ஷாங்காய் முதல் பாரிஸ் வரை : வாழ்வதற்கு அதிக செலவாகும் 10 நகரங்கள் - விரிவான பட்டியல்

செலவீனங்களைக் கேட்டால் எப்படித்தான் அங்கு வாழ்கிறார்களோ என யோசிக்கலாம். ஆனாலும் உலக அளவில் அதிக செலவு பிடிக்கும் நகரங்களின் சொகுசு வாழ்க்கையை எத்தனையோ ஆயிரம் பேர் விரும்பி வாழத்தான் செய்கிறார்கள்.
நகரம்
நகரம்Canva
Published on

உலகளாவிய செல்வந்தர்கள் வசிக்கக்கூடிய லண்டன் போன்ற மாநகரங்களில், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கைப்பைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றின் மிகமிக அதிகப்படியான விலையே அதேநிலையில் நீடிப்பதில்லை. காரணம், அந்தந்த நாடுகளில் நிலவும் பணவீக்கம்தான்!

அதைமீறி, இப்படியானவர்கள் எப்படித்தான் அங்கு வாழ்கிறார்களோ என யோசிக்கலாம். ஆனாலும் உலக அளவில் அதிக செலவு பிடிக்கும் நகரங்களின் சொகுசு வாழ்க்கையை எத்தனையோ ஆயிரம் பேர் விரும்பி வாழத்தான் செய்கிறார்கள்.

அப்படியான உலகின 10 நகரங்களின் பட்டியலை புளூம்பெர்க் வெளியிட்டுள்ளது.

இதில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது, ஷாங்காய் நகரம்!

ஷாங்காய்
ஷாங்காய்Canva

ஷாங்காய்

சீனாவின் மிகப்பெரிய நகரமாகவும் உலகளாவிய நிதித்துறை மையமாகவும் இருக்கிறது, இந்த ஷாங்காய். உலகப் பெரும் செல்வந்தர்கள் வாழக்கூடிய அதிகசெலவு பிடிக்கும் நகரங்களின் பட்டியலில் இதுவே முதல் இடத்தில் இருக்கிறது, இப்போதைக்கு!

ஆனாலும், அசாதாரணமான சொகுசு வாழ்க்கையை வாழ்வோரிடமும் பணவீக்கமும் விலை உயர்ந்த பொருள்களின் விலையேற்றமும் அவர்களின் வாங்கும் சக்தியில் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.

லண்டன்
லண்டன்Canva

லண்டன்

ஐக்கிய இராச்சியம் எனப்படும் பிரிட்டனின் தலைநகரான லண்டன், இந்தப் பட்டியலில் ஜப்பானின் டோக்கியோவைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. அதிக செல்வம் படைத்த நபர்கள் விரும்பி வாழக்கூடிய செலவுபிடிக்கும் நகரங்கள் பட்டியலில் உள்ள லண்டனில் வசிப்பவர்களும், பணவீக்கத்தின் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்கின்றன, புள்ளிவிவரங்கள்.

தைபே
தைபேCanva

தைபே

தைவான் நாட்டின் தலைநகரமான தைபே, செலவு பிடிக்கும் உலக நகரங்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது.

வாழ்நிலைச் செலவுகள் பற்றிய புளூம்பெர்க்கின் அண்மைய தகவல்படி, பெரும் செல்வந்தர்களும் பணவீக்கம் போன்றவற்றின் பாதிப்புக்குத் தப்பவில்லை என்றே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அமெரிக்காவின் பணவீக்கம் 8.6 சதவீதமாகவும் ஐக்கிய இராச்சியம் எனப்படும் பிரிட்டனிலோ 9 சதவீதமாகவும் காணப்படுகிறது என்கிறது, புளூம்பெர்க்.

கடந்த 15ஆம் தேதி புதனன்று வெளியிடப்பட்ட ஜூலியஸ் பேயர் அறிக்கை, இந்த அதிசெல்வம் கொண்ட தனி நபர்களின் சொத்துமதிப்பு கடந்த ஆண்டில் மேம்பட்ட நிலையிலிருந்தது என்று தெரிவிக்கிறது. அத்துடன் பொருள்கள், சேவைகளைப் பெற்று வாழ்க்கையை ஓட்டுவதிலும் முன்னேற்றம் காணப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் முந்தைய ஆண்டுகளில் நிலவிய பண மாயை இன்னும் நீடிக்கிறது எனும் பேயர் அறிக்கை, “ கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் நிலைமை முன்னைவிடப் பரவாயில்லை என்றே எங்கள் ஆய்வில் தெரியவருகிறது. செல்வம் படைத்தவர்கள் மீண்டும் வழக்கம்போல செலவழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.” என்றும் கூறுகிறது.

நகரம்
செளதி அரசர் முதல் இங்கிலாந்து ராணி வரை: உலக அரச குடும்பங்களின் சொத்துமதிப்பு இவ்வளவா?
ஹாங்காங்
ஹாங்காங்Canva

ஹாங்காங்

பட்டியலில் நான்காம் இடத்தில் இருப்பது, ஹாங்காங் நகரம். இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ள ஜூலியஸ் பேயர் குழும நிறுவனத்தின் அறிக்கையின் அடிநாதமாக, விலையேற்ற வளர்ச்சி- பணக் கொள்கை ஆகியவற்றில் உலக அளவிலான தன்மை அமைந்துள்ளது.

