இந்தியாவை சுற்றியிருக்கும் 7 முக்கிய எல்லை கிராமங்கள் - எந்தெந்த நாடுகளுடன் இணைக்கின்றன?

இந்தியாவிற்குள் மட்டுமல்ல இந்திய எல்லையிலும் கண்கவர் கிராமங்கள் இருக்கின்றன. அந்த கிராமங்களை பற்றிய தொகுப்பு தான் இது
இந்தியாவை சுற்றியிருக்கும் 7 முக்கிய எல்லை கிராமங்கள் - எந்தெந்த நாடுகளுடன் இணைக்கின்றன?
இந்தியாவை சுற்றியிருக்கும் 7 முக்கிய எல்லை கிராமங்கள் - எந்தெந்த நாடுகளுடன் இணைக்கின்றன?canva

இந்தியா அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் உலக நாடுகளில் ஒன்று. இந்தியா பல கிராமங்களுடைய ஒரு நாடு. இந்த கிராமங்கள் பலவும் அதிசயிக்கத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளன.

இந்தியாவிற்குள் மட்டுமல்ல இந்திய எல்லையிலும் கண்கவர் கிராமங்கள் இருக்கின்றன. அந்த கிராமங்களை பற்றிய தொகுப்பு தான் இது

நதுலா கிராமம்

இந்தியாவையும் சீனாவையும் இணைக்கும் இந்த கிராமம், முதலில் சில்க் ரூட் எனப்படும் பட்டுவழிச் சாலையின் ஒரு பகுதியாக இருந்தது. வணிகத்துக்கு பெயர்பெற்ற கிராமம்.

இங்கு புகழ்பெற்ற தவாங் மடாலயமும் உள்ளது!

ரண் ஆஃப் குச்

குஜராத் கிராமமான இது பாகிஸ்தான் நாட்டுடன் இந்திய எல்லையை பகிர்கிறது. உப்பளங்கள், பரந்துவிரிந்த வெளிர் நிலப்பரப்புகள் நம் கண்களை கவர்கின்றன. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ரண் உற்சவம் மிகவும் தனித்துவம் வாய்ந்த பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்று.

இந்தியாவை சுற்றியிருக்கும் 7 முக்கிய எல்லை கிராமங்கள் - எந்தெந்த நாடுகளுடன் இணைக்கின்றன?
Longwa: இந்திய-மியான்மர் எல்லையில் இரட்டை குடியுரிமை கொண்ட பழங்குடி கிராமம்!பின்னணி என்ன?

பாம்பன் பாலம்

இந்தியாவை ராமேஸ்வரம் மூலமாக இலங்கையுடன் இணைக்கிறது. இந்த கடற்பாலம் அதனுள் பல அமானுஷ்யங்களை அடக்கியது என்பது நமக்கு தெரிந்த கதை தானே?

இது வங்காள விரிகுடாவின் அற்புதமான காட்சியை நமக்கு வழங்குகிறது. பாம்பன் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். பாம்பன் பாலம், ஆதாம் பாலம் மற்றும் குருசடை தீவு ஆகியவை இங்குள்ள முக்கிய இடங்களாகும்.

மொரே

இந்தியா மியான்மர் எல்லையில் அமைந்திருக்கிறது இந்த கிராமம். மொரே எப்போதும் பிசியாகவே இருகும் ஒரு வணிக தலம். உள்ளூர் பழங்குடி மக்கள் மட்டுமல்லாமல், இந்தியர்கள், பர்மா நாட்டு மக்களும் இங்கு கலந்தே வசிகின்றனர்.

ஆசிய நெடுஞ்சாலை 1ல் அமைந்துள்ள இந்த கிராமம் இந்தியா மியான்மர் தாய்லாந்து ஆகிய நாடுகளை இணைக்கும் முத்தரப்பு நெடுஞ்சாலை ஆகும். இங்கு தமிழர்களின் எண்ணிக்கை அதிகம்!

இந்தியாவை சுற்றியிருக்கும் 7 முக்கிய எல்லை கிராமங்கள் - எந்தெந்த நாடுகளுடன் இணைக்கின்றன?
எல்லை சுற்றுலா: இந்தியா - சீனா எல்லையில் 17 கிராமங்களை சுற்றலாம் - விரிவான தகவல்கள்

துர்துக்

இந்தியாவின் லைன் ஆஃப் கண்டிரோலுக்கு அருகில் அமைந்திருக்கிறது இந்த கிராமம். பால்டி இன மக்கள் வாழ்கின்றனர். இந்தியாவில் இந்த கிராமத்தில் மட்டுமே இவர்களை காணமுடியும். இங்கு ஆப்ரிகாட் பழங்கள் பிரபலம்.

இந்த கிராமம் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கிறது.

பாங்காங் ஏரி

இந்திய திபெத்திய எல்லையில் அமைந்திருக்கும் இது அண்டை நாடான சீனா வரை நீள்கிறது.

கடல்மட்டத்தில் இருந்து 4,350 மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த பாங்காங் ஏரி உலகின் மிக உயரமான உப்புநீர் ஏரியாகும்.

இந்த ஏரியின் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிலும், இரண்டு பங்குகள் சீனாவிலும் இருக்கின்றன.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராணுவ மோதலின் முக்கிய புள்ளிகளில் ஒன்றாக மாறி வருகிறது இந்த பாங்காங் ஏரி.

சமீபத்தில், சீனா தனது துருப்புக்கள் மற்றும் சரக்குகளை வேகமாக நகர்த்துவதற்கு வசதியாக ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிய பாலங்கள் மற்றும் பிற முக்கிய இராணுவ உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது.

இந்தியாவை சுற்றியிருக்கும் 7 முக்கிய எல்லை கிராமங்கள் - எந்தெந்த நாடுகளுடன் இணைக்கின்றன?
ஒரு நாட்டை சுற்றி வளைத்திருக்கும் 8 நாடுகள் - எல்லை அதிசயம் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com