தெருவிளக்கு வெளிச்சத்தில் புரட்சி! நகரத்தை இருளில் ஆழ்த்தும் Parkour வீரர்கள்

சமீபத்தில் Hadj Benhalima என்ற பிரபல பார்கோர் வீரர், 10 அடி உயரத்தில் இருந்த ஸ்விட்சை அழுத்தி விளக்கை அணைத்தது பலரது கவனத்தைப் பெற்றது.
தெருவிளக்கு வெளிச்சத்தில் புரட்சி! நகரத்தை இருளில் ஆழ்த்தும் Parkour வீரர்கள்
தெருவிளக்கு வெளிச்சத்தில் புரட்சி! நகரத்தை இருளில் ஆழ்த்தும் Parkour வீரர்கள்Twitter
Published on

பாரிஸ் நகரில் பார்கோர் விளையாட்டைப் பயிற்சி செய்யும் வீரர்கள், கடைகளில் வீணாக எரியும் விளக்குகளை அணைப்பது மின்சார சிக்கனம், ஒளி மாசைக் கட்டுப்படுத்தலில் புரட்சிகரமான செயலாக பார்க்கப்படுகிறது.

சுவர்களை, தெருக்களில் இருக்கும் தடைகளை, கட்டடங்களை சீறிப்பாய்ந்து தாவி ஓடுவது பார்கோர் விளையாட்டாகும்.

பார்கோர் செய்து விளக்குகளை அணைக்கும் பழக்கம் பாரிஸ் இளைஞர்களிடம் மிகுதியாக காணப்படும் ஒன்று தான். சமீபத்தில் Hadj Benhalima என்ற பிரபல பார்கோர் வீரர், 10 அடி உயரத்தில் இருந்த ஸ்விட்சை அழுத்தி விளக்கை அணைத்தது பலரது கவனத்தைப் பெற்றது.

பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களது விளம்பர பலகையை வண்ண விளக்குகளால் ஒளிர வைப்பார்கள். அப்படி எரியும் பலகைகள் அணைவதே இல்லை. இரவு முழுவதும் இந்த பலகைகள் அதிக மின்சாரத்தை வீணாக்குவதாக கருதும் இளைஞர்கள் மாலைகளில் விளையாட்டாக இவற்றை அணைக்கத் தொடங்கியுள்ளனர்.

பாரிஸ் மட்டுமில்லாது பிரான்ஸின் பல நகரங்களில் இது நடக்கிறது.

தெருவிளக்கு வெளிச்சத்தில் புரட்சி! நகரத்தை இருளில் ஆழ்த்தும் Parkour வீரர்கள்
ஷாங்காய் முதல் பாரிஸ் வரை : வாழ்வதற்கு அதிக செலவாகும் 10 நகரங்கள் - விரிவான பட்டியல்

இந்த வீடியோக்களுடன் வீரர்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர். இது குறித்து ஒரு பார்கோர் வீரர், " மின்சாரத்தை சேமிக்க அனைவரும் தங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும். நாங்கள் எங்கள் உடல் தகுதியால் இவற்றைச் செய்துகொண்டிருக்கிறோம்" என ஊடகங்களில் கூறியுள்ளார்.

இந்த வீர விளையாட்டின் விளைவாக இப்போது பிரான்ஸில் இரவு நேர விளம்பர விளக்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை விளக்குகள் அணைக்கப்பட வேண்டும் என்பது இனி விதி. இதனை மீறுபவர்களுக்கு 1,20,000 ரூபாய் அதாவது 1,500 யூரோ அபராதம் விதிக்கப்படும்.

தெருவிளக்கு வெளிச்சத்தில் புரட்சி! நகரத்தை இருளில் ஆழ்த்தும் Parkour வீரர்கள்
உலக அதிசயமான ஈபிள் டவர் கட்டப்பட்டது எதற்காக? ஆரம்பத்தில் பாரிஸ் மக்கள் அதை வெறுத்தது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com