எருமையை விடக் குறைந்த விலைக்கு சிங்கங்களை விற்கும் பாகிஸ்தான் சரணாலயம் - ஏன்?

ஒரு சிங்கத்தின் விலை 1 லட்சத்து 50 ஆயிரம் பாகிஸ்தானிய ரூபாய். இந்திய மதிப்பில் 50000 ரூபாய். ஆகஸ்ட் முதல் வாரத்தில் சஃபாரி வன விலங்கு காப்பகம் 12 சிங்கங்களை விற்க திட்டமிட்டுள்ளது.
Lion
Lion Twitter
Published on

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சஃபாரி வனவிலங்கு காப்பகம் சிங்கங்களை விற்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சிங்கங்களுக்கு அங்கு விற்கப்படும் எருமைகளை விடக் குறைவான விலையே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

Samaa TV வெளியிட்டுள்ள செய்தியின் படி, ஒரு சிங்கத்தின் விலை 1 லட்சத்து 50 ஆயிரம் பாகிஸ்தானிய ரூபாய். இந்திய மதிப்பில் 50,000 ரூபாய்.

அதே வேளையில் ஒரு எருமையின் விலை 35,0000 பாகிஸ்தானிய ரூபாய். இந்திய மதிப்பில் 1.17 லட்சம்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் சஃபாரி வன விலங்கு காப்பகம் 12 சிங்கங்களை விற்க திட்டமிட்டுள்ளது.

சிங்கங்களைக் காப்பகத்தில் வைத்து பாதுகாக்க ஆகும் அதிகப்படியான செலவு தான் இவற்றை விற்பதற்கான முக்கியக் காரணம் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மற்ற விலங்குகளை பாதுக்காக்க காப்பகத்துக்கு ஆகும் செலவையும் சமாளிக்க பணம் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lion
"டீ வேண்டாம்... லஸ்சி, சர்பத் குடிங்க" - பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையம் அறிவிப்பு

இந்த சிங்கங்கள் ஒவ்வொன்றும் ஒரு நாளுக்கு 9 கிலோ கறி உணவாக எடுத்துக்கொள்கிறது. இதனால் அதிக செலவு பிடிக்கிறது.

தொடர்ச்சியாக இது போன்று சிங்கங்களை விற்றுவருகிறது சஃபாரி வனவிலங்கு காப்பகம்.

இந்த சிங்கங்களை கால்நடை வளர்ப்பு ஆர்வலர்களுக்கு விற்க காப்பக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அன்றாட தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Lion
அடுத்த இலங்கை : திவாலாகும் நிலையில் பாகிஸ்தான் - என்ன நடக்கிறது அங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com