அமெரிக்க அணு உலை : கசிந்த கதிரியக்க நீர், அதிர்ச்சியில் அமெரிக்க மக்கள் - என்ன நடந்தது?

ஒரு கட்டடத்தில் இருந்து மற்றொரு கட்டடத்துக்கு செல்லும் குழாயில், கதிரியக்கம் கொண்ட நீர் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மாகாண அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை வரை இந்த விஷயத்தை வெளியே பொது மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்றும் பல்வேறு ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அணு உலை : கசிந்த கதிரியக்க நீர், அதிர்ச்சியில் அமெரிக்க மக்கள் - என்ன நடந்தது?
அமெரிக்க அணு உலை : கசிந்த கதிரியக்க நீர், அதிர்ச்சியில் அமெரிக்க மக்கள் - என்ன நடந்தது?Twitter
Published on

அமெரிக்காவில் மினிசோட்டா என்கிற பகுதியில் இயங்கி வரும் ஒரு எனர்ஜி நிறுவனத்தின் அணு உலை செயல்படும் வளாகத்துக்குள் கதிரியக்கம் கொண்ட நீர் கசிவதாகச் செய்திகள் வெளியாயின. தற்போது அந்தக் கசிவு கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அந்நிறுவனத்தின் பணிகள் அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எக்ஸெல் எனர்ஜி என்கிற நிறுவனம், மினிசோட்டா பகுதியில் ஒரு அணு உலையை நடத்தி வருகிறது. தங்கள் ஆலையில் இருந்து வெளியாகும் கதிரியக்கம் கொண்ட நீரை, தங்கள் வளாகத்துக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும், தங்கள் ஆலையை விட்டு கதிரியக்க நீர் வெளியே செல்லவில்லை என்றும் கூறியுள்ளது.

இந்த ஆலையில் இருந்து கதிரியக்கம் கொண்ட நீர் கசிந்ததால், பொது மக்களுக்கு உடனடியாக எந்தவித உடல்நலக் குறைபாடும் ஏற்படாது என்று அந்த மாகாண அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த 2022 நவம்பர் மாதத்திலேயே, மாண்டிசெல்லோ ஆலையில் செயல்பட்டு வரும் அணு உலை வளாகத்தில், ஒரு கட்டடத்தில் இருந்து மற்றொரு கட்டடத்துக்கு செல்லும் குழாயில், கதிரியக்கம் கொண்ட நீர் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மாகாண அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை வரை இந்த விஷயத்தை வெளியே பொது மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்றும் பல்வேறு ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் ஆலையில் கதிரியக்க நீர் கசிவு ஏற்பட்ட விவரத்தை அடுத்தடுத்த நாட்களிலேயே மாகாண அதிகாரிகள் மற்றும் என் ஆர் சி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி இருப்பதாகவும் பிபிசி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த மாண்டிசெல்லோ ஆலையில் இருந்து, சுமார் 35 மைல் தொலைவில், அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழும் மினியாபொலிஸ் என்கிற நகரம் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் மிசசிப்பி ஆறும் அருகிலேயே உள்ளது. மிசசிப்பி ஆற்றில் கதிரியக்கம் கொண்ட நீர் கலக்கவில்லை என மினிசோட்டாவின் சுகாதாரத் துறை கூறியுள்ளது.

அமெரிக்க அணு உலை : கசிந்த கதிரியக்க நீர், அதிர்ச்சியில் அமெரிக்க மக்கள் - என்ன நடந்தது?
ஒரு அரேபிய குதிரை 82 லட்சமா? உலகெங்கிலும் உள்ள விலையுயர்ந்த விலங்குகள் குறித்து தெரியுமா?

கதிரியக்கம் கொண்ட நீரில், டிரிடியம் (tritium) இருக்கிறது, இது அணு உலை இயக்கத்தில் உருவாகும் ஒரு உபப் பொருள். அதே போல கதிரியக்க ஹைட்ரஜனும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இவை இரண்டும் மிக பலவீனமாக பீட்டா கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் என்றும், காற்றில் அதிக தொலைவுக்கு இந்த கதிரியக்க சமாச்சாரங்கள் பயணிக்காது, அதே போல இந்த கதிரியக்கம் மனித உடலில் உள்ள தோல் பகுதியை துளைத்துக் கொண்டு உள்ளே செல்லாது என்றும் ஃபெடரல் நியூக்லியர் ரெகுலேட்டரி கமிஷன் என்கிற அமைப்பு கூறியுள்ளது.

மேற்கொண்டு வேறு எங்காவது கதிரியக்க நீர் கசிவு இருக்கிறதா என, எக்ஸெல் எனர்ஜி வளாகத்துக்குள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஏற்கனவே கசிவு ஏற்பட்ட பகுதியில் பயன்படுத்தப்பட்ட குழாய் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அணு உலை : கசிந்த கதிரியக்க நீர், அதிர்ச்சியில் அமெரிக்க மக்கள் - என்ன நடந்தது?
ரஷ்யாவிடம் அணு ஆயுதங்கள் உள்ளதா ? அமெரிக்கா, ஐரோப்பா சேர்ந்து ரஷ்யாவை வெல்ல முடியுமா?

இதுவரை நீர் கசிவில் வெளியான ட்ரிடியத்தில் 25 சதவீதத்தை மீட்டெடுத்துவிட்டதாகவும், எதிர்காலத்தில் கதிரியக்கம் கொண்ட அசுத்தமான நீரை ஒரு டேங்கில் சேகரித்து வைக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

மறுபக்கம் ட்ரிடியம் & தண்ணீரை எப்படி மீண்டும் பயன்படுத்துவது, எப்படி சுத்திகரிப்பது அல்லது எப்படி பாதுகாப்பாக வெளியேற்றுவது என்பது குறித்த ஆலோசனைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது எக்ஸெல் எனர்ஜி. கடந்த 2009ஆம் ஆண்டு இதே எக்ஸெல் எனர்ஜி நிறுவனத்தின் மாண்டிசெல்லோ ஆலையில் சிறு கசிவு ஏற்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அணு உலை : கசிந்த கதிரியக்க நீர், அதிர்ச்சியில் அமெரிக்க மக்கள் - என்ன நடந்தது?
அமெரிக்கா - ரஷ்யா அணு ஆயுத போர் நடந்தால் எத்தனை பேர் உயிரிழப்பர்? : அதிர வைக்கும் தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com