நயன்தாரா : தமிழ் பெயர் இதுதான் - வைரலாகும் 7 ஆண்டுகளுக்கு முந்தைய பதிவு

ஒவ்வொரு அறிவியல் வார்த்தைக்கும் கூட தமிழ் பெயர்களை உருவாக்கி வருகின்றனர் தமிழறிஞர்கள். அப்படியாக நயன்தாராவின் தமிழ் பெயரை உருவாக்கியிருக்கிறார் கவிஞர் ஒருவர்.
நயன்தாரா
நயன்தாராTwitter

கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டார் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தார. திருமணத்தீர்கு முன்பு எப்படியிருந்ததோ, அது போலவே திரும்ணம் முடிந்த பின்பும் அவ்வப்போது நயனின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து தன் காதலை வெளிக்காட்டி வருகிறார் அவரது கணவர் விக்னேஷ் சிவன்.

இதனால் இணையத்தில் ட்ரெண்டில் உள்ளார் நயன். இது ஒருபக்கம் இருக்க நயன்தாராவின் பெயர் குறித்த புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது ஒரு பேஸ்புக் பதிவு.

நயனின் இயற் பெயர் டயானா மரியா குரியன் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் நயன்தாரா தான் ரசிகர்களுக்கு விருப்பப்பட்ட ஒன்றாக இருந்திருக்கிறது. இப்போது சர்ச்சையோ இவை இரண்டும் இல்லாத புதிய பெயர் ஒன்றினால்.

அது தான் நயந்தாராவின் தமிழ் பெயர் என்ன? என்பது. தமிழ் வேறு மொழிகளை சார்ந்திராத தனித்தமிழாக இன்றும் இருந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு அறிவியல் வார்த்தையையும் தமிழ்படுத்தி வருகின்றனர் தமிழறிஞர்கள். அப்படியாக நயன்தாராவின் தமிழ் பெயரை உருவாக்கியிருக்கிறார் கவிஞர் ஒருவர்.

nayanthara
nayantharatwitter

நிறைசூலி எனும் கவிதைப் புத்தகத்தை எழுதியவர் கவிஞர் மகுடேசுவரன். கடந்த 2015ம் ஆண்டு இவரது முகநூல் பதிவு ஒன்றில் நயந்தாரா என்ற பெயருக்கு தமிழ் பெயர் உடுக்கண்ணி என்று கூறி அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

நயன்தாரா
சாமிக்கண்ணு வின்சென்ட் : உலகம் கொண்டாட வேண்டிய தமிழ் சினிமாகாரரின் கதை

அவரது பதிவில்,

"நயன்தாரா’ என்னும் பெயர் தமிழ்ச்சொற்களால் ஆனதில்லை என்பதால் உரிய தமிழ்ப்பெயர் கூறுக’ என்னும் நண்பரின் பதிவொன்றைப் பார்த்தேன். நயனம் என்றால் கண். தாரா (தாரகை) என்றால் நட்சத்திரம். சில நாள்களுக்கு முன்வரை நட்சத்திரம் என்பதற்கு உரிய தமிழ்ப்பெயர் இல்லையோ என்று வருந்தியிருந்தேன். விண்மீன் என்பதும்கூட கவிதைப்பண்புள்ள உருவகப்பெயர்தான். உடுமலை என்ற ஊர்ப்பெயரை ஆராய்ந்தபோது உடு’ என்பது நட்சத்திரத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல் என்பது தெரிந்தது. நயன்தாரா என்னும் பெயரைத் தமிழ்ப்படுத்தினால் ‘உடுக்கண்ணி’ என்று ஆகும்." எனப் பதிவிட்டுள்ளார்.

எழுத்தாளர் அகரமுதல்வன் நேர்காணல் : ஈழ தமிழர்களை மிக மோசமாக தமிழ் சினிமா அணுகுகிறது

இந்த பதிவை தற்போது பகிர்ந்துவரும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை கூறியும், கலாய்த்தும் வருகின்றனர். குறிப்பாக கவிஞர் மனுஷ்யபுத்திரன்,

"நயன்தாரா- உடுக்கண்ணி

இந்த நாளின் துயரம் இப்படியாகத் துவங்குகிறது" என பதிவிட்டிருந்தார்.

நயன்தாரா
பூமர் அங்கிள் : இணையத்தை கலக்கும் ஒற்றை சொல் - இதன் வரலாறு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com