நேபாள்: நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்பலி; தொடரும் விமான விபத்துகள் - என்ன காரணம்?

2000ம் ஆண்டிலிருந்து இதுவரை 17 விமான விபத்துகள் ஏற்பட்டுள்ள நிலையில், 2010இல் இருந்து மட்டும் 11 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
நேபாள்: நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்பலி; தொடரும் விமான விபத்துகள் - என்ன காரணம்?
நேபாள்: நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்பலி; தொடரும் விமான விபத்துகள் - என்ன காரணம்?twitter

நேற்று நேபாள் தலைநகர் காட்மண்டுவிலிருந்து புறப்பட்ட யெட்டி ஏர்லைன்ஸ் விமானம், போக்காரா விமான நிலையத்தில் தரையிறங்கும் தருவாயில் விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த மொத்தம் 72 பயணிகளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5 இந்தியர்களும் அடக்கம். இதுவரை விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இதற்கு முன்னர் கடந்த மே மாதம் நேபாளத்தில் மற்றொரு விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர்

மிகவும் பிரபலமான, அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமான நேபாளம், விமான விபத்துகளுக்கு பெயர்பெற்று வருவது வருத்தத்துக்குறியது.

விமான விபத்து
விமான விபத்து

முறையான பராமரிப்பின்மை, குறைவான பயிற்சி, தளர்வான தரநிலைகள் ஆகிய காரணங்களால் இங்கு அதிகமாக விமான விபத்துகள் நிகழ்வதாக தெரிவிக்கிறது லைவ் மிண்ட் தளம்.

மேலும் உலகிலேயே மிக குறுகிய, குழப்பமான ஓடுதளங்களை கொண்ட விமான நிலையங்களுள் ஒன்று நேபாள் விமான நிலையம்.

பனி மலைகள் சூழ்ந்திருப்பதால், அனுபவமிக்க விமானிகள் கூட இங்கு விமானத்தை தரையிறக்க சிரமப்படுவார்கள்.

லைவ் மிண்ட் தளத்தின் கூற்றுப்படி, 2000ம் ஆண்டிலிருந்து இதுவரை 17 விமான விபத்துகள் ஏற்பட்டுள்ளன. 2010இல் இருந்து மட்டும் 11 விபத்துகள்.

கடந்த மே மாதம் 2022 ஆம் ஆண்டு மஸ்டாங் நகரில் நிகழ்ந்த விபத்து தான் சமீபத்திய நிகழ்வு. பாறைகளாலும், மலைகளாலும் சூழப்பட்ட நேபாளத்தில், வானிலை எப்போதும் கணிக்கமுடியாதபடியே இருக்கிறது.

நேபாள்: நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்பலி; தொடரும் விமான விபத்துகள் - என்ன காரணம்?
Nepal : 68 பேரை பலியாக்கிய விமான விபத்து; பேஸ்புக்கில் லைவ் செய்த இந்திய பயணி - வீடியோ

நேபாளத்தின் லுக்லாவிலுள்ள டென்சிங் ஹிலரி விமான நிலையம், உலகின் மிக ஆபத்தான விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

நேபாளின் சிவில் ஏவியேஷன் அதாரிட்டியின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளின் தரவுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், சிமிகோட், ஜும்லா, மற்றும் லுக்லா விமான நிலையங்கள் நேபாளத்தின் மிக ஆபத்தான விமான நிலையங்கள் என்று கண்டறியப்படுகிறது.

2009 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டுவரை நடந்த விமான விபத்துகளில் 2016 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 4 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

நேபாள்: நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்பலி; தொடரும் விமான விபத்துகள் - என்ன காரணம்?
விமான விபத்து : 33 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண் - ஆச்சரிய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com