Aliens : வேற்றுகிரகவாசிகள் நடமாட்டமா? - கண்டுபிடிக்க நாசா புதிய திட்டம்

50 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் வேற்றுக்கிரக வாசிகள் குறித்து முதல் பொது விசாரணை சமீபத்தில் நடந்து ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக வெளிவந்தன. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் குறித்த பதிவுகளை விசாரிப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியது.
Aliens
AliensPexels
Published on

சமீபத்தில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மூலம் பிரபஞ்சம் தோற்றம் குறித்த உண்மையை அறிவியல் உலகம் நெருங்கி வருகிறது. அந்த தொலைநோக்கியை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக உருவாக்கினர். இந்த சாதனையைப் படைத்த நாசா தற்போது அதிரடியாக அடுத்த திட்டத்தை அறிவித்துள்ளது.

அது விண்வெளியில் வேற்றுகிரகவாசிகளை அல்லது ஏலியன்ஸ்களை தேடுவதற்காக தற்போதுள்ள செயற்கைக் கோள்களைப் புதுப்பிப்பது அல்லது மறு பயன்பாட்டிற்குப் பயன்படும் வகையில் நாசா திட்டமிட்டுள்ளது

பொதுவில் கலைஞர்கள் எழுத்தாளர்கள் தேடல் உள்ளவர்களாக தங்களைக் காட்டிக் கொள்வார்கள். தேடல்தான் அவர்களது சுதந்திரமான கலையைத் தோற்றுவிக்கிறது. கலைஞனுக்கு மட்டுமல்ல விஞ்ஞானிகளுக்கும் அந்த தேடல் பல விசயங்களிலிருந்து வருகிறது.

NASA
NASATwitter

அதில் ஒன்றுதான் வேற்றுகிரகவாசிகளுக்கான தேடல். இது பல ஆண்டுகளாகப் பல விஞ்ஞானிகளுக்கு ஒரு சவாலாகவும் அதே நேரத்தில் உந்து சக்தியாகவும் இருந்து வருகிறது. அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வண்ணம் அவர்களுக்கு உதவ நாசா ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் வேற்றுக்கிரக வாசிகள் குறித்து முதல் பொது விசாரணை சமீபத்தில் நடந்து ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக வெளிவந்தன. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் குறித்த பதிவுகளை விசாரிப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியது.

மற்றும் நாசாவின் அறிவியல் இயக்க இயக்குநரகத்தின் டாக்டர் தாமஸ் சுர்புச்சென், நாசா உண்மையில் தற்போதுள்ள செயற்கைக் கோள்களின் உதவியைப் பெற முடியும் என்று சுட்டிக் காட்டியுள்ளார். "விசித்திரமான வான்வழி நிகழ்வுகள் பற்றிய மற்றொரு பார்வையை" பெறுவதன் மூலம் வேற்றுக்கிரக வாசிகளது வாழ்வின் தடயங்களைக் கண்டறிய முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Aliens
வேற்று கிரகங்களில் நீர் இருப்பது உண்மை; ஏலியன்ஸ் இருப்பது உண்மையா? - அதிர வைக்கும் ஆய்வு
NASA
NASATwitter

இதே போன்ற கருத்தை நாசாவின் துணை நிர்வாகி கர்னல் பாம் மெல்ராயும் வெளிப்படுத்தினார்.

தி டெலிகிராஃப் பத்திரிகையில் அவர் அளித்த நேர்காணலில், "எங்கள் குழு வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பான கேள்விகளை ஆய்வு செய்யப் போகிறது. எங்களிடம் அத்தகைய அடையாளம் தெரியாத பொருட்களைப் பார்க்கக் கூடிய சென்சார்கள் உள்ளன, உங்களுக்குத் தெரியுமா", என்று அவர் கேட்டார்.

தங்களிடம் இருக்கும் ஒரு டன் அதாவது நூற்றுக்கணக்கான செயற்கைக் கோள்கள் பூமியைப் பார்க்கின்றன, அவற்றில் ஏதேனும் பயனுள்ளதா என்று உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம் என்று அவர் கூறினார்.

Aliens
ஏலியன்ஸ் பூமி மீது படையெடுக்குமா? ஆராய்ச்சியாளர் கூறும் புதிய தகவல்
Aliens
Aliens NewsSense

ஆனால் அப்படி ஒரு கேள்வி எழாத வண்ணம் பலவகை ஆய்வுகளுக்கேற்ற வகையில்தான் நாசாவின் செயற்கைக் கோள்கள் உருவாக்கப்படுகின்றன. சான்றாக செவ்வாய்க் கிரகத்தை ஆராய அனுப்பிய ரோவரை எடுத்துக் கொள்வோம். அதில் பல விசயங்களைக் கண்டறியும் சென்சார்கள் உள்ளன. தற்போது அந்த சென்சார்களை வைத்து வேற்றுக்கிரக வாசிகள் குறித்த விசயங்களை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்தப் போவதாக கர்னல் பாம் மெல்ராய் கூறினார். அந்த நேர்காணலில் அவர் இது குறித்து விரிவாக விளக்கினார்.

ஏனெனில் சமீப காலங்களில் வல்லுநர்கள் பலர் நாசாவை விமர்சித்து வந்தனர். அதாவது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தனது சொத்துக்கள் அனைத்தையும் வேற்றுக்கிரக வாசி போன்ற புதிரை ஆய்வு செய்வதற்கு முக்கியமாகப் பயன்படுத்தவில்லை. இதுதான் விமர்சனம். இதை நாசா நிர்வாகியான பில் நெல்சன் மறுக்கிறார். வடக்கு அட்லாண்டிக் விண்வெளி நிறுவனம் என்று அழைக்கப்படும் நாசாவின் முக்கியமான பணிகளில் ஒன்று பூமிக்கு வெளியே ஏதும் ஜீவராசிகள் உள்ளதா என்று தேடுவது என்று அவர் விளக்கினார்.

தி டெலிகிராப் செய்தியில் அவர் அதை உறுதிப்படுத்துகிறார். "எங்கள் பணிகளில் ஒன்று உயிர் இருக்கிறதா என்று பார்ப்பது என்பதை நினைவில் கொள்ளுங்கள் அதனால்தான் நாங்கள் இப்போது செவ்வாய்க் கிரகத்தைப் பல வழிகளில் தோண்டி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

Aliens
செவ்வாய் கிரகத்தில் பாஸ்தா? நாசா விண்கலம் கண்டுபிடித்தது என்ன?
Aliens
AliensPexels

“பிரபஞ்சம் போன்ற பெரிய அமைப்பு ஒன்றில் உயிர் இருக்க வாய்ப்பு உள்ளதா? நிச்சயமாக, அது போன்ற பெரிய இடங்களில், பூமியைப் போன்ற நிலைமைகள் இருந்ததற்கும், வேறு சில வகையான உயிரினங்கள் உருவாகுவதற்கும் வாய்ப்பு உள்ளது,” என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.

எனவே இனியும் நாம் வேற்றுக்கிரக வாசிகள் குறித்து வெறுமனே திரைப்படங்களில் மட்டும் நமது கற்பனையை ரசித்துக் கொண்டிருக்க மாட்டோம். உண்மையில் பூமிக்கு வெளியே ஏதோ ஒரு கிரகத்தில், கோளில் ஏதோ ஒரு உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டிப்பாகக் கண்டுபிடிப்பார்கள். அத்தகைய உறுதி மொழியை நாசா நிர்வாகிகள் டெலிகிராஃப் நேர்காணலில் அளித்திருக்கிறார்கள். நாமும் காத்திருப்போம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com