பறக்கும் விமானத்தில் சிகரட் பிடித்த பயணி; பற்றிய தீ - என்ன நடந்தது?

விமான பணியாளர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாகப் பயணிகள், விமானத்திலிருந்த மற்ற யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை.
flight
flightcanva
Published on

பயணி ஒருவரின் அலட்சியத்தால் விமானத்தில் தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ விமானத்திற்குள் பரவும் முன் அணைக்கப்பட்டதால் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என விமானத்திலிருந்தவர்கள் கூறியுள்ளனர்

இஸ்ரேலிலிருந்து பாங்காக்கிற்கு எல் ஆல் விமானத்தில் பயணித்த ஒருவர், விமானத்தில் புகைப்பிடித்துள்ளார். விமானத்தில் புகைப்பிடிப்பது குற்றமாகும். புகைப்பிடிப்பதனால் தீ விபத்துகள் ஏற்படலாம் என்பதால், விமானத்தில் புகைப்பிடிக்க அனுமதி இல்லை.

ஆனால் அந்த பயணி யாருக்கும் தெரியாமல், விமானத்தின் கழிவறையில் சென்று புகைப்பிடித்துள்ளார். புகைப்பிடித்து முடித்தபின்னர் அதை அணைக்காமல் குப்பைத்தொட்டியில் போட்டுள்ளார்.

இதனால், குப்பைகள் தீப்பற்றி எரியத்துவங்கின. விமானத்திற்குள் புகை சூழ்ந்ததில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான பணியாளர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக விமானத்திலிருந்த யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை.

flight
ஹீலியஸ் விமானம்: நடுவானில் மயக்கமடைந்த 121 பயணிகள் - நடந்தது என்ன? திக் திக் நிமிடங்கள்

விமானம் வழக்கம்போல இயக்கப்பட்டு பாதுகாப்பாக பாங்காக் சென்றடைந்தது. எந்த தாமதமும் ஏற்படவில்லை. புகைப்பிடித்த பயணியை விமான நிர்வாகம் எச்சரித்து அனுப்பிவைத்தது. ஆனால் அவர் பாங்காக்கிலிருந்து மீண்டும் இஸ்ரேல் திரும்பிய பின்னர் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என டைம்ஸ் பத்திரிக்கையிடம் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

flight
வீட்டுக்கு வீடு விமானம் : ஓர் 'அடடே' நகரம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com