இங்கு யாரும் பிறக்கவோ இறக்கவோ முடியாது: உலகிலேயே மகிழ்ச்சியான ஊரின் கதை!

இந்த ஊரில் யாராலும் பிறக்கவும் இறக்கவும் முடியாது. ஆனால் இடைப்பட நாட்களில் சொர்க்கத்தில் இருப்பது போல வாழ்வைக் கழிக்க முடியும். இந்த சொர்க்கபுரி விசா இல்லாமலேயே அங்கு வாழ அழைப்பது ஏன் தெரியுமா?
ஸ்வால்பார்ட்
ஸ்வால்பார்ட்Twitter
Published on

உலகின் மகிழ்ச்சியான நாடாக அறியப்படும் நார்வேயின் ஒரு பகுதியில் மட்டும் விசா இல்லாமலேயே வேலைக்கு சேர முடியும்.

நாம் சுற்றுலா விசாவில் அங்கு சென்றாலே போதும் வேலைத் தயாராக இருக்கும். சாதாரண கைத்தொழில்கள், உணவக வேலைகள், பல்கலைகழகத்தில் பணி என பல வேலைகள் அங்கு கிடைக்கலாம். உலகின் எந்த நாட்டிலிருந்தும் எளிதாக குடியேற முடிவது இங்கு தான்.

ஸ்வால்பர்ட் என்ற தீவுக் கூட்டம் தான் இந்த சலுகைகளைக் கொண்டுள்ளது. இங்கு கடுமையான குளிரைத் தாங்கிக்கொண்டு வேலை செய்ய வேண்டியது இருக்கும்.

ஸ்வால்பர்ட் -ன் தலைநகரம் லாங்யர்பைன். இதுதான் பூமியின் வடக்கு உச்சியில் மனிதர்கள் வாழும் நகரமாக அறியப்படுகிறது. இந்த நகரத்தில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000 மக்கள் வசிக்கின்றனர்.

இங்கு வடதுருவக்காரர்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் வாழ்வதாக கூறுகின்றனர். வடதுருவ நாடுகளே தொடர்ந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகளாக அறியப்படுகிறது.

பின்லாந்து, டென்மார்க், நார்வே, சுவீடன் மற்றும் ஐஸ்லாந்து என அனைத்து நாடுகளும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடத்துக்குள் இருக்கின்றன. இந்த பட்டியலில் இந்தியா கடைசி பத்து இடங்களுக்குள் தான் இருந்துவருகிறது.

இந்த மகிழ்ச்சியான நாட்டில் மென்மையான மக்கள் மத்தியில் வாழும் வாய்ப்பு மிக எளிதாக கிடைப்பது ஆச்சரியம் அளிக்கிறது அல்லவா? ஒருவேளை அங்கு வேலைக்கு சேர்ந்து விட்டால் என்ன என்ன பார்க்க முடியும்? வாழ்க்கை என்னவாக இருக்கும் என்பவற்றைப் பார்க்கலாம். அதற்கு முன் மனதில் கொள்ளுங்கள் நீங்கள் வேலைக்கு சேரப்போகும் இந்த நகரம் ஒரு பூலோக சொர்க்கம்.

நார்வேயின் பிரதான நிலப்பரப்புக்கும் வடதுருவமுனைக்கும் இடைப்பட்ட கடல்பரப்பில் இந்த தீவுக்கூட்டம் அமைந்துள்ளது.

நார்வேயின் ஸ்வால்பார்ட் நகரத்துக்கு மட்டும் தான் நாம் விசா இல்லாமல் சென்று தங்க முடியும். பிற பகுதிகளுக்கு செல்ல முடியாது. எனவே நீங்கள் அங்கு வேலைக்கு சேர்ந்தால் நார்வே வந்து செல்ல விசா தேவைப்படலாம்.

