விக்கி நயன் படம் அல்ல : இது வேறு புதுமண தம்பதிகளின் வைரல் புகைப்படம் - என்ன காரணம்?

இந்த புகைப்படத்தை பகிர்ந்ததிலிருந்து கிட்ட தட்ட ஒரு மில்லியனுக்கு மேல் லைக்குகள் குவிந்துள்ளன. இதை பார்த்த டிவிட்டர் பயனர்களில் பல சிங்கிள்கள் தங்கள் மன குமுறல்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் சிலர் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.
Wedding
WeddingCanva
Published on

ஒரு பக்கம் விக்கி-நயன் ஜோடியின் After Marriage புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், இன்னொரு பக்கம் வேறொரு புது மண தம்பதியின் புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.


உலகம் முழுவதும் வினோதமான சம்பவங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன. இந்த வினோதங்களை உலகிற்கு சொல்ல, நாம் தினசரி பார்க்கும் விஷயங்களில் உள்ள நகைச்சுவை தன்மையை நமக்கு காட்டி, சாதாரண விஷயத்தை கூட வைரலாக்குவது தான் இன்டெர்நெட்டின் மகிமை. அந்த வகையில் தற்போது ஒரு புது மண தம்பதியின் புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

அப்படி என்ன இந்த couple ஃபோட்டோ ல இருக்கு என்று கேட்கிறீர்களா?


அந்த புகைப்படத்தில் இருப்பது இரண்டு வாட்டர் டிஸ்பென்சர்கள். ஆம், ஜவ்ரோர் என்ற பெயரில் உள்ள டிவிட்டர் பயனர் ஒருவர் இரண்டு வாட்டர் டிஸ்பென்சர்கள் பக்கம் பக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை எடுத்து, தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதற்கு அவர் "இருவருக்கும் வாழ்த்துக்கள் என்ற தலைப்பிட்டு பதிவேற்றியிருந்தது தான் அது வைரலாக காரணம்.


கருப்பு நிறத்தில் ஒரு வாட்டர் டிஸ்பென்சரும், வெள்ளை நிறத்தில் ஒரு டிஸ்பென்சரும் இருந்தன. அந்த வெள்ளை நிற டிஸ்பென்சரின் மேல் இருந்த பிளாஸ்டிக் கவர் பிரிக்கப்படாமல் இருக்கிறது. இதை அசல் பார்ப்பதற்கு சர்ச்சில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் போலவே காட்சியளிக்கிறது.

Wedding
ஒரே சமயத்தில் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்ட இளைஞர் - வைரலாகி புகைப்படம்

இந்த புகைப்படத்தை பகிர்ந்ததிலிருந்து கிட்ட தட்ட ஒரு மில்லியனுக்கு மேல் லைக்குகள் குவிந்துள்ளன. இதை பார்த்த டிவிட்டர் பயனர்களில் பல சிங்கிள்கள் தங்கள் மன குமுறல்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் சிலர் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.


நம்ம நயன்-விக்கியோட கல்யாண ஃபோட்டோவ விட இது தான் இப்போ ரெண்டு நாளா வைரல்


உயிரே உன்னை உன்னை எந்த வாழ்க்கைத் துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்...

Wedding
நயன்தாரா : தமிழ் பெயர் இதுதான் - வைரலாகும் 7 ஆண்டுகளுக்கு முந்தைய பதிவு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com