அந்தந்த நகரங்களின் சொந்தக் குடியிருப்புகள், கார்கள், விமானக் கட்டணம், அங்குள்ள வர்த்தகக் கல்விக்கழகங்கள், இன்னபிற சொகுசு வசதிகளின் விலை, கட்டணம் ஆகியவற்றை அலசி ஆராய்ந்தே இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்
சிங்கப்பூர் Canva

சிங்கப்பூர்

உலக அளவில் அதிக செல்வந்தர்கள் வசிக்கும் செலவு பிடிக்கும் நகரங்களில் ஐந்தாவதாக இடம்பெற்றுள்ளது, சிங்கப்பூர்.

கொரோனா தாக்கத்துக்குப் பின்னர், உலக அளவில் லேப்டாப் எனப்படும் மடிக்கணினி, ஸ்மார்ட்ஃபோன் எனப்படும் திறன்பேசிகள் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் விலை, உலக அளவில் 41 சதவீதம்வரை அதிகரித்துள்ளது. வீட்டிலிருந்தே வேலை என்கிற புதிய முறை, பன்னாட்டளவிலான கணினி சிப் பற்றாக்குறை ஆகியவற்றால் இந்த அளவுக்கு விலை உயர்ந்துள்ளது என்றும் பேயர் அறிக்கை தெரிவிக்கிறது.

நகரம்
America உண்மையில் பணக்கார நாடா?
மொனாக்கோ
மொனாக்கோ Canva

மொனாக்கோ

இந்த ஐரோப்பிய நகரம் ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

இப்படியான 24 நகரங்களைக் கண்டம் விட்டு கண்டம் தாண்டி சேர்த்து அலசி ஆயப்பட்டுள்ளது. தனிநபர்கள் வங்கிகளில் வைத்திருக்கும் குடியிருப்புச் சொத்துகள், 20 வகையான பொருள்கள்/ சேவைகளின் விலை, கட்டணங்கள் ஆகியவற்றைக் கணக்கிலெடுத்து முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சூரிச்
சூரிச் Canva

சூரிச்

கடந்த நவம்பரிலும் ஏப்ரலிலும் என இரண்டு முறை திரட்டப்பட்ட விவரங்களிலிருந்து உருவாக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாக இந்த அறிக்கை அமைந்துள்ளது.

சுற்றுலாவுக்குப் பன்னாட்டு அளவில் பேர் போன ஊரான சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரம், ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.

டோக்கியோ
டோக்கியோCanva

டோக்கியோ

ஜப்பானின் தலைநகரான டோக்கியோ அதிசெல்வந்தர் தங்கும் சொகுசு நகரங்கள் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

தொன்மைப் பாரம்பரியமும் அதிநவீனமும் இணைந்த வாழ்க்கை முறையைக் கொண்ட பரபரப்பான நகரமாக இருந்துவருவது, டோக்கியோவின் தனித்தன்மை.

 சிட்னி
சிட்னிCanva

சிட்னி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம், பட்டியலில் ஒன்பதாவதாக இடம்பெற்றுள்ளது.

முன்னதாக, இதில் இடம்பெற்றிருந்த ரசியத் தலைநகர் மாஸ்கோ பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

நகரம்
ஆசியாவின் ரகசியமான பணக்கார நகரம் எது தெரியுமா? - ஆச்சரிய தகவல்
Eiffel Tower
Eiffel TowerCanva

பாரிஸ்

முத்தான பத்தாவது இடத்தைப் பிடித்திருப்பது, பிரான்சு நாட்டின் தலைநகர் பாரிஸ்.

அறிக்கையைத் தயாரித்தளித்த ஜூலியஸ் பேயர் அங்கியின் சொத்து நிர்வாகத் தீர்வுப் பிரிவின் தலைவர் நிக்கோலஸ் டி ஸ்கொரான்ஸ்கி கூறிய ஒன்றை, முக்கியமாகக் குறிப்பிடுகிறார்கள்.

“ கொரோனா பெருந்தொற்றால் உலக அளவில் நிலையில்லாத் தன்மை முதன்மையாக ஆகிவிட்டது. அதைத் தொடர்ந்தும், பணவீக்கத்தாலும் (உக்ரைன் போர் போன்ற) புவி அரசியல் பதற்றத்தாலும் அதேநிலைமை நீடிக்கிறது. முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் வாங்கும் சக்தியைப் பாதுகாக்கும் தேவையை மிகவும் அழுத்தமாகக் கொண்டுவந்துள்ளது. நீண்டகால நோக்கில் அவர்களின் சொத்துகளைப் பாதுகாக்கவே உயிரோட்டமான திட்டம் வேண்டியிருக்கிறது.” என்கிறார், நிக்கோலஸ்.

பூளும்பெர்க் செய்தியின் அதிக செலவு பிடிக்கும் நகரங்களின் முழுமையான பட்டியல், இதுதான்:

1. ஷாங்காய்

2. லண்டன்

3. தைபே

4. ஹாங்காங்

5. சிங்கப்பூர்

6. மொனாக்கோ

7. சூரிச்

8. டோக்கியோ

9. சிட்னி

10. பாரிஸ்

11. நியூயார்க்

12. சாவ் பாவ்லோ

13. மிலன்

14. துபாய்

15. பாங்காக்

நகரம்
உலகின் பணக்கார நாடுகள் 2022 - முதலிடம் பிடித்தது இந்த நாடா ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com