இத்தாலியில் இசைகலைஞர் ஒருவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
GZ என அடையாளம் காணப்பட்ட 35 வயதான நோயாளி, ரோமின் பைடியா சர்வதேச மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
கிட்டத்தட்ட 9 மணி நேரம் அறுவை சிகிச்சையின்போது, அந்த இசைகலைஞர் சாக்ஸபோன் வாத்தியத்தை வாசித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நோயாளியின் நரம்பியல் செயல்பாடுகள் சரிவர இருப்பதை உறுதி செய்யும் வகையில் நோயாளியை மருத்துவர்கள் விழித்திருக்க வைத்ததாக மருத்துவமனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை தலைவரும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான,டாக்டர் கிறிஸ்டியன் ப்ரோக்னா கூறுகையில்
"ஒவ்வொரு மூளையும் தனித்தன்மை வாய்ந்தது, ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்டது.
இந்த நபருக்கும் அப்படிதான். விழித்திருக்க வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் நரம்பியல் செயல்பாடுகளை மிக துல்லியமாக கண்டறிய உதவுகிறது" என்றார்.
அவருக்கு மூளைக் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை நடந்ததாகவும் ப்ரோக்னா தெரிவித்தார். இந்த அறுவை சிகிச்சைக்காக அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர் ப்ரோக்னா தலைமையில் 10 பேர் கொண்ட சர்வதேச குழு, அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
1970இல் திரைப்படமான 'லவ் ஸ்டோரி'யின் தீம் பாடலையும், இத்தாலிய தேசிய கீதத்தையும் 9 மணி நேர அறுவை சிகிச்சையின்போது அந்த நபர் இசைத்துள்ளார்.
தனது மூளை அறுவை சிகிச்சையின் போது பயத்தை விட அமைதியாக உணர்ந்ததாக நோயாளி GZ கூறியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust