Ukraine War : ஓராண்டு காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
Ukraine War : ஓராண்டு காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்Twitter

உக்ரைன் : அத்துமீறிய ரஷ்யா; அடங்க மறுக்கும் செலென்ஸ்கி - போரின் நடுங்க வைக்கும் நிகழ்வுகள்

இன்னும் போர் முடிவதற்கான சூழல் எழவில்லை. இந்த நிலையில் கடந்த ஓராண்டு காலம் நடந்த முக்கிய நிகழ்வுகளைக் காணலாம்.
1.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போர் ஓராண்டை நெருங்கி விட்டது.

இன்னும் போர் முடிவதற்கான சூழல் எழவில்லை. இந்த நிலையில் கடந்த ஓராண்டு காலம் நடந்த முக்கிய நிகழ்வுகளைக் காணலாம்.

பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கியது.

சிறப்பு இராணுவ நடவடிக்கை என ரஷ்ய அதிபர் புதின் இதனை அறிவித்தார். உக்ரைன் மக்களுக்கும், பிற மேற்கு நாடுகளுக்கும் இது அதிர்ச்சிகரமானதாகவே இருந்தது.

2. பாம்புத் தீவு - பிப்ரவரி 24

ரஷ்ய அதிபர் புதினின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் எதிர்த்துப் போரிட முடிவு செய்தது உக்ரைன்.

பாம்புத் தீவில் உக்ரைன் படைகளை கண்ட ரஷ்ய கப்பல் படை வீரர்கள் சரணடையுமாறு கூறினர்.

அதற்கு அஞ்சாமல். "Russian Warship: Go f''k Yourself" என உக்ரைன் வீரர்கள் பதிலளித்தனர்.

3. அன்டோனோவ் விமான நிலைய தாக்குதல் - பிப்ரவரி 24

உக்ரைன் தலைநகரான கீவ்வுக்கு வடக்கில் உள்ளது அண்டோனோவ் விமான நிலையம்.

இந்த விமான நிலையத்தைக் கைப்பற்றியது ரஷ்யாவின் மிகப் பெரிய வெற்றியாக பேசப்பட்டது.

ஆனால் ரஷ்ய படைகள் விமான நிலையத்தை கைப்பற்றிய போது அவற்றை உக்ரைனியப் படைகள் சுற்றி வளைத்தன.

நடைபெற்ற சண்டையில் உலகின் மிகப் பெரிய விமானமான அண்டோனோவ் ஏஎன்-225 நொருங்கியது.

Ukraine War : ஓராண்டு காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
Ukraine War: Russia அழித்த உலகின் மிகப்பெரிய விமானத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன தெரியுமா?

4. செலென்ஸ்கி வெளியிட்ட வீடியோ - பிப்ரவரி 25

போர் ஆரம்பித்த போது உக்ரைன் அதிபர் நாட்டை விட்டுத் தப்பிவிட்டதாக தகவல்கள் பரவியது.

இதனால் தனது அமைச்சர்களுடன் நாங்கள் இங்கே தான் இருக்கிறோம் என ஒரு வீடியோவை வெளியிட்டார் செலென்ஸ்கி.

அமெரிக்கா செலென்ஸ்கிக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறி அழைத்த போதும் "எங்களுக்கு உதவிகள் தான் வேண்டும், பயணங்கள் அல்ல" என மறுத்துவிட்டார் செலென்ஸ்கி.

5. நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள் - மார்ச் 2

போர் ஆரம்பித்த உடனேயே மக்கள் சாரை சாரையாக நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டனர்.

அண்டை நாடான போலந்து எல்லையில் கார்கள் நெடுநீளத்துக்கு அணிவகுத்து நின்றன.

மக்கள் ரயில் நிலையங்களில் நாள்கணக்கில் காத்திருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.

அதிகமாக பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களுமே நாட்டை விட்டு வெளியேறினர்.

கிட்டத்தட்ட 15 லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.

Ukraine War : ஓராண்டு காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
தப்பிச் செல்ல மறுத்த உக்ரைன் அதிபர், அகதிகளாக மக்கள் - உக்ரைன் நிலவரம்

6. இர்பின் பால வெளியேற்றம் - மார்ச் 6

உக்ரைன் தெருக்களில் சண்டை நடக்கத் தொடங்கியதும் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

இதனால் நகருக்குள் ரஷ்ய இராணுவங்கள் நுழைய ஒரே வழியாக இருந்த இர்பின் பாலங்களை உக்ரைனியர்கள் தகர்த்தனர்.

ஆனால் அந்த பாலம் வழியாக் தப்பிச் செல்ல நினைத்த நூற்றுக்கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர்.

7. மரியுபோல் மகப்பேறு மருத்துவமனை தாக்குதல் - மார்ச் 9

மரியுபோலில் மக்களை வெளியேற்ற 12 மணி நேரம் இடை நிறுத்தம் இருந்த போதிலும் ஒரு மருத்துவமனையை ரஷ்ய ஏவுகனைகள் தாக்கின.

அப்போது ஒரு கர்ப்பிணி பெண்ணை தூக்கு படுக்கையில் வைத்து வீரர்கள் தூக்கிச் செல்லும் புகைப்படம் உலகை உலுக்கியது.

அந்த தாயும் அவரது குழந்தையும் இறந்துவிட்டன.

8. புச்சா - ஏப்ரல் 1

உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா போர்NewsSense

புச்சா நகரில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற்றப்பட்டன. அப்போது திரும்பும் வழியில் பல்லாயிரம் அப்பாவி மக்களை ரஷ்ய இராணுவம் கொன்றுள்ளது.

