உக்ரைன் போர் : 48 நாடுகளுக்கு செக் வைத்த ரஷ்யா - என்ன நடந்தது?

இதை ரஷ்யா தனது துடுப்புச் சீட்டாக கையில் எடுத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக, ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் விற்கும்போது, அதற்கான பணத்தை யூரோக்களில் பெற்றுவந்தது ரஷ்யா.
Ukraine War

Ukraine War

NewsSense

Published on

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், ஏராளமான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா சந்தித்து வருகிறது. அமெரிக்கா ரஷ்யாவின் எண்ணெய்யை இறக்குமதி செய்யத் தடை விதித்திருக்கிறது. இவ்வளவு நெருக்கடிகள் இருந்தபோதும், ரஷ்யாவின் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய்யை நம்பி பல நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன. அதனால் அமெரிக்காவின் தடையையும் மீறி ரஷ்யாவிடமிருந்து பல நாடுகள் எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன.

<div class="paragraphs"><p>Ukraine War</p></div>
உக்ரைன் போர்: நெருக்கமாகும் சவுதி அரேபிய - சீன நட்பு, தனித்துவிடப்படும் அமெரிக்கா

NewsSense

இதை ரஷ்யா தனது துடுப்புச் சீட்டாக கையில் எடுத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக, ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் விற்கும்போது, அதற்கான பணத்தை யூரோக்களில் பெற்றுவந்தது ரஷ்யா. இப்போது தனக்கு எதிராக திரும்பியிருக்கும் நாடுகளுக்கு, ரஷ்ய நாணயமான ரூபெலில் எண்ணெய் விற்கும் முடிவுக்கு வந்திருக்கிறது ரஷ்யா. ஜனவரி மாதம் கணக்குப் படி, ரஷ்யாவின் மிகப் பெரும் எரிபொருள் உற்பத்தி நிறுவனமான Gazprom-ன் இயற்கை எரிவாயு விற்பனை 58% யூரோக்களில் நடந்திருக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க டாலர்களில் நடந்த விற்பனை மட்டும் 39% என்பது குறிப்பிடத்தக்கது.

"முன்னர் போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி அதே அளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் அதற்கான பணத்தை மட்டும் ரூபெலில் பெறப்போகிறோம்" என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருக்கிறார். புதினின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் டாலருக்கு நிகரான ரூபெலின் மதிப்பு கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது. பொருளாதாரத் தடையால் சரிவைச் சந்திருந்த ரூபெல் மதிப்பு, மீண்டும் உயர்வைச் சந்தித்திருக்கிறது. தனக்கு எதிரான நாடுகள் என்ற பட்டியலில், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட 48 நாடுகளை அறிவித்திருக்கிறது ரஷ்யா. இவர்கள் எல்லோரும் இனி ரூபெலில்தான் பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்திருக்கிறது ரஷ்யா.

<div class="paragraphs"><p>Ukraine War</p></div>
Ukraine : "ரஷ்யாவைக் கண்டு NATOஅஞ்சுகிறது" - இராணுவக் கூட்டமைப்பை சாடிய செலென்ஸ்கி

ஆனால் இந்த முடிவை ஏற்க முடியாது என சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. ரஷ்யாவின் இந்த முடிவு, வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிரானது எனவும், ஐரோப்பிய கவுன்சிலோடு ஆலோசித்து என்ன செய்வது என முடிவெடுப்போம் எனவும் ஜெர்மனி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com