பைலட்டுக்கு உடம்பு முடியல : பயணிகளே விமானத்தைத் தரை இறக்கிய திக் திக் நிமிடங்கள்

ஒற்றை இன்ஜின் கொண்ட செஸ்னா 208 என்கிற விமானத்தின் விமானிக்கு செவ்வாய்க்கிழமை பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கடும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவரால் விமானத்தை இயக்க முடியாத அளவுக்கு மோசமாகப் பாதிக்கப்பட்டார்.
Airplane
AirplaneTwitter
Published on

விமானிக்கு அடி பட்டுவிட்டது, தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுவிட்டனர், விமானியை அடைத்து வைத்திருக்கிறார்கள்... கதாநாயகன் விமானி சீட்டுக்கு வந்து சடசடவென பல பட்டன்களை அழுத்தி, நாங்க இங்கதான் இருக்கோம், இதோ லேண்ட் பண்ணப் போறோம் என்று கூறி ரத்தம் சிந்தச்சிந்த லேண்ட் செய்த கதைகளைக் பல ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம்.

அவ்வளவு ஏன் உலக நாயகன் கமல் ஹாசனின் பஞ்ச தந்திரம் படத்தில் கூட இது போன்ற காட்சிகள் வரும்.

ஆனால் இங்கு நிஜத்திலேயே இரு பயணிகள், விமானத்தை மிக அருமையாகத் தரையிறக்கிப் பல பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் (10 மே) செவ்வாய்க்கிழமை மதியம் நடந்ததாக அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு கூறியுள்ளது.

ஒற்றை இன்ஜின் கொண்ட செஸ்னா 208 என்கிற விமானத்தின் விமானிக்கு செவ்வாய்க்கிழமை பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கடும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவரால் விமானத்தை இயக்க முடியாத அளவுக்கு மோசமாகப் பாதிக்கப்பட்டார்.

விமானம்
விமானம்Twitter

அவ்விமானத்தில் பயணித்த இரு பயணிகள் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விஷயத்தை விளக்கினர். விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் விமானம் பறந்து கொண்டிருக்கும் இடம் போன்ற அடிப்படை விவரங்களைக் கேட்ட போதும், அப்பயணிகளால் விவரங்களைக் கூற முடியவில்லை.

அப்பயணிகள் ஃப்ளோரிடா கடற்கரையை மட்டுமே பார்க்க முடிவதாகக் கூறினர்.

கடற்கரையைத் தொடர்ந்து வடக்கு நோக்கி அல்லது தெற்கு நோக்கிப் பயணிக்குமாறு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டறை அதிகாரிகள் கூறினர். சுமார் 4 நிமிடத்துக்குப் பிறகு, செஸ்னா 208 விமானம் போகா ரடோன் (Boca Raton) பகுதியில் பறந்து கொண்டிருப்பதாகக் கண்டுபிடித்தனர்.

இதன் பிறகு தான் நிலைமை இன்னும் தீவிரமடைந்தது. இப்போது அவ்விமானத்தைத் தரையிறக்குவதற்கான படிநிலைகளை ஒவ்வொன்றாக முன்னனுபவம் எதுவும் இல்லாத அந்த இரு பயணிகளிடம் விளக்கியது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டறை.

விமானத்தின் றெக்கைகளின் நிலையை ஒரே அளவில் வைத்துக் கொள்ளுங்கள்... மெல்ல விமானத்தின் உயரத்தைக் குறைத்துக் கொண்டே வாருங்கள்... இப்போது மெல்ல விமானத்தைத் தரையிறக்குங்கள் என... ஒவ்வொன்றாகக் கூறினர்.

Airplane
ரயில் தண்டவாளத்தில் சிக்கிய விமானம் - நொடியில் உயிர் தப்பிய பைலட், பதறவைக்கும் காட்சி

அந்த இரு பயணிகளும் அதிகாரிகள் கூறியதை அப்படியே செய்து வந்தனர். விமானம் லட்டு போல அத்தனை பிரமாதமாகத் தரையிறக்கப்பட்டதை சிஎன்என் ஊடகத்தின் காணொளியில் பார்க்க முடிகிறது.

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி "விமான பயணிகள் ஒரு விமானத்தைத் தரையிறக்கிய ஆச்சரிய நிகழ்வை இப்போது நாம் பார்த்தோம்" என மகிழ்ந்து பாராட்டினார்.

'என்னது பயணிகள் விமானத்தைத் தரையிறக்கினார்கள் என்றா கூறினீர்கள்?' என அமெரிக்கன் ஏர்லைன் நிறுவனத்தைச் சேர்ந்த விமானி ஒருவர் கேட்டு 'ஓ மை காட், அருமையான பணி' எனப் பாராட்டியதாக தி கார்டியன் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

Airplane
விமானம் இரண்டாகப் பிளந்து விபத்து - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com