புச்சா நகர வீதிகளில் மனிதர்களின் இறந்த உடல்கள் சாதாரணமாக சிதறிக்கிடந்தன.

ஆனால் ரஷ்யா அந்த புகைப்படங்கள் போலியானவை என வாதாடியது. இராணுவ குற்றங்கள் குறித்து எடுத்துரைக்கும் பத்திரிகையாளர்கள் போலி செய்தி பரப்புகின்றனர் என ரஷ்யா தெரிவித்தது.

Ukraine War : ஓராண்டு காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
உக்ரைன் ரஷ்யா: புச்சா நகரத்தில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட மக்கள், பதற வைக்கும் செய்தி

9. கார்கீவ் நகரில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற்றப்பட்டன - செப்டம்பர் 1

ரஷ்யாவின் முக்கிய குறியாக இருந்தது கீவ் மற்றும் கார்கீவ் நகரங்களே. அதில் ஒன்றான கார்கீவில் ரஷ்யப் படைகள் நுழைந்த போது தீவிர எதிர்ப்பைக் காட்டி துரத்தியது உக்ரைன் படைகள்.

10. ஆட்களைத் திரட்டிய ரஷ்யா - செப்டம்பர் 21

ஏற்கெனவே உக்ரைனில் அனைத்து ஆண்களும் சண்டையிடத் தொடங்கியிருந்த நிலையில் ரஷ்யாவும் ஆட்களைத் திரட்டத் தொடங்கியது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு முதன்முதலாக ரஷ்யா பொதுமக்களை போருக்கு அழைத்தது.

இதனால் பெரும் எதிர்ப்புகளை ரஷ்ய அரசு சந்தித்தது. பல ரஷ்ய ஆண்கள் வெளிநாடுகளுக்கு பறந்தனர்.

பல ஆயுதங்களைக் கையாளத் தெரியாத, பயிற்சி இல்லாத மக்கள் இராணுவத்தில் கலந்தனர்.

Ukraine War : ஓராண்டு காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
ரஷ்யா: நாட்டை விட்டு வெளியேறும் ஆண்கள்; துரத்தும் அதிபர்- என்ன நடக்கிறது அங்கே?

11. கிரிமியா பால தாக்குதல் - அக்டோபர் 8

ரஷ்யாவையும் கிரிமியாவையும் இணைக்கும் ஒரே ஒரு பாலமான கிரிமிய பாலத்தை உக்ரைன் ராணுவ வீரர்கள் தகர்த்தனர்.

இது ரஷ்யாவுக்கு பேரடியாக விழுந்தது.

12. இருண்ட உக்ரைன் - அக்டோபர் 10

முதன்முறையாக உக்ரைனின் ஆற்றல் வளங்களை குறிவைத்து தாக்கத் தொடங்கியது ரஷ்ய படைகள்.

மின் உற்பத்தி நிலையங்கள் மீது ஏவுகனைகள், பீரங்கி குண்டுகள், ஈரானிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின.

விளைவாக, உக்ரைனின் பெரும்பகுதிகள் தண்ணீரும், மின்சாரமும் இல்லாமல் இருண்டன.

13. சுதந்திரமடைந்த கெர்சன் - நவம்பர் 12

8 மாதங்கள் பலத்த போருக்கு பிறகு ரஷ்யா கைப்பற்றிய சில பகுதிகளில் கெர்சனும் ஒன்று.

ஆனால் நவம்பர் 12ம் தேதி கெர்சனை முழுவதுமாக மீட்டன உக்ரைன் படைகள்.

இதனை அந்த பகுதி மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

14. வெள்ளை மாளிகையில் செலென்ஸ்கி -டிசம்பர் 21

உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி கடந்த டிசம்பர் 21ம் தேதி வாஷிங்டனுக்கு பயணம் செய்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.

இது ஒரு வரலாற்றுப்பூர்வமான நிகழ்வாக பார்க்கப்பட்டது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த பின்னர் உக்ரைன் அதிபரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இது.

இந்த பயணத்துக்கு பிறகு உக்ரைனுக்கு 2 பில்லியன் டாலர்கள் பாதுகாப்பு உதவியை அறிவித்தார் ஜோ பைடன்.

Ukraine War : ஓராண்டு காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
உளவு விமானம், ரகசிய ரயில் - ரஷ்யா கண்ணில் மண்ணை தூவி USA சென்ற Ukraine அதிபர் ஜெலன்ஸ்கி

15. பலத்தை அதிகரித்த பீரங்கிகள் - ஜனவரி 25

ஜனவரி 25ம் தேதி ஜெர்மனி உக்ரைனுக்கு ஜெர்மன் தயாரிப்பு பீரங்கிகளை அனுப்ப அனுமதி அளித்தது.

மேலும் Leopard 2 பீரங்கிகளை அனுப்பி வைத்தது.

அத்துடன் அமெரிக்கா 31 M1 Abrams பீரங்கிகளை அனுப்பியது.

16. உக்ரைன் வந்த அமெரிக்க அதிபர் - பிப்ரவரி 20

பிப்ரவரி 20ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் சென்றார்.

இது அமெரிக்கா உக்ரைனுக்கு உதவுவதில் எந்த அளவு தீவிரமாக இருக்கிறது என்பதைக் காட்டும் வண்ணம் நடந்த சந்திப்பு என வெள்ளை மாளிகை கூறியது.

Ukraine War : ஓராண்டு காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
உக்ரைன்: ரயிலில் 10 மணி நேரம், செல்போன் இல்லை - ஜோ பைடன் ரகசிய பயணம் ரஷ்யாவுக்கு தெரியுமா?
17.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com