அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஒரு பெண் கைதி காவலர்கள் மீது வழக்குத் தொடர்ந்து 3.83 கோடி இழப்பீடு பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த சாண்ட்ரா குயினோன்ஸ் என்ற பெண் தான் இதனைச் செய்துள்ளார். 34 வயதாகும் அவர் 2016ம் ஆண்டு ஆரஞ்ச் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அப்போது அவர் கற்பமாக இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.
அப்போது 28 வயதாக இருந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல காவல்துறையினர் தாமதப்படுத்தியதால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறுகிறார் சாண்ட்ரா குயினோன்ஸ்.
சிறை தண்டனை முடிந்து வெளியான உடன் காவலர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கிறார் சாண்ட்ரா.
மருத்துவமனைக்கு சாண்ட்ராவை அழைத்துச்செல்லும் வழியில் காவல்துறையினர் ஸ்டார்பக்ஸில் காரை நிறுத்தி காபி அருந்தியுள்ளனர். அந்த நேரத்தில் அதிக வலியால் துடித்திருந்திருக்கிறார் சாண்ட்ரா. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டதால் சாண்ட்ராவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது.
நீதிமன்றத்தில், கருவுற்றிருந்த நிலையில் தனக்குத் தேவையான மருத்துவ வசதிகளை போலீஸார் செய்து தரவில்லையென்றும், அவசர நேரத்தில் அவர்கள் ஆம்புலன்ஸை வரவழைக்க ஏற்பாடு செய்யவில்லை என்றும் சாண்ட்ரா குற்றம் சாட்டினார்.
வழக்கு விசாரணை முடிவில் சாண்ட்ராவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு ரூ.3.83 கோடி (4.8 லட்சம் அமெரிக்க டாலர்கள்) இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust