சோமேட்டோ ஊழியருக்கு உதவிய ஸ்விக்கி ஊழியர் - இணையவாசிகளை நெகிழ வைத்த சம்பவம் |Video

ஸ்விக்கி ஊழியர் ஒருவர், சாலையில் சென்ற சோமேட்டோ ஊழியருக்கு உதவிய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Swiggy- Zomato Delivery Agent
Swiggy- Zomato Delivery AgentCanva

சைக்கிளில் பயணம் செய்யும் சோமேட்டோ ஊழியரை ஒரு ஸ்விக்கி ஊழியர் தன் பைக்குடன் சேர்த்துக் கூட்டிச் செல்லும் காட்சி இணையத்தில் பலரையும் நெகிழச் செய்துள்ளது.


துரித உணவுகளுக்கு மக்கள் அடிமையாகி வருகின்றனர். இன்னும் அதனை நவீனமாக்கி வாடிக்கையாளர்களுக்கு உணவை நேரடியாக பல நிறுவனங்கள் எடுத்து செல்கின்றனர்.

அதில் ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனம் முக்கிய பங்கு வகுக்கிறது. `இந்த இரு நிறுவனங்களுள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Swiggy delivery man takes along Zomato agent
Swiggy delivery man takes along Zomato agenttwitter

பல விதமான ஆஃபர்களை அள்ளிக் கொடுக்கும் இவ்விரு நிறுவனங்களும், மக்களுக்கு சமமாகவே சேவையை வழங்கி வருகிறது. இவர்களுக்குள் கடும் போட்டி, பகை நிலவுகிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், இணையத்தில் பகிரப்படும் வீடியோ ஒன்று, அப்படி எந்தவிதமான பகையும் இல்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.


நம் நண்பர்களுடன் சேர்ந்து செல்லும்போது, அல்லது வாகனம் பழுதடைந்தாலோ, நிறைய முறை அவர்களது வாகனத்தின் மீது நாம் காலை வைத்துக்கொண்டு, அந்த வாகனத்தின் உந்துதலில் வண்டியை ஓட்டிசெல்வோம். இங்கும் ஒரு ஸ்விக்கி நிறுவனத்தின் ஊழியர் சோமேட்டோ ஊழியர் ஒருவரை அப்படித்தான் கூட்டிச் செல்கிறார்.

Swiggy- Zomato Delivery Agent
குதிரையில் உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர் - கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5000 சன்மானம்

சைக்கிளில் பயணம் செய்யும் சோமேட்டோ ஊழியரின் கையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் ஸ்விக்கி ஊழியர் தன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்கிறார்.

அந்த வீடியோவை இவர்களுக்கு பின்னால் காரில் பயணம் செய்யும் சன்னா அரோரா என்ற பெண் படம்பிடித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


"டெல்லியின் தகிக்கும் வெயிலில் ஒரு உண்மையான நட்பை இங்கு பார்க்கலாம்" என்று அவர் தலைப்பிட்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்த்தவர்கள் அந்த ஸ்விக்கி ஊழியரின் நற்குணத்தை பாராட்டி வருகின்றனர்.


"இன்றைய சூழலில் இது மிகவும் தேவையான ஒன்று" என ஒருவர் கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Swiggy- Zomato Delivery Agent
கேக்குடன் Resume கொடுத்து வேலை கேட்ட சொமேட்டோ ஊழியர் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com