வட கொரியா: இதன் காரணமாக, இவர்களால்தான் பரவியது கொரோனா - கிம் ஜாங் பகிரும் பகீர் தகவல்

வடகொரிய மக்கள் இருவர் தென்கொரிய எல்லையில் அடையாளம் தெரியாத பொருட்களோடு தொடர்பு கொண்டதால் அவர்களுக்கு கோவிட் தொற்று வந்ததாம். இதை அதிகாரிகள் புலனாய்வு செய்து கண்டுபிடித்ததாக வடகொரிய அரசு ஊடகம் கூறுகிறது.
Kim Jong Un
Kim Jong UnTwitter
Published on

வடகொரியாவில் கோவிட் தொற்று திடீரென்று அதிகரித்ததற்குக் காரணம் என்ன? தென்கொரியாவின் எல்லையில் இறங்கிய "அன்னிய" பொருட்கள் என்கிறது வட கொரிய தலைநகரம் பியோங்யாங்கில் உள்ள அரசு ஊடகம்.

வடகொரியாவும் தென்கொரியாவும் பிரிந்ததிலிருந்து இருநாட்டு எல்லையும் எப்போதும் பதட்டமாகவே இருந்து வருகிறது. பல வருடங்களாக தென்கொரியாவின் சமூக ஆர்வலர்கள் பிரசுரங்களையும், மனிதாபிமான உதவிப் பொருட்களையும் பலூன்கள் மூலம் வட கொரிய எல்லையில் பறக்கவிட்டு இறக்கி வருகின்றனர்.

இப்படி தென்கொரிய எல்லையிலிருந்து வரும் பொருட்கள் மீது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வட கொரியா தன்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதைத் தென் கொரிய அரசு மறுத்திருக்கிறது. அப்படி ஒரு வழியில் கோவிட் தொற்று வடகொரியாவில் பரவுவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறது.

வடகொரிய மக்கள் இருவர் தென்கொரிய எல்லையில் அடையாளம் தெரியாத பொருட்களோடு தொடர்பு கொண்டதால் அவர்களுக்கு கோவிட் தொற்று வந்ததாம். இதை அதிகாரிகள் புலனாய்வு செய்து கண்டுபிடித்ததாக வடகொரிய அரசு ஊடகம் கூறுகிறது.

Balloons of South Korea
Balloons of South KoreaTwitter

18 வயது இராணுவ வீரர் மற்றும் 5 வயதுக் குழந்தை இருவருக்கும் ஏப்ரல் மாதம் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் எல்லையில் மலைப்பகுதியான இப்கோரியில் சில பொருட்களைத் தொட்டதே காரணம் என்று அந்த ஊடகம் கூறியிருக்கிறது. அதன் பிறகுதான் வடகொரியாவில் கோவிட் அலை பெருமளவு பரவியதாகவும் மேற்கண்ட செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

எனவே மக்கள் தென்கொரிய எல்லையிலிருந்து பலூன்கள் மூலமாகவோ, காற்றிலோ, பிற தெரியாத பொருட்களாகவோ வருபவற்றில் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படி அடையாளம் தெரியாத பொருட்கள் வந்தால் மக்கள் உடனே அரசின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

வடகொரியாவின் இந்த செய்தி அறிக்கையில் நேரடியாக தென்கொரியாவைச் சொல்லவில்லை என்றாலும் மறைமுகமாகக் குற்றம் சாட்டியிருப்பது உண்மை. இதை தென்கொரியாவில் ஐக்கியத்திற்கான அமைச்சரவை கடுமையாக மறுத்திருக்கிறது. வடகொரியா சொல்வது போல தங்கள் நாட்டிலிருந்து கோவிட் தொற்று அடையாளம் தெரியாத பொருட்கள் மூலம் வடகொரியா செல்லவில்லை என்று தென்கொரியா மறுத்திருக்கிறது.

