விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது பயணி ஒருவருக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக விமானத்தை தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இது வரை பல காரணங்களுக்காக விமானத்தை எமர்ஜென்சி லேண்டிங் செய்திருப்பதை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த சம்பவ சற்றே வினோதமானதாக இருந்துள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் இருந்து ஸ்பெயின் நாட்டின் டெல்டா விமானமான ஏர் 350 புறப்பட்டது
அப்போது நடுவழியில், விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி வேண்டுகோள் விடுத்தார். இதற்கான காரணம் கேட்கப்பட்டபோது, பயணி ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை biohazard issue (உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய பிரச்சினை) என்று பட்டியலிட்டு விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டுள்ளார் விமானி.
இது தொடர்பான ஆடியோ ஒன்று லைவ் ATC டாட் காம் என்ற X தளத்தில் பகிரப்பட்டிருந்தது. அதில் விமானி, “விமானம் புறப்பட்டதில் இருந்து பயணி ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் விமானத்தை மீண்டும் அட்லாண்டாவுக்கே திருப்ப வேண்டுகின்றனர்” என்று கூறுகிறார்
இந்த பிரச்னை ஏற்பட்ட பயணி குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மற்ற பயணிகள் மாற்று விமானத்தில் பார்சிலோனாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் 8 மணி நேரம் தாமதமாக தான் சென்றடைந்தனர்.
இந்த விமானத்தினை முழுவதுமாக சுத்தப்படுத்தியதாகவும், அதன் பிறகே அடுத்த பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்றும் விமானக் குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உடலநலக் கோளாறு ஏற்பட்ட பயணி, மீண்டும் அந்த மாற்று விமானத்தில் பயணித்தாரா என்பது பற்றிய தகவல்கள் இல்லை!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust