Ukraine : "ரஷ்யாவைக் கண்டு NATOஅஞ்சுகிறது" - இராணுவக் கூட்டமைப்பை சாடிய செலென்ஸ்கி

நோட்டோ உக்ரைனைச் சேர்த்துக்கொள்ளத் தயாராக இல்லை என்றும். உக்ரைனில் சர்ச்சைகள் இருப்பதனால் நோட்டோ நாடுகள் அஞ்சுகின்றன, அவை ரஷ்யாவுக்குப் பயப்படுகின்றன என்றும் செலென்ஸ்கி தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார்.
செலென்ஸ்கி

செலென்ஸ்கி

Twitter

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் தீவிரம் சிறிதும் குறையாமல் போர் நீடித்து வருகிறது. ரஷ்யாவை விட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இராணுவத்தைக் கொண்டு நாட்டை காப்பதற்காகப் போராடி வருகிறார் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவ முன் வராத “நோட்டோ கூட்டமைப்பு ரஷ்யாவுக்குப் பயப்படுகிறது” எனப் பேசியுள்ளார் செலென்ஸ்கி.

“நேட்டோவில் இல்லாத போதும் எங்களுக்கு நோட்டோ நாடுகள் உதவ முன்வர வேண்டும். அப்போது தான் போர் முடிவடையும்” என செலென்ஸ்கி கூறியுள்ளார். ஆனால் போர் தொடங்குவதற்கு மிக முக்கிய காரணமாக ரஷ்யா கூறியது உக்ரைன் நேட்டோவில் சேர முயல்கிறது என்பதைத் தான். தற்போது உக்ரைன் நேட்டோவில் சேரப்போவதில்லை என உறுதியாக கூறியுள்ளார் செலென்ஸ்கி.

நோட்டோ உக்ரைனைச் சேர்த்துக்கொள்ளத் தயாராக இல்லை என்றும். உக்ரைனில் சர்ச்சைகள் இருப்பதனால் நோட்டோ நாடுகள் அஞ்சுகின்றன, அவை ரஷ்யாவுக்குப் பயப்படுகின்றன என்றும் செலென்ஸ்கி தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார்.

செலென்ஸ்கி

Ukraine : 9/11 இரட்டை கோபுர தாக்குதலுடன் ஒப்பிட்ட உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி

NATO

NATO

NewsSense

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இது ரஷ்ய பொருளாதாரத்தை பாதித்தலும், தாக்கு தலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவில்லை.

மேலும், “ரஷ்யாவின் கோரிக்கை அனைத்தையும் நிறைவு செய்ய முடியது” எனவும் செலென்ஸ்கி கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான அடுத்தடுத்த பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்தன. இந்நிலையில், ரஷ்யா தலைநகர் கீவ் அல்லது கார்கீவ் , மரிபோல் என எதாவது நகரை ரஷ்யா கேட்குமாயின் உக்ரைன் அதனை அனுமதிக்காது. மக்கள் அனைவரையும் கொன்று, வெறும் நிலத்தை மட்டுமே ரஷ்யா எடுத்துக் கொள்ள முடியும் என்று செலென்ஸ்கி கூறியுள்ளார்.

கடந்த 24ம் தேதி முதல் போர் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இது வரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும், லட்சக் கணக்கில் மக்கள் அண்டை நாடுகளில் அகதியாகத் தஞ்சமடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

செலென்ஸ்கி

Ukraine - Russia War : பெரும் கடனில் ரஷ்யா; எதிர்காலம் என்னாகும்? | Podcast

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com