"என் மகளின் பாதி உடலை காணவில்லை"- இணையத்தைக் குழப்பும் சிறுமியின் புகைப்படம்

ஒரு காட்சிப்பிழை புகைப்படம் இப்போது இணைய வாசிகளைக் குழப்பி வருகிறது. ஒரு சிறுமி கையில் ஃபோனுடன் நின்றுகொண்டிருகிறார். அவரது பாதி உடல் தான் தெரிகிறது.
Optical illusion
Optical illusionFacebook
Published on

ஆப்டிகல் இல்யூஷன் அதாவது காட்சிப்பிழை நமக்கு புதிதல்ல. காட்சிப்பிழைகளை பார்த்து குழப்பமடையாதவர்கள் மிகக் குறைவு. சிறு வயதில் காட்சிப்பிழைகளை தேடி தேடி பார்ப்பதில் இருக்கும் ஆர்வம், இன்றும் இருக்கிறது. முன் நாட்களில், காட்சிப்பிழைகளோடு ஓவியங்கள் வரையப்பட்டு வந்தன.

இவற்றின் மீதான அதீத ஆர்வம், மற்றும் புகைப்படம் எடுப்பவர்களின் கூற்நோக்கும் தன்மையும், ஓவியங்களிலிருந்து, நம்மை குழப்பும் புகைப்படங்களாக மெருகேறியது.


ஒரு க்ரீம் கலர் கவுன் ஒன்று அடிக்கடி வாட்சாப்பில் பகிரப்படும். அந்த கவுனின் நிறம் நமக்கு நீல நிறத்தில் தெரிந்தால் நமது கண்களில் பிழை இருப்பதாகவும், அது அதே க்ரீம் கலரில் தெரிந்தால் நம் கண்களில் எந்த குறையும் இல்லை என்பது போன்ற செய்தியுடன் அப்புகைப்படம் பகிரப்படும்.


கொஞ்சம் பழைய செய்தி தான் என்றாலும், இன்றும் அதை திறந்து பார்ப்பவர்களுக்கு குறையில்லை.

Optical illusion
Optical illusionPexels
Optical illusion
கண்ணாடியை கழற்றி வைக்க உதவும் கண் பயிற்சிகள் : 60 + வயதிலும் கண்ணாடி அணிய தேவை இருக்காது!

அப்படி ஒரு காட்சிப்பிழை புகைப்படம் தான் இப்போது இணைய வாசிகளைக் குழப்பி வருகிறது. ஒரு சிறுமி கையில் ஃபோனுடன் நின்றுகொண்டிருகிறார். அவரது பாதி உடல் தான் தெரிகிறது. மீதி உடல், அங்கு போடப்பட்டிருக்கும் காங்க்ரீட் தளத்தின் கீழ் இருக்கிறது.


இதை புகைப்படம் எடுத்த அவரது தாய் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். கூடவே, "எனது மகளின் மீதி பாதி எங்கே?" என்ற தலைப்புடன் அவர் அதை பகிர்ந்திருந்தார்.

Girl inside a pit
Girl inside a pitfacebook

இதை போஸ்ட் செய்துவிட்டு அந்த பெண், 'கண்டுபிடிங்க பா' என்பது போல சற்று நேரம் காணாமல் போய்விட்டார். கமென்ட் செக்ஷனில் ஒன்றுகூடிய நெட்டிசன்களோ, இது எப்படி சாத்தியம் என்று மண்டையை பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.


பல மணி நேரம் அதை உற்று பார்த்தும், கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு, அந்த புகைப்படத்தின் பின்னணியில் உள்ள ஒரு சிறு பகடி இதோ!

Girl inside a pit
Girl inside a pit

அந்த குழந்தை கையில் ஒரு செல் ஃபோனோடு நின்றுகொண்டிருக்கிறார். அந்த ஃபோனை தன் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டிருக்கும் அச்சிறுமி, தன் வலது கையை, ஒரு சிறிய மதிலின் மேல் வைத்திருக்கிறார்.

அந்த மதிலின் மேற்புறமும், தரையில் போடப்பட்டிருக்கும் காங்க்ரீட் தளமும் ஒரே நேர்க்கோட்டில் வருவதால், சட்டென்று பார்க்கும்போது அக்குழந்தையின் இரு கைகளும் காற்றில் இருப்பது போன்ற காட்சிப்பிழையை அது தருகிறது.


உன்னிப்பாகப் பார்த்தால் அந்த நேர்கோடு நம் கண்களுக்குத் தெரியும்.

Optical Illusion
Optical IllusionPexels

இப்போது மறுபடியும் அந்த புகைப்படத்தைப் பார்த்தால் இந்த வித்தியாசம் நம் கண்களுக்கு தென்படும். பலரும் இந்த விந்தையை பாராட்டி வருகிறார்கள், காரணம், அந்த காங்க்ரீட் தளத்திற்கும், மதிலுக்கும் உள்ள நேர்க்கோட்டை, கச்சிதமாகப் பயன்படுத்தி, அந்த பெண் எடுத்த புகைப்படம் பலரையும் குழப்பியுள்ளது.

ஒருவர், "இது தான் நான் பார்த்ததில் சிறந்த காட்சிப்பிழை புகைப்படம்" என்று கமன்ட் செய்திருந்தார். இன்னொருவரோ, "இதை பார்த்தலே எனக்கு கோபம் வருகிறது, ஏனென்றால், என்னால் இதை கண்டுபிடிக்க முடியவில்லை!" என்று புலம்பியிருந்தார்.
இப்படி உங்களை ஈர்த்த காட்சி பிழை புகைப்படம் எது?

Optical illusion
நீங்கள் எப்படிப்பட்டவர்?: ஒரு சின்ன டெஸ்ட - இந்த படத்தில் உங்களுக்கு முதலில் தெரிவது எது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com