உலகில் பல நாடுகள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்துவமான பின்னணியை கொண்டுள்ளன. உலகின் பெரிய நாடு, சிறிய நாடு, ஒரு குறிப்பிட்ட மதத்தவரை மட்டும் கொண்ட நாடு என சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு நாடு என்று இருந்தால் அதில் பல தரப்பு மக்கள், பல மதங்களை பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர்.
ஆனால் ஒரு முஸ்லீம் மதத்தவர் கூட இல்லாத நாடு குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த நாடு குறித்தும், நாட்டின் சிறப்பு குறித்தும் தெரிந்துக்கொள்வோம்.
உலகின் பெரும்பாலான நாடுகளில் இஸ்லாமியர்கள் பரவி வாழும் நிலையில், ஒரு இஸ்லாமியர்கள் கூட வாழாத நாடு எது என்றால் அது வாடிகன் சிட்டி.
ஐரோப்பிய நாடான வாட்டிகன் சிட்டி உலகம் முழுவதும் பரவியுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமையிடமாகக் கருதப்படுகிறது. கிறிஸ்துவர்களின் மத குருவான போப் ஆண்டவர் இங்கு தான் வசித்து ஆட்சி செய்கிறார்.
வாட்டிகன் நகரம் இத்தாலியின் ரோம் நகரத்தால் சூழப்பட்டுள்ளது. இது வெறும் 0.17 சதுர மைல்கள் அல்லது 0.44 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது நிலப்பரப்பில் உலகின் மிகச்சிறிய நாடாக அமைகிறது.
ஹோலி சீ என்றும் அழைக்கப்படும் இந்த நாடு கிறிஸ்த்தவ மதத்தின் முக்கியமான ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை தேவாலயத்தைக்கொண்டுள்ள நாடாகும்.
இது வாட்டிகன் நகரம் இத்தாலியின் ரோம் நகரத்தால் சூழப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கு சொந்த ராணுவமும் கூட இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு வாட்டிகன் நகரத்தைப் பாதுகாக்க சுவிஸ் மிஷனரிகள் போப்களால் நியமிக்கப்பட்டனர்.
அன்றில் இருந்து இத்தாலிய ராணுவ உதவியுடன் சுவிஸ் காவலர்கள் தான் வாட்டிகன் சிட்டியை பாதுகாக்கின்றனர். சிறை இல்லாத நாடாகவும் வாட்டிகன் நகரம் உள்ளது. மாறாக இங்கு குற்றம் செய்பவர்கள் இத்தாலி சிறைக்கு அனுபவிக்கின்றனர்.
2019 புள்ளி விவரப்படி இந்நாட்டின் மக்கள் தொகை 453 மட்டுமே. இது உலகின் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்று என்பதை சுட்டிக்காட்டுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust