பாகிஸ்தானில் குழந்தைகளின் கண்முன்னே மனைவியைக் கொன்று எண்ணையில் கொதிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள இக்பால் பகுதியில் கடந்த 9 மாதங்களாக ஒரு தனியார் பள்ளி மூடிய நிலையில் உள்ளது.
அந்த பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்த ஆஷிக் என்பவர் , அந்த பள்ளி அருகே உள்ள குடியிருப்பில் தனது குடும்பத்தோடு வசித்து வருகின்றார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆஷிக்கின் 15 வயது மகள் கராச்சி காவல்துறையினரிடம் அதிர்ச்சி தகவலைக் கூறியுள்ளார்.
அந்த சிறுமியின் தகவலைக் கேட்டு சம்பவ இடத்திற்குச் சென்று காவல்துறையினர் பார்த்தபோது சமையலறையில் இருக்கும் கொப்பரையில் ஆஷிக்கின் மனைவி கால் துண்டிக்கப்பட்டு உடல் முழுவதும் வெந்த நிலையிலிருந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி எஸ்எஸ்பி அப்துர் ரஹீம் கூறுகையில்,
ஆஷிக்கின் குழந்தைகளிடமிருந்து வாக்கு மூலத்தைப் பெற்றுள்ளோம். ஆஷிக் முதலில் தனது மனைவியைத் தலையணையினை வைத்து மூச்சி திணற வைத்துள்ளார். அதன் பின்னர் தனது பிள்ளைகளுக்கு முன்பே கொப்பறையில் கொதிக்க வைத்துள்ளார், தற்போது தலைமறைவாக உள்ள ஆஷிக்கைத் தேடிவருகிறோம் விரைவில் அவரை கைது செய்வோம் எனக் கூறியுள்ளார்.
மேலும், ஆஷிக் தனது மனைவியைத் தகாத உறவுக்கு வற்புறுத்தியதாகவும் அதற்கு அவர் மறுத்த காரணத்தினால் கொன்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust