சீனாவில் அதிகரிக்கும் “ஒரு நாள் திருமணம்” - என்ன காரணம்? மணமக்களின் நிலை என்ன?

திருமண வாழ்வின் அனைத்தும் இந்த ஒரு நாளில் நடக்கிறது. மறுநாள் நீ யாரோ நான் யாரோ என்று சென்று விடுகின்றனர் இந்த ’தம்பதிகள்’.
சீனாவில் அதிகரிக்கும் “ஒரு நாள் திருமணம்” - என்ன காரணம்? மணமக்களின் நிலை என்ன?
சீனாவில் அதிகரிக்கும் “ஒரு நாள் திருமணம்” - என்ன காரணம்? மணமக்களின் நிலை என்ன?Canva (rep)

திருமணம் என்பதன் மூலக்கரு என்னவாக இருந்தாலும், அதனைச் சுற்றியுள்ள வழக்கங்கள், நம்பிக்கைகள் மாறுபடுகின்றன.

திருமணங்கள் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப வித்தியாசமான சடங்குகளையும் கொண்டுள்ளன.

சீனாவிலும் திருமணம் குறித்த ஒரு விதமான நம்பிக்கையே அங்கு “ஒரு நாள் திருமணம்” என்ற வழக்கத்தை தலைத்தூக்க வைத்துள்ளது.

அது என்ன ஒரு நாள் திருமணம்? ஏன் இந்த பழக்கம் சீனாவில் அதிகரித்துள்ளது?

சீனாவில் மக்கள் தொகையை கடுப்படுத்தும்பொருட்டு குழந்தைப்பேரில், திருமணங்களில் கடும் சட்டங்கள் இயற்றப்பட்டன. இளைஞர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதாலும், இளைஞர்கள் மத்தியில் திருமணம் மீதான நம்பிக்கை குறைந்ததாலும் சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அப்படி இருக்கையில், தற்போது சீனாவில் ஒரு நாள் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன.

திருமணமாகாத ஆண்கள் ஒரு நாளைக்கு மட்டும் மணமகனாகிறார்கள். சீனாவின் ஹெபெய் பகுதியில் ஒரு இந்த வழக்கம் அதிகமாக இருக்கிறது என சவுத் சைனா மார்னிங் போச்ட் தளம் கூறுகிறது.

கல்யாணம் ஆகாமல் இறக்கும் ஆண்களுக்கு அவர்களின் மூதாதயர்கள் புதைக்கப்பட்ட கல்லறைகளில் புதைக்க அனுமதியில்லை. கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.

இதனால் இவர்கள் ஒரு நாளைக்கு மட்டும் திருமணமானவர்களாக இருக்கின்றனர்.

சீனாவில் அதிகரிக்கும் “ஒரு நாள் திருமணம்” - என்ன காரணம்? மணமக்களின் நிலை என்ன?
சீனா: சிங்கிள்களுக்கு லீவு கொடுத்து 'லவ் பண்ண சொல்லும்' கல்லூரிகள் - என்ன காரணம்?

திருமண வாழ்வின் அனைத்தும் இந்த ஒரு நாளில் நடக்கிறது. மறுநாள் நீ யாரோ நான் யாரோ என்று சென்று விடுகின்றனர் இந்த ’தம்பதிகள்’.

இந்த ஒரு நாள் திருமணத்தை செய்துவைக்க அங்கு குறிப்பிட்ட நபர்கள் இருக்கின்றனர். அவர்களிடம் மணமகள்களாக பெண்கள் பணியாற்றுகின்றனர். இதற்கு அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் வழங்கப்படுகிறது. ஒரு நாள் திருமண வாழ்வு முடிந்ததும் அவர்கள் இயல்பான வேலைகளுக்கு திரும்பி விடுகின்றனர்.

எல்லா வயதுடைய பெண்களும் இந்த பணியை செய்கின்றனர்.

திருமணம் முடிந்து மூதாதயர்களின் கல்லறைக்கு சென்று மனைவிகளை இறந்தவர்களுக்கு காட்டுகின்றனர் இளைஞர்கள். தங்கள் தனிமை நீங்கிவிட்டதாக அவர்களுக்கு தெரியப்படுத்திய பின்னர் அவர்களின் வேலை முடிந்தது.

திருமணத்திற்கு பெற்றோர் அதிக செலவு செய்வதும், இல்லற வாழ்வில் இளைஞர்கள் ஆர்வம் இழந்ததால் இத்தகைய வழக்கத்தை பின்பற்றி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனாவில் அதிகரிக்கும் “ஒரு நாள் திருமணம்” - என்ன காரணம்? மணமக்களின் நிலை என்ன?
சீனா: திருமணம் மீறிய உறவில் இருந்தால்... ஊழியர்களுக்கு கறார் கண்டிஷன் போட்ட நிறுவனம்- ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com