அரசியல் முதல் பயங்கரவாதம் வரை : உலகையே கட்டுப்படுத்தும் 13 குடும்பங்கள் - யார் இவர்கள்?

இந்த 13 குடும்பங்களின் கட்டளை படியே உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி மாற்றம், முன்னேற்றம் ஆகியவை ஏற்படுகின்றன என்றும் எந்த நாட்டில் எங்கு தீவிரவாதம் தலை எடுக்க வேண்டும் என்ற முடிவும் இவர்களே எடுக்கின்றனர் என்றும் பிரிட்ஸ் கூறியுள்ளார்.
These Are The 13 Families that control the world (Rep)
These Are The 13 Families that control the world (Rep)Twitter

இந்த உலகில் எத்தனையோ சூழ்ச்சி கோட்பாடுகள் பேசப்பட்டு வருகிறது.

அதில் முக்கியமான ஒரு சூழ்ச்சி கோட்பாடு தான் 13 குடும்பங்கள் உலகத்தை ஆளுகின்றன என்பது. இந்த 13 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இலுமினாட்டிகள் என்று அழைக்கப்படுவார்கள்.

உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இந்த 13 குடும்பங்களே காரணம் என பலரால் பெரிதும் நம்பப்படுகிறது.

இந்த கருத்து சினிமா மூலமாக வெகுஜன மக்களுக்கும் சமீப காலமாக கொண்டு சேர்க்கப்படுகிறது. இது முதலில் ஹாலிவுட்டில் தொடங்கி தற்போது அனைத்து மொழி சினிமாக்களிலும் காட்டப்படுகிறது.

உலகில் நடக்கும் அரசியல், விளையாட்டு, வணிகம், சுகாதாரம் கடைசியாக தீவிரவாத நிகழ்வில் கூட இந்த 13 குடும்பங்களின் ஆதிக்கம் இருக்கும் என பிரிட்ஸ் ஸ்பிரிங்மியர் என்ற ஆராய்ச்சியாளர் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 13 குடும்பங்களின் கட்டளை படியே உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி மாற்றம், முன்னேற்றம் ஆகியவை ஏற்படுகின்றன என்றும் எந்த நாட்டில் எங்கு தீவிரவாதம் தலை எடுக்க வேண்டும் என்ற முடிவும் இவர்களே எடுக்கின்றனர் என்றும் பிரிட்ஸ் கூறியுள்ளார்.

These Are The 13 Families that control the world (Rep)
72 பேர், 15 கிலோ காய்கறி, 20 லிட்டர் பால்: மராட்டியத்தில் ஓர் அடடே குடும்பம்

இந்த குடும்பங்களிடம் உலகிலேயே மிகக் கொடிய நோயாக பார்க்கப்படும் புற்றுநோய் மற்றும் எய்ட்ஸுக்கு மருந்து இருப்பதாகவும் அதை மக்களுக்கு அவர்கள் தரவில்லை என்றும் பரவலாக நம்பப்பட்டு வருகிறது.

உலகையாளும் அந்த 13 குடும்பங்கள் இவையே

 • ஆஸ்டர் குடும்பம்

 • பண்டி குடும்பம்

 • கொலின்ஸ் குடும்பம்

 • டியூபாண்ட் குடும்பம்

 • ஃப்ரீ மேன் குடும்பம்

 • கென்னடி குடும்பம்

 • லீ குடும்பம்

 • ஒனாசிஸ் குடும்பம்

 • ராக்ஃபேலர் குடும்பம்

 • ரசல் குடும்பம்

 • வான் டியூன் குடும்பம்

 • மெரோவிஞ்சியன் குடும்பம்

 • ராட்சைல்ட் குடும்பம்

உலகில் உள்ள 99 சதவீத சொத்துக்கள் இந்த குடும்பங்களிடமே உள்ளது. மீதமுள்ள ஒரு சதவீத சொத்துக்கள் மட்டுமே பிறரிடம் உள்ளதாக பரவலாக நம்பப்படுகிறது.

இதுவரை இலுமினாட்டி குடும்பங்கள் இருப்பதற்கான எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை.

ஆனால் இது வெகுஜன மக்களால் பெரிதும் நம்ப படுகின்றன. இந்த சூழ்ச்சி கோட்பாடு உண்மையா பொய்யா என இப்போது வரை விவாதிக்கப்பட்டு வந்தாலும் உண்மையில் உலகையே ஆட்டி வைக்கும் குடும்பங்கள் இருப்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்!

These Are The 13 Families that control the world (Rep)
Aliens : வேற்றுகிரகவாசிகள் நடமாட்டமா? - கண்டுபிடிக்க நாசா புதிய திட்டம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com