ஆறாவது முறையாக கொலை முயற்சி; உயிர் தப்பிய ரஷ்ய அதிபர் புதின் - என்ன நடந்தது?

தான் இதுவரை குறைந்தபட்சம் 5 கொலை முயற்சியிலிருந்து தப்பித்ததாகக் கடந்த 2017ஆம் ஆண்டு விளாதிமிர் புதினே பொதுவெளியில் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.
Putin
PutinNewsSense
Published on

உலகத் தலைவர்கள், முக்கிய அரசியல் பிரபலங்கள், அதிபர், பிரதமர் போன்ற அரசியலமைப்புச் சட்டங்களால் உருவாக்கப்பட்ட பெரும் பதவிகளில் இருப்பவர்களுக்கு எப்போதும் ஆபத்து சூழ்ந்து இருக்கும். அவர்களைக் கொலை செய்யக் கூட முயற்சிகள் நடக்கலாம் என்பதால் 24 மணி நேரமும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.

ராணுவ வீரர்கள் முதல் மெய்க்காப்பாளர்கள் வரை பலரும் தயாராக இருப்பார்கள். அதையும் மீறி அவர்களைக் கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளதை வரலாற்றிலும், செய்தித் தாள்களிலும் பார்க்க முடிகிறது.

Putin
Putin NewsSense

அப்படி ரஷ்யாவின் அதிபர் விளாதிமிர் புதினைக் கொல்ல ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக யூரோ வீக்லி நியூஸ் என்கிற பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி டெலிகிராம் என்கிற சமூக ஊடகத்தில் புதன்கிழமை வெளியானதாகவும், மிகச் சரியாக எப்போது இந்த கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதெனத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.

கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது முதல் இன்று வரை விளாதிமிர் புதினின் உடல் நிலை குறித்தும், அவரைக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பல செய்திகள், வதந்திகள் பரவி வருகின்றன.

Murder
MurderPexels

தான் இதுவரை குறைந்தபட்சம் 5 கொலை முயற்சியிலிருந்து தப்பித்ததாகக் கடந்த 2017ஆம் ஆண்டு விளாதிமிர் புதினே பொதுவெளியில் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.

விளாதிமிர் புதினின் லிமுசின் (limousine) காரின் முன் பக்கத்தில் இடது சக்கரத்தில் ஒரு புகை குண்டு வெடித்ததாகவும், அதை பொருட்படுத்தாமல் வாகனம் பாதுகாப்பான இடத்தை நோக்கி விரைவாக ஓட்டிச் செல்லப்பட்டதாகவும் அந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக என் டி டிவி தளத்தில் கூறப்பட்டுள்ளது. 

Putin
Putin Newssense

இந்த கொலை முயற்சியில் ரஷ்ய அதிபருக்கு எந்த ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பலரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் பகுதியில் ஒரு அரசியல்வாதிகள் குழு, டூமா மாகாணத்தில் புதினுக்கு எதிராக தேசத் துரோக வழக்கு தொடுக்க வேண்டும் என்றும், அவரை அதிபர் பதவியிலிருந்து இறக்க வேண்டும் என கோரியது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதற்கு உக்ரைன் போரில் தோல்வியடைந்தது மற்றும் ரஷ்ய பொருளாதாரத்துக்கு மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளினால் ஏற்பட்ட சிரமங்களைக் காரணமாகக் கூறினர். 

மற்றொரு அரசியல்வாதியோ, செயின்ட் பீட்டர்ஸ்பெர்க், மாஸ்கோ போன்ற பகுதிகளைச் சேர்ந்த நகராட்சி பிரதிநிதிகளிடம் அதிபர் பதவியிலிருந்து விளாதிமிர் புதின் பதவி விலக வேண்டும் என கையெழுத்து வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா கைப்பற்றி வைத்திருந்த குபியான்ஸ்க் (Kupiansk) பகுதியை உக்ரைன் படைகள் கடந்த சனிக்கிழமை கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் தரப்பு கூறியுள்ளதாக பிபிசியில் செய்திகள் வெளியாயின. இப்பகுதி ரஷ்ய படைகளுக்குத் தேவையான பல முக்கிய பொருட்கள் விநியோகத்துக்குப் பயன்பட்டு வந்தன. 

Putin
PutinTwitter

அதே போல உக்ரைன் தரப்புப் படைகள், சனிக்கிழமை அன்றே கார்கிவ் மாகாணத்தில் உள்ள இஸ்யும் (Izyum) பகுதியை கைப்பற்றிவிட்டதாக மற்றொரு முக்கிய சர்வதேச ஊடகமான அல் ஜெசிரா கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ரஷ்யா சுமார் 6 வாரங்கள் போரிட்டு இப்பகுதியைக் கைப்பற்றினர் என்கிறது அல் ஜெசிரா. ஆனால் உக்ரைன் சுமார் 12 - 24 மணி நேரத்துக்குள் இஸ்யும் பகுதியை கைப்பற்றிவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவையனைத்தும் ரஷ்ய தரப்பு தோல்வியடைந்ததாகவே பார்க்கப்படுகிறது.

Putin
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கொல்ல சதியா? என்ன நடக்கிறது அங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com