இந்த தீவுக்கூட்டம் 1596 வில்லெம் பேரண்ட்ஸ் என்ற டச்சுக்காரரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்பிட்ஸ்பெர்கன் என்று பெயரிட்டார். இந்த பெயருக்கு "கூர்மையான மலைகள்" என்று பெயர்.

நார்வேயின் அரசு தான் ஸ்வால்பார்ட் சட்டங்களை செயல்படுத்துவது, உள்கட்டமைப்புகளைப் பார்த்துக்கொள்வது, வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது.

2012ம் ஆண்டு விவரப்படி ஸ்வால்பார்ட் மக்கள் தொகை 2,642. இது அங்கு வசிக்கும் பனிக்கரடிகளின் எண்ணிக்கையை விடக் குறைவாம். அங்கு 3000க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் இருக்கின்றன.

அங்குள்ள பனிக்கரடிகளை நகரத்தில் பார்ப்பது எளிதல்ல என்றாலும் சுற்றுலாப்பயணிகள் வருகையின் போது பனிக் கரடிகள் வேட்டையாடப்படுவதாகக் கூறப்படுகிறது.

நீங்கள் ஸ்வால்பார்ட்டில் பணியில் சேர்ந்து விட்டால் பனிக்கரடிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். இதற்காக துப்பாக்கி சுட கற்றுக்கொள்ள வேண்டியது வரலாம். இங்குள்ள தாய்மார்கள் கூட குழந்தைகளுடன் வெளியில் செல்லும் போது முதுகில் துப்பாக்கியுடன் தான் செல்கின்றனர்.

பனிக்கரடி வேட்டையாடுதல், திமிங்கலங்களை வேட்டையாடுதல் போன்றவை வரலாற்று சிறப்பு மிக்க தொழிலாக இருந்தாலும் இப்போது தேசியப் பூங்காக்கள் அமைத்து இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தீவில் மூன்றில் இரண்டு பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

பொருளாதார ரீதியில் இந்த தீவுக்கூட்டத்துக்கு வலு சேர்க்க அதிக சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்று அங்கு வசிப்பவர்கள் எதிர்பாக்கின்றனர். உங்கள் வேலையானது சுற்றுலா சார்ந்ததாகவும் அமையாலாம்!

பனி மலைகள், பனிக்கட்டிகள், மலைகளுக்கு இடையில் வழிந்தோடும் ஆழமான ஆறுகள் ஆகியவை பார்ப்பதற்கு ரம்மியமான காட்சிகளாக இருக்கின்றன. கொள்ளை அழகு கேள்விப்பட்டிருப்பீர்கள் வெள்ளை அழகு என்று ஒன்று இருக்கிறதென்றால் அது ஸ்வாலாபார்டின் அழகு தான்!

உங்கள் வேலையை விட, துருவக்கரடிகளை விட அங்கு இருக்கும் மிகப் பெரிய சவால் காலநிலை தான். 6.8 டிகிரி ஃபாரன்ஹீட் என குளிர்காலத்திலும், 42.8 டிகிரி ஃபாரன்ஹீட் எனக் கோடைக் காலத்திலும் இருக்கும்.

ஆண்டில் நான்கு மாதங்கள் முழுவதும் பகலாகவும் நான்கு மாதங்கள் இரவாகவும் இருக்கும். துருவ கோடை, சூரிய குளிர்காலம், நார்தன் லைட்ஸ் குளிர்காலம் என மூன்று பருவக்காலங்கள் தான் அங்கு இருக்கும்.

மிகவும் குறைவான மக்கள் என்பதால் ஒரே முகங்களை மீண்டும் மீண்டும் பார்க்க நேரிடுவது கொஞ்சம் போர் அடிக்கலாம். ஆனால் இதனால் தான் கொஞ்சமும் குற்றங்கள் இல்லாமல் இருக்கிறது இந்த தீவுக்கூட்டம். சிறிய குற்றச் செயலுக்கு கூட இந்த சொர்க்கபுரியை விட்டு உங்களை துரத்திவிடுவார்கள்.

ஸ்னோமொபைலிங், டாக்ஸ்லெடிங் மற்றும் பனிச்சறுக்கு என விளையாட்டுக்களுடன் நாட்களைக் கடத்தலாம். தலை நகரில் கடைகள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், பார்கள், உணவகங்கள், நூலகம் மற்றும் சினிமா என நேரத்தைச் செலவிடலாம்.

ஸ்வால்பார்ட்
உலகில் வாழ்வதற்கு சிறந்த 10 நகரங்கள் இவைதான் - ஓர் அடடா தகவல்

லாங்யர்பைன் நகரில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் இருப்பதால் கலாச்சார செழிப்புடன் இந்த நகரம் இருக்கும். பலவகை இசைகள், கலாச்சார நிகழ்வுகள், ப்ளூஸ் திருவிழா முதல் ப்ரைட் பேரணி வரை களைகட்டும். நீங்கள் பல நாட்டு பார்டிகளை அட்டன்ட் செய்ய வாய்ப்புக் கிடைக்கலாம்.

1920ம் ஆண்டு வரை இந்த பகுதிக்கு அரசாங்கமே இல்லாமல் இருந்தது. முதலாம் உலகப் போருக்கு பிறகு ஸ்வால்பார்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு நார்வேயில் இணைத்துக்கொள்ளப்பட்டது. எனினும் இங்கு யார் வேண்டுமானாலும் வந்து விசா இல்லாமல் தங்கிக்கொள்ளலாம் என்ற விதியை காத்துக்கொண்டது.

நீங்கள் ஸ்வால்பார்ட்டுக்கு செல்வதாக தெரிவித்துவிட்டால் அங்கு சென்று சேருவதற்கு முன்னதாகவே வீடு மற்றும் வேலையை அரசாங்கம் தயாராக வைத்திருக்கும்.

இங்கு இருக்கும் மற்றொரு நெகடிவ், மிகவும் தீவிர உடல் நலக் குறைவு அல்லது பிரசவத்துக்கு வைத்தியம் பார்க்கும் அளவு இங்கு வசதிகள் கிடையாது. இங்கிருக்கும் பெண்கள் குழந்தைப் பேற்றுக்காக நார்வேயின் முக்கிய பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

இறந்தவர்களை எரிப்பதற்கும் புதைப்பதற்கும் இங்கு வசதிகள் கிடையாது. அதாவது இங்கு பிறக்கவும் இறக்கவும் உங்களால் முடியாது.

ஸ்வால்பார்ட்
நவ்ரூ : வளமான நாடு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட கதை - இருண்ட வரலாறு

டூம்ஸ்டே பெட்டகம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகத்தில் இருக்கும் அனைத்து விதைகளும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் ஓர் பெட்டகம் அது. அது இந்த குளிரில் தான் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. எந்த இயற்கை சீற்றத்தாலும் போரினாலும் பாதிக்கப்படாத வண்ணம் மலைகளில் அது இருக்கிறது.

தீவில் விலங்குகளை பாதுகாப்பதற்காக 1992ம் ஆண்டு முதல் பூனைகள் தடைசெய்யப்பட்டன. உங்கள் செல்லப் பூனையை அங்கு எடுத்துச்செல்ல முடியாது.

நீங்கள் மது அருந்துபவராக இருந்தால் வேறு வழியில்லை கட்டுப்பாடுடன் தான் இருந்தாக வேண்டும். இங்குள்ள ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட அளவு மட்டுமே ஆல்கஹால் வழங்கப்படுகிறது.

இங்கு வசிப்பதன் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் உலகமெங்கும் இருக்கும் பயணிகள் பார்க்கத் தவமிருக்கும் நார்தன்லைட்ஸை உங்களால் நிச்சயம் பார்க்க முடியும் என்பது தான்.

ஸ்வால்பார்ட்
லிச்சென்ஸ்டீன் எனும் பூலோக சொர்க்கம் - ஆஹா இப்படியும் ஒரு நாடா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com