North Korea - South Korea Border
North Korea - South Korea BorderTwitter

உலகிலேயே மிகவும் பதட்டமான எல்லை என்றால் அது வடகொரியா - தென்கொரியா எல்லைதான். இந்த எல்லையில் இருநாட்டு பாதுகாப்பும் மிகக் கடுமையாக இருக்கும். எனினும் தென் கொரியச் சமூக ஆர்வலர்கள் வடகொரியா அரசை எதிர்த்து தமது பிரச்சாரத்தை பலூன் மூலம் நோட்டிஸ்களாக வடகொரியாவில் இறக்கி வருகிறார்கள்.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து வட கொரியாவில் 47 இலட்சம் பேருக்கு புதிய வகை காய்ச்சல் வந்ததாகக் கூறப்படுகிறது. இது கோவிட் தொற்றாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Kim Jong Un
வட கொரியா : கொரோனாவுக்கு அடுத்த ஆபத்து, பரவும் புதிய தொற்று - என்ன நடக்கிறது அங்கே?

இந்த கோவிட் அலையை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது நாட்டில் இதுவரை இல்லாத பெரும் கொந்தளிப்பு என்று விவரித்திருக்கிறார். இதை வடகொரிய அரசு ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

இந்த ஆண்டு தொடக்கம் வரை வட கொரியாவில் கோவிட் தொற்று இல்லை. இது உலக கோவிட் அலையிலிருந்து தனிமைப்பட்டிருந்ததாக வடகொரிய அரசு கூறியது. ஆனால் நிபுணர்கள் இதற்கு முன்பே அங்கே வைரஸ் பரவியிருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

Covid in North Korea
Covid in North KoreaTwitter

வடகொரியாவின் மக்கள் 2 கோடியே 50 லட்சம் ஆகும். இங்கே பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மோசமாக இருப்பதினாலும், தடுப்பூசி திட்டம் இல்லாததினாலும் கோவிட் அலை பரவுவதற்கு பெரும் வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் சமீபத்திய வாரங்களில் வடகொரிய அரசு சீனாவின் தடுப்பூசிகளை ஏற்பதாக ஊடக செய்திகள் வெளிவந்தன.

தற்போது வட கொரியாவில் எத்தனை மக்கள் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. கடந்த சில வாரங்களாக வட கொரிய அதிகாரிகள் புதிய கோவிட் தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்திருப்பதாகக் கூறினாலும் பலர் வட கொரிய அரசு தொற்றின் எண்ணிக்கை குறைத்து வெளியிடுவதாகச் சந்தேகிக்கிறார்கள்.

2020ஆம் ஆண்டிலிருந்து வடகொரிய அரசு சீனாவுடனான இரயில் பயணத்தை மீண்டும் துவக்கியது. அதற்கு முன்பு வரை கோவிட் பொது முடக்கத்தை வடகொரியா பின்பற்றி வந்தது. இரயில் பயணம் சகஜமானதிலிருந்து கோவிட் தொற்று வடகொரியாவில் பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Kim Jong Un
வட கொரியா வரலாறு : ஏன் இந்த சிறிய நாட்டை கண்டு அஞ்சுகிறது அமெரிக்கா? - பகுதி 2

ஆனால் வட கொரியா இதை ஒத்துக் கொள்ளாது. ஏனெனில் சீனாவில் கோவிட்டின் திரிபான ஒமிக்ரான் வைரஸ் பெருமளவு பரவியது இதே காலத்தில்தான். அதை ஒட்டியே வடகொரியாவிலும் வைரஸ் பரவவிருக்க வேண்டும். இதை வெளிப்படையாகப் பேசினால் சீனாவுடனான ராஜாங்க உறவு பாதிக்கப்படும் என்பதால் வடகொரியா இதை அடக்கி வாசிக்கிறது.

சீனாவிலிருந்துதான் வைரஸ் வந்திருக்க வேண்டும் என்று சீன எல்லையை மூடி தனிமைப்படுத்தலைக் கடுமையாக்கினால் வட கொரிய – சீன வர்த்தகம் பாதிக்கப்படும் என்று வட கொரியா அஞ்சுகிறது. ஏற்கனவே பொருளாதாரத் தடையினால் பாதிக்கப்பட்டிருக்கும் வட கொரியாவிற்கு ஒரே வாய்ப்பு சீனாவின் உதவிதான்.

ஆக சீனாவிலிருந்து பரவிய வைரஸ் வடகொரியாவை ஒரு காட்டுக் காட்டியிருப்பதும் உண்மை. அதை மறுக்கவே தென் கொரிய எல்லையிலிருந்து அடையாளம் தெரியாத பொருட்கள் மூலம் வைரஸ் பரவுவதாக வட கொரியா கதை விடுகிறது.

Kim Jong Un
வட கொரியா : கிம் வம்சத்தின் வரலாறு | Part 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com