ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் கடந்த ஆண்டு இதே நாளில் போர் தொடுத்தது. போர் இன்னும் நின்றபாடில்லை. அது குறித்த எந்த சமிக்ஞையும் புதின் தரப்பிலிருந்தும் வரவில்லை
உக்ரைனின் கீழ் இருந்த இரணடு இடத்தை சுதந்திர நாடுகளாக அறிவித்து மூன்றே நாட்களில் “ராணுவ நடவடிக்கை” எனக் கூறி உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தினார் ரஷ்ய அதிபர் புதின்.
முதலில் கீவின் ராணுவ தளத்தை மட்டுமே குறிவைப்பதாகவும், பொது மக்களை இதில் நாங்கள் சீண்டமாட்டோம் எனக் கூறியது ரஷ்ய தரப்பு.
மெல்ல உக்ரைனுக்குள் ஊடுருவி, முக்கிய நகரங்கள், கட்டிடங்கள், சின்னங்கள் என அனைத்தையும் சேதப்படுத்தியது. ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர்.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, மிகப் பெரிய யுத்தமாக இருக்கும் ரஷ்ய உக்ரைன் போர், ஓராண்டை எட்டியுள்ளது.
இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள முக்கிய நினைவுச்சின்னங்களில் மஞ்சள் மற்றும் நீல நிறத்தில் (உக்ரைன் தேசியக் கொடி நிறம்) விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளன.
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் இது செய்யப்பட்டுள்ளது.
பாரிஸின் முக்கிய அடையாளமாக இருக்கும் ஈஃபிள் டவரில் இந்த மஞ்சள் மற்றும் நீல நிற விளக்குகள் ஒளிரவிடப்பட்டது.
வியாழனன்று லண்டன் நாட்டு மக்கள் உக்ரைன் கொடியை தங்கள் மீது சுற்றிக்கொண்டு டிராஃபல்கர் ஸ்கொயர் என்ற இடத்தில் ஒன்று திரண்டிருந்தனர். அவர்கள் கைகளில் “புட் புதின் இன் தி பின்” என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்
பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் இருக்கும் ஐரோப்பிய பாராளுமன்ற கட்டிடத்திலும் நேற்றிரவு மஞ்சள் நீல நிற விளக்குகள் ஒளிரவிடப்பட்டது.
ரஷ்யா போர் தொடுத்து முதல் சில மாதங்களில் சற்றே பின்தங்கியிருந்த உக்ரைன், மெல்ல படையெடுப்பை எதிர்த்து போராடி, இழந்த நகரங்களை திரும்ப கைப்பற்றியது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, அமெரிக்கா உள்ளிட்டவை உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இரு தினங்களுக்கு முன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரகசிய ரயில் பயணம் மேற்கொண்டு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust