எரியும் இலங்கை, உடையும் செருக்கு: அதிபர் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்- தப்பினாரா கோத்தபய?

அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக என வலியுறுத்தி மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதில் பலர் காயமடைந்துள்ளனர்.
கோத்தபய ராஜபக்சே
கோத்தபய ராஜபக்சேNewsSense
Published on

இலங்கை பல மாதங்களாகவே கடும் போராட்டங்களைச் சந்தித்து வருகிறது. அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் இலங்கைக்காக உதவி செய்திருக்கின்றனர்.

இருப்பினும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலைமை மிகவும் மோசமடைந்ததையொட்டி, சில மாதங்களுக்கு முன்பு, மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். ஆனால் இன்னும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி சரியாகவில்லை.

Srilanka protest
Srilanka protestTwitter

இலங்கையில் தற்போது கடும் எரிபொருள் பற்றாக்குறை நிலவிவருகிறது. உணவுப்பொருட்களின் கடும் விலை உயர்வு, மருந்துகள் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதார பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இதன் காரணமாக ஆளும் கட்சிக்கு எதிராக இலங்கை கொழும்புவில் , எதிர்க்கட்சியினர், மாணவர் அமைப்பினர், தொழிற்சங்க அமைப்புகள் எனப் பலதரவைப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ மாளிகையில் ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டிருக்கின்றனர்.

"கோத்தபய வெளியே போ!" எனப் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

கொழும்பில் உள்ள மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே மாளிகையை விட்டுத் தப்பி இருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக என வலியுறுத்தி மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதில் பலர் காயமடைந்துள்ளனர்.

கோத்தபய ராஜபக்சே
இலங்கை : இன்றைய நெருக்கடிக்கு 5 முக்கிய காரணங்கள்
ரணில் விக்ரமசிங்கே
ரணில் விக்ரமசிங்கேTwitter

இலங்கையில் போராட்டம் தீவிரமடையும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையொட்டி, கோத்தபய ராஜபக்சே தப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை இரவு ஊரடங்குச் சட்டத்தை விதித்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்த அதிகாரிகள் முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் தடுமாற்றம் அடையவில்லை, பல அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது.

நெருக்கடி நிலை குறித்து ஆலோசிப்பதற்காகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோத்தபய ராஜபக்சே
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை கைப்பற்றிய மக்கள் - என்ன நடக்கிறது அங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com