ரஷ்ய அதிபர் புதினுடன் எடுக்கப்படும் புகைப்படங்களில் ஒரே பெண்னின் முகம் மீண்டும் மீண்டும் தோன்றுவதால் இந்த விஷயம் பேசுபொருளாகி வருகிறது.
ரஷ்யாவின் அதிபர் விளாதிமிர் புதின், சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றவர். ரஷ்யா உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்த நிலையில் தற்போது அந்த போர் 11ஆம் மாதத்தை எட்டியுள்ளது. இன்னும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை.
இதனால் புதின் மீது விமர்சனங்கள் அதிகரித்தன. பல தரப்புகளிலிருந்தும் பல விதமான எதிர்ப்புகள் வந்தன. சமீபத்தில் கூட இங்கிலாந்தில் புதினுக்கு மக்கள் ஆணுறுப்பு சிலை ஒன்றை நிறுவி, “2022ன் இழிவான நபர் புதின்” என விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், மற்றுமொரு விமர்சனம் அவர் மீது எழுந்திருக்கிறது.
ரஷ்ய அதிபருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களுக்கு புதின் ஒரே நபரை, அல்லது ஒரே குழுவை தான் பயன்படுத்துகிறார் என்பது தான் அந்த விமர்சனம்
புதின் ராணுவ வீரர்கள், கப்பல் குழுவினர், வழிபாட்டு விழா என மூன்று தருணங்களில் மக்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுள்ளார்.
அந்த மூன்று புகைப்படங்களிலும் ஒரே பெண்ணின் முகம் இருப்பதை கவனித்து சுட்டிக்காட்டினார் இங்கிலாந்து நிருபர் Tadeusz Giczan.
தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்ததும், இணையவாசிகளின் கவனத்தை அது வெகுவாக ஈர்த்தது.
ஒரு சிலர் அந்த பெண் நடிகை எனவும், அதிபருடனான புகைப்படங்களுக்கு அவரை வழக்கமாக பயன்படுத்துகின்றனர் எனவும் கருத்துகளை தெரிவித்தனர். ஒரு தரப்பினரோ இவர் புதினின் தனிப்பட்ட பாதுகாவலராகக் கூட இருக்கலாம் என்று தெரிவித்து வருகின்றனர்.
இந்த ட்வீட்டுக்கு 78 ஆயிரத்துக்கும் அதிகமாக லைக்குகளும் 9,000த்துக்கும் அதிகமாக ரீட்வீட்டும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிலர், அந்த பெண் மட்டுமல்ல, இன்னும் ஒரு சிலரும் இந்த புகைப்படங்களில் திரும்ப திரும்பத் தோன்றுகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தனர்
நாட்டிற்கு தன்னிகரற்ற சேவையாற்றும் ராணுவ வீரர்களை புதின் சந்தித்தது கூட நிஜமில்லை என்பது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust