4 மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தான்-சீனா எல்லை மீண்டும் திறப்பு!

ஒப்பந்தத்தின் கீழ் செயல்படும், குன்ஜெராப் பாஸ் கடல் மட்டத்திலிருந்து 15,500 அடி உயரத்தில் உள்ள மிக உயர்ந்த சர்வதேச எல்லையாக உள்ளது.
4 மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தான்-சீனா எல்லை மீண்டும் திறப்பு!
4 மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தான்-சீனா எல்லை மீண்டும் திறப்பு!Twitter

பாகிஸ்தான்-சீனா குன்ஜெராப் எல்லை பயணத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. கடுமையான குளிர்கால நிலைமைகள் காரணமாக நான்கு மாதங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான குஞ்செராப் எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இது வணிக மற்றும் சுற்றுலா ஆகிய இரண்டிற்கும் புதுப்பிக்கப்பட்ட வாய்ப்புகளை வழங்குகிறது.

கடுமையான குளிர் மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, ஆண்டுதோறும் டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை எல்லையை மூட வேண்டும் என்று இருதரப்பு ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த முக்கியமான எல்லை மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

1985 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தத்தின் கீழ் செயல்படும், குன்ஜெராப் பாஸ் கடல் மட்டத்திலிருந்து 15,500 அடி உயரத்தில் உள்ள மிக உயர்ந்த சர்வதேச எல்லையாக உள்ளது. 

4 மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தான்-சீனா எல்லை மீண்டும் திறப்பு!
இந்தியாவை சுற்றியிருக்கும் 7 முக்கிய எல்லை கிராமங்கள் - எந்தெந்த நாடுகளுடன் இணைக்கின்றன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com