சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் : தனது பாலினத்தை மாற்றிக் கொள்ள விண்ணப்பித்த எலான் மஸ்க் மகள்

எலான் மஸ்கின் மகன் சேவியர் அலெக்சாண்டர் மஸ்க், தன் பெயரையும், தன் பாலினத்தையும் மாற்றிக் கொள்ள அமெரிக்க நீதிமன்றத்தில் முறையாக விண்ணப்பித்திருக்கிறார்.
Elon Musk
Elon MuskTwitter
Published on

கடந்த காலத்தில், எலான் மஸ்க், மாற்றுப் பாலினத்தவர்கள் தொடர்பான விவகாரங்களை அத்தனை சுமூகமாகக் கையாளவில்லை என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

உலகின் நம்பர் 1 பணக்காரர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் இதுவரை மூன்று பெண்களைத் திருமணம் செய்துள்ளார்.

elon musk
elon muskTwitter

அவர்களில் இருவரை விவாகரத்தும் செய்துவிட்டார். 2022ஆம் ஆண்டு வரை கிரிம்ஸ் என்கிற இசைக் கலைஞரோடு வாழ்ந்து வந்தார். தற்போது கிரிம்ஸையும் பிரிந்துவிட்டதாகச் செய்திகளில் கூறப்படுகிறது. எலான் மஸ்க் இவர்களோடு வாழ்ந்து மொத்தம் எட்டு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

அவர்களில் ஒருவர்தான் சேவியர் அலெக்சாண்டர் மஸ்க். இவர் ஜஸ்டின் வில்சன் மற்றும் எலான் மஸ்குக்குப் பிறந்தவர். 2000 - 2008 வரை ஜஸ்டின் வில்சனும் எலான் மஸ்கும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

Elon Musk
எலான் மஸ்க்: சிறு வயதில் மோசமான நெருக்கடிகள் முதல் உலகின் No 1 பணக்காரர் வரை - யார் இவர்?
Elon Musk
Elon Musktwitter

மாற்றுப் பாலினத்தவரான சேவியர், தன் பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்றிக் கொள்ள விரும்புவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நீதி மன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தன் பாலினத்தைப் பெண் என மாற்றிக் கொள்ளவும் அவ்விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தான் சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க் 18 வயதை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. "நான் என் உயிரியல் ரீதியிலான தந்தையோடு வாழவில்லை, வாழ விரும்பவும் இல்லை. என்னையும் அவரையும் எந்த விதத்திலும் தொடர்புப்படுத்திப் பார்க்க நான் விரும்பவில்லை" என்றும் கூறியுள்ளார் சேவியர் மஸ்க்.

Elon Musk
பாலியல் சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க் - குற்றத்தை மறைக்க பணம் கொடுத்தாரா?

சேவியர் இரட்டைக் குழந்தைகளாக கிரிஃபினோடு பிறந்தார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது. சேவியர் மஸ்கின் பெயர் மாற்றம் தொடர்பான வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தன் மகன் சேவியர் மஸ்க் பெயர் மற்றும் பாலின மாற்றத்துக்கு விண்ணப்பித்திருப்பது குறித்து, ராய்டர்ஸ் முகமை எலான் மஸ்கிடம் மின்னஞ்சல் மூலம் கருத்துக் கேட்ட போது, எலான் மஸ்க் அல்லது அவரது அலுவலகத்திலிருந்து எந்த வித கருத்தும் கூறவில்லை எனச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Elon Musk
Elon Musk: சீனாவிலும் ஒரு எலான் மஸ்க் ? காண விரும்பும் ட்விட்டர் சிஇஓ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com