எலிகளை அழிக்கும் பணியானது நடைபெற்று வந்துள்ளது.

தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள 173 கிலோமீட்டர் நீளமான தெற்கு ஜார்ஜியாதான் எலிகளை முற்றிலுமாக அழித்தொழித்த மிகப் பெரிய நிலப்பரப்பு.

2,68,000 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள நியூசிலாந்தில் இதனை செய்ய முடியும் என இயற்கை ஆர்வலர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

2050க்குள் இதனை செய்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். நியூசிலாந்தின் தனித்துவமிக்க உயிரினங்களைக் காக்க 'வேட்டை விலங்கு இல்லாத நாடாக' உருவாக்க வேண்டும் என்கின்றனர்.

தற்போது மிராமர் என்ற தீபகற்ப பகுதியில் தீவிரமாக எலி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். எலிகளைக் கொல்ல மிகச் சிறந்த வழியான பொறி வைத்து பிடிக்கும் முறையை கையாள்கின்றன.

எலிக்கு இறையாக நிலக்கடலை, வெண்ணையுடன் விஷமும் கொடுக்கப்படுகிறது. தனித்துவமான ஜாக்கெட் அணிந்துள்ள தன்னார்வலர்கள் காட்டுக்குள் சென்று பொறிகளில் எலி மாட்டியிருக்கிறதா எனப் பார்க்கின்றனர்.

இந்த எலி பிடிக்கும் குழுவுக்கு என மொபைல் ஆப் ஒன்று உள்ளது. பொறிகளில் ஜிபிஎஸ் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபரும் ஜிபிஎஸ்ஸை பின்பற்றி எலிப்பொறிகளை கண்டடைகின்றனர். அதில் எலி சிக்கியதா இல்லையா என ஆப்பில் அப்டேட் செய்கின்றனர்.

நியூசிலாந்தில் தனித்துவம்

8.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் இருந்த ஒரு கண்டத்தில் இருந்து பிரிந்த நிலப்பரப்பு தான் நியூசிலாந்து. இதன் அருகில் வேறு நிலப்பரப்புகளே கிடையாது.

அண்டை நாடான ஆஸ்திரேலியா 4000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எனவே இங்கு பெரிய விலங்குகள் எதுவும் வந்து குடியேறவில்லை.

மரங்களும் பூச்சிகளும் பெருகியிருந்த நிலப்பரப்பு பறவைகளுக்கு ஓய்வெடுக்கவும் படுத்துக்கொண்டே வேட்டையாடவும் உகந்ததாக சொர்க்கம் போல இருந்தது.

நியூசிலாந்தின் அடையாளமான கிவி பறவைகளை எடுத்துக்கொள்வோம். அவற்றை அச்சுறுத்தும் எந்த விலங்கும் இல்லாததால் நிலத்திலேயே கூடுகட்டி வாழ்ந்தன. புழுக்களை கொத்தித் தின்றன.

இதனால் இவற்றுக்கு பறக்கும் தேவையே இல்லாமல் போனது. பரிணாம வளர்ச்சியில் இதன் இறக்கைகளுக்கு வேலை இல்லாமல் போனதால் இறக்கையும் போய்விட்டது. இப்போது நியூசிலாந்தின் அடையாளமாக இருக்கிறது கிவி பறவைகள்.

ஆனால் எலிகள் நியூசிலாந்துக்கு மனிதர்களுக்கும் பிறகுதான் வந்து சேர்ந்தன.

 13-ம் நூற்றாண்டில் பாலிநேசியர்கள் சிறிய எலிகளையும், பசிபிக் எலிகளையும் அங்கே கொண்டு சென்றார்கள். 6 நூற்றாண்டுகளுக்குப் பிறகு அங்கே குடியேறிய ஐரோப்பியர்கள் பாலூட்டி விலங்குகளை கொண்டு சென்றார்கள். அவை பறவைகளை உணவாகக் கொள்ள ஆரம்பித்தன. நியூசிலாந்தில் மனிதர்கள் குடியேறிய பிறகு அங்கிருந்த உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு அழிந்துவிட்டது.

எஞ்சியுள்ள பறவைகளை பாதுகாக்க எலிகளை தியாகம் செய்ய நியூசிலாந்து மக்களும் அரசும் முடிவு செய்துள்ளனர். 'வேட்டை விலங்கு இல்லா 2050 நிறுவனம்' என்ற பொது அமைப்பு உருவாக்கப்பட்டு தொடர்ச்சியான முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தடுப்புச் சுவர் சரணாலயங்கள்

நியூசிலாந்தில் பறவைகளை பாதுகாக்க பல வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1999ம் ஆண்டு உலகிலேயே முதன் முறையாக ஸிந்தியா என்ற நகர்புற சரணாலயம் வெலிங்டனில் உருவாக்கப்பட்டது.

அது 8 கிலோமீட்டர் நீள சுற்றுச்சுவரால் பாதுகாக்கப்படுகிறது. உள்ளே செல்பவர்களின் உடைகள் சோதிக்கப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர்.

இத்தனை கெடுபிடியான பாதுகாப்பு அம்சங்களால் அங்கு பறவைகள் செழிப்பாகன் பெருகின. அந்த காட்டை விட்டு வெளியேயும் பறவைகள் வரத் தொடங்கின.

இப்போது நியூசிலாந்து முழுவதும் பல பாதுகாப்பு சுவருடன் கூடிய சரணாலயங்கள் இருக்கின்றன. ஆனால் அதனுள் எலிகள் புகுந்துவிடாமல் இருக்க தொடர்ந்து போராட வேண்டும்.

இந்த விஷயத்தில் மனிதர்களுக்கு நாய்கள் உதவியாக இருக்கின்றன. பாதுகாப்பு அம்சங்களைக் கடந்து உள்ளே செல்லும் எலிகளை நாய்கள் கண்டுபிடித்து விடுகின்றன.

உள்ளூர் சரணாலயங்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள தீவுகளிலும் இதுபோல தடுப்புசுவர் அமைத்துள்ளனர். எல்லாம் எலிகள் நீந்தி வந்துவிடும் என்ற பயத்தில் தான். எலிகளால் 800 மீட்டர் வரை நீந்தி செல்ல முடியும்.

"இந்த நாட்டில் எலிகளே இருக்க கூடாது" - கங்கணம் கட்டும் அரசும் ஆர்வளர்களும் - எங்கே?
நியூசிலாந்து : மனிதர்கள் கடைசியாக குடியேறிய நாடு - 'இயற்கை சொர்க்கமாக' இருப்பது ஏன்?

எலிகளுக்கு உடற்கூறாய்வு

பிடிபடும் இறந்த எலிகளை பரிசோதித்து விஷத்தின் வீரியம் குறித்து அறிந்துகொள்கின்றனர். இறந்தது ஆணா, பெண்ணா? இதன் குட்டிகள் இன்னும் உயிருடன் இருக்குமா? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கின்றனர்.

இது அவர்கள் பிடித்தது ஒரு எலியா அல்லது எலிக்குடும்பத்தின் நபரா என்பதை தெளிவுபடுத்தும். எலிகளை பிடிக்கும் பணியை நிறைவு செய்வது சாத்தியமற்றது என்ற கருத்தும் நிலவுகிறது.

சிலர் நாட்டையே எலிகள் இல்லாததாக மாற்ற வேண்டும் என்பதற்கு பதிலாக குறிப்பிட்ட பகுதிகளில் வீரியமாக செயல்பட்டு எலிகளை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர்.

சிலரோ ஒரு எலி இருந்தாலும் அது வருங்காலத்தில் பெரிய ஆபத்தாக முடியும் என்கின்றனர். யானைக்கு பட்டை அடிப்பதா நாமம் போடுவதா? என பிரச்னை எழுவது போல நியூசிலாந்தில் எலிகள் கோஷ்டி பிரச்னையை நடத்துகின்றன.

"இந்த நாட்டில் எலிகளே இருக்க கூடாது" - கங்கணம் கட்டும் அரசும் ஆர்வளர்களும் - எங்கே?
நியூசிலாந்து: தனி தீவில் இருக்கும் உலகிலேயே தனிமையான மரம் - எப்படி வந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com