சிரியா : நிலநடுக்கத்தில் பிறந்த குழந்தை; தாய் மரணம் - மனதை உருக்கிய வீடியோ

குழந்தையின் இரண்டு பெற்றோர்களும் இடிபாடுகளில் மரணமடைந்துவிட்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சிரியா : நிலநடுக்கத்தில் பிறந்த குழந்தை; தாய் மரணம் - மனதை உருக்கிய வீடியோ
சிரியா : நிலநடுக்கத்தில் பிறந்த குழந்தை; தாய் மரணம் - மனதை உருக்கிய வீடியோTwitter
Published on

சிரியா நிலநடுக்கத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண் ஒருவர் குழந்தையை பெற்று மரணித்துள்ள செய்தி மனதை உருக்குகிறது.

கடந்த திங்கள் கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கிட்டத்தட்ட 8000த்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பல்லாயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்திருக்கின்றன. இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது.

இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய கர்ப்பிணி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கான்கிரீட் பலகைகளுக்கு இடையில் குழந்தை உயிருடன் இருப்பதை தன்னார்வலர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார்.

குழந்தையின் இரண்டு பெற்றோர்களும் இடிபாடுகளில் மரணமடைந்துவிட்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

குழந்தையை மீட்ட மீட்புக் குழுவினர் குழந்தையை பாதுகாத்து வருகின்றனர்.

நிலநடுக்கத்தால் துருக்கி அதிகபட்ச பாதிப்புகளை அடைந்திருந்தாலும் சிரியாவிலும் அதற்கு நிகரான மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

சிரியா : நிலநடுக்கத்தில் பிறந்த குழந்தை; தாய் மரணம் - மனதை உருக்கிய வீடியோ
துருக்கி நிலநடுக்கம்: ”இயற்கை அலாரம்” சிலிர்க்க வைக்கும் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ

துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள மக்களின் துயரம் மிகுந்த கதைகளை சர்வதேச செய்தி தளங்கள் வெளியிட்டு வருகின்றன.

ஏற்கெனவே 12 ஆண்டுகளாக போர், அகதிகள் பிரச்னைகளை சந்தித்து வரும் சிரியாவுக்கு இந்த நிலநடுக்கம் பேரிடியாக உள்ளது.

அதே நேரத்தில், துருக்கியில் மீட்பு பணிகள் நடைபெறுவதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கின்றன. சர்வதேச நாடுகளின் உதவியும் கிடைத்து வருகிறது. ஆனால் சிரியாவில் உதவிக்கான தேவைகளே அதிகமாக உள்ளன என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிரியா : நிலநடுக்கத்தில் பிறந்த குழந்தை; தாய் மரணம் - மனதை உருக்கிய வீடியோ
துருக்கி, சிரியா நிலநடுக்கம் : முன்பே கணித்தாரா இவர்? - விரிவான விளக்கம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com