Prince Harry 'needed electric shock therapy' for Meghan Markle's scenes
Prince Harry 'needed electric shock therapy' for Meghan Markle's scenesTwitter

"இளவரசர் ஹாரிக்கு ஷாக் ட்ரீட்மென்ட்" - மேகன் மார்க்லேவின் ஆபாச காட்சியால் அதிர்ச்சி!

சூட்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் போது மேகன் மார்க்கலின் ஆபாச காட்சிகளைப் பார்த்து ஷாக் ட்ரீட்மென்ட் தேவைப்பட்டதாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.
Published on

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த சார்லஸின் மகன் அமெரிக்க நடிகையும், விவாகரத்து ஆனவருமான மேகன் என்ற பெண்ணைத் திருமணம் செய்வதற்காக அரச பட்டத்தைத் துறந்தார்.

சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ் என அறியப்படும் இவர்கள் திருமணத்துக்குப் பல தடைகள் ஏற்பட்டன. அமெரிக்காவில் வாழ்க்கையைத் தொடங்கியதால் HRH எனப்படும் அரசப்பட்டத்தைத் துறந்தார் இளவரசர் ஹாரி.

இப்போது இவர்களுக்கு லிலிபெட் என்ற பெண் குழந்தை உள்ளது.

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லேTwitter

இளவரசர் ஹரி, தன் மனைவி மேகன் ஒரு நடிகையாக இருந்தபோது நடித்த ஆபாசக்காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.

ஹரியும் மேகனும் டேட்டிங் செய்ய தொடங்கியதுமே மேகன் விளம்பரங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டது.

Prince Harry 'needed electric shock therapy' for Meghan Markle's scenes
இதுவல்லவா காதல்! ஹாரி முதல் எட்வர்ட் வரை- காதலுக்காக பட்டத்தை துறந்த அரச குடும்பத்தினர்

குறிப்பாக, Suits என்னும் தொலைக்காட்சித் தொடரில் மேகன் நடிக்கும்போது, ஹரி ஷூட்டிங் பார்க்கச் சென்றிருந்தாராம்.

அப்போது தன் காதலியாக இருந்த மேகனுடன் ஒரு நடிகர் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளை ஹரி கண்டுள்ளார்.

தன் காதலி வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்த அந்த ஆபாசக் காட்சிகளைப் பார்த்ததால், அந்த காட்சிகளை தன் மனதில் இருந்து அகற்ற, தனக்கு மின்சார ஷாக் சிகிச்சை தேவை என தான் நினைத்ததாகக் கூறியுள்ளார் ஹாரி.

Prince Harry 'needed electric shock therapy' for Meghan Markle's scenes
இதுவல்லவா காதல்! ஹாரி முதல் எட்வர்ட் வரை- காதலுக்காக பட்டத்தை துறந்த அரச குடும்பத்தினர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com