Murder
MurderTwitter

‘நபிகள் கனவில் சொன்னார்’ - பாகிஸ்தானில் மாணவர்களால் கொல்லப்பட்ட ஆசிரியை

போலீசார் நடத்திய விசாரணையில் கொலையாளிகளின் உறவினரான 13 வயது சிறுமி ஒருவருக்குக் கனவில் நபிகள் தோன்றி “ஆசிரியை பிபி இஸ்லாத்தை அவமதிக்கிறார், எனக்கு எதிராகச் செயல்படுகிறார்” என்று கூறியதாகவும் அத்துடன் அவரை கொலை செய்ய உத்தரவிட்டதாகவும் சிறுமி கூறியதால் கொலை சம்பவம் நடை பெற்றதாகத் தெரிவித்துள்ளனர்.
Published on

பாகிஸ்தானில் கைபர் - பக்துவா மாகணத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர் சொஃபரா பிபி. பிபி நேற்று பள்ளி முடிந்து திரும்பும் போது பள்ளியின் வாசலில் வைத்து உடன் பணிபுரியும் ஆசிரியர் ஜாமியா இஸ்லாமியா ஃபலாஹுல் மற்றும் இரண்டு மாணவர்களால் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொலையாளிகளின் உறவினரான 13 வயது சிறுமி ஒருவருக்குக் கனவில் நபிகள் தோன்றி “ஆசிரியை பிபி இஸ்லாத்தை அவமதிக்கிறார், எனக்கு எதிராகச் செயல்படுகிறார்” என்று கூறியதாகவும் அத்துடன் அவரை கொலை செய்ய உத்தரவிட்டதாகவும் சிறுமி கூறியதால் கொலை சம்பவம் நடை பெற்றதாகத் தெரிவித்துள்ளனர்.

Murder
அடடா சொல்ல வைக்கும் உலகின் 5 குட்டி நாடுகள்

பெண்கள் மட்டும் பயிலும் மதப் பள்ளியில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 13 வயது சிறுமியின் கனவினால் ஆசிரியை பிபி இறை பலி கொடுக்கப்பட்டாரா அல்லது சக ஆசிரியையான ஜாமியா இஸ்லாமியா ஃபலாஹுல் -ன் தனிப்பட்ட விரோதத்தினால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதா? என்று போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஜாமியாவையே கொலையின் முக்கிய குற்றவாளியாகவும் பதிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தானில் மதத்தின் மீதான அவமதிப்பு மிகப் பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன் இஸ்லாத்தை அவமதிப்பவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று பிற இஸ்லாமிய நாடுகளை பாகிஸ்தான் பிரதமர் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Murder
கேரளாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆடு; தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது
logo
Newssense
newssense.vikatan.com