Fire Accident
Fire AccidentCanva

ரியல் ஹீரோ: நெருப்பில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய டெலிவரி ஊழியர் - ஒரு த்ரில் வீடியோ

நெருப்பை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டில் சிக்கியவர்களைக் காப்பாற்ற விரைந்தார். அந்த வீட்டில் இருந்த ஐந்து சிறுவர்களை துணிச்சலாக காப்பாற்றியுள்ளார்.
Published on

டெலிவரி வேலை செய்யும் அனைவரும் பெருமைப்படும்படி ஒரு இளைஞர் செய்த செயல் இணையத்தில் பரவி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. கொழுந்துவிட்டு எரியும் வீட்டிற்குள் மாட்டிகொண்ட 5 சிறுவர்களை தன் உயிரை பற்றி கவலைப்படாமல் காப்பாற்றியிருக்கிறார் அவர்.

அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள லஃபாயேட்டே (Lafayette) என்ற நகரத்தில் பீட்சா டெலிவரி வேலை செய்து வருகிறார் நிகோலஸ் போஸ்டிக் (Nicholas Bostic). இவர் கடந்த ஜூலை 14 ஆம் தேதி தன்னுடைய பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது நெடுஞ்சாலை அருகே இருந்த வீடு ஒன்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.


நெருப்பை கண்டு அதிர்ச்சியடைந்த போஸ்டிக், வீட்டில் சிக்கியவர்களைக் காப்பாற்ற விரைந்தார். அந்த வீட்டில் இருந்த ஐந்து சிறுவர்களை துணிச்சலாக காப்பாற்றியுள்ளார்.

முதலில் வெறும் நால்வரை மட்டுமே காப்பாற்றிய இவர், இன்னும் ஒரு சிறுவன் உள்ளே மாட்டிக்கொண்டிருப்பதை அறிந்து சற்றும் யோசிக்காமல் மீண்டும் நெருப்பு சூழ்ந்த வீட்டிற்குள் சென்று அச்சிறுவனை காப்பாற்றினார். இச்சம்பவத்தின் போது இவருக்கும் பலத்த காய்ங்கள் ஏற்பட்டன. புகை மூட்டத்தால் மூச்சு திணறலும் ஏற்பட்டு மிகுந்த அவதிக்கு உள்ளானார்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரு பாடிகேமில் பதிவாகியிருந்தது

போஸ்டிகின் இந்த துணிச்சல் மிகுந்த இச்செயலை பாராட்டி Lafayette நகரின் காவல்துறை தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த சம்பத்தை பற்றி பதிவிட்டது. மேலும், இந்த இளைஞரின் செயலை கண்டு Lafayette நகரின் மேயர் இவரை பாராட்டி உள்ளனர்.

Fire Accident
சோமேட்டோ ஊழியருக்கு உதவிய ஸ்விக்கி ஊழியர் - இணையவாசிகளை நெகிழ வைத்த சம்பவம் |